Published:Updated:

ரம்யா பாண்டியன் முதல் சமந்தா வரை... செலிபிரிட்டீஸின் செல்லமான செந்தில்

 கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி சுரேஷ்

மூன்றாவது கண்

``கண்களிலே பௌத்தம் பார்த்தேன்

கன்னத்தில் சமணம் பார்த்தேன்''

பார்வை மட்டும்

கொலைகள் செய்யப் பார்க்கிறேன்’’

- கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்த வரிகள் அட்சரம் பிசகாமல் பொருந்திப்போகின்றன அவர் எடுக்கும் புகைப்படங்களுக்கு!

 செந்தில்
செந்தில்

யார் அவர்?

‘கேமரா செந்தில்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்பவர் வளர்ந்துவரும் செலிபிரிட்டி போட்டோகிராபர். இவரின் கேமரா படம் பிடிக்காத வெள்ளித்திரை, சின்னத்திரை கதாநாயகிகள் சொற்பமே! சமந்தா, தமன்னா, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங், அதிதி ராவ், டாப்ஸி, இனியா, ரித்திகா சிங், வேதிகா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் முதல் ரம்யா பாண்டியன், டிடி, நட்சத்திரா, யாஷிகா, சாக்‌ஷி, அதுல்யா ரவி, பார்வதி நாயர், அம்ரிதா ஐயர் வரை இவர் எடுத்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகத் தவறியதில்லை.

கதாநாயகிகள், மாடல்கள் மற்றும் இளம் பெண்களின் பேவரைட் போட்டோகிராபராக வலம்வரும் கேமரா செந்திலிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சமந்தா
சமந்தா

``ஒரு பெண், புகைப்படத்துல அழகா தெரியணும்னா ரெண்டு விஷயங்கள் கவனிக்கப்படணும். அவங்களுடைய கண்கள் மற்றும் உதடுகள். இந்த ரெண்டும் ஒத்திசைவான பாவனைகளை வெளிப்படுத்தினா மட்டும்தான், புகைப்படம் உயிரோட்டத்தோடு இருக்கும். உதடுகள் சிரிக்கும்போது கண்களும் சிரிக்கணும். கண்கள் சோகத்தை வெளிப்படுத்தினா உதடுகளும் அதை வெளிப்படுத்தணும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அலங்கார உடைகள், நகைகள், ஒப்பனை மட்டும் ஒருவரை அழகாகக் காட்டாது. அந்த பாவனைகளை வரவைப்பது போட்டோகிராபர் கையிலதான் இருக்கு.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

இவை எல்லாத்தையும்விட முக்கியமானது, ரசனை. போட்டோ ஷூட்டின்போதும் சரி, அந்த போட்டோக் களை எடிட் பண்ணும்போதும் சரி இசைஞானி இளையராஜா சார் பாடல்களைக் கேட்டுக்கிட்டே இருப்பேன். நான் எடுக்குற போட்டோஸ் எல்லாம் நல்லா வர்றதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்’’ - ரசனையோடு சொல்லும் செந்தில், கதாநாயகிகள் சிலருக்கு போட்டோஷூட் செய்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ரம்யா பாண்டியன் முதல் சமந்தா வரை... செலிபிரிட்டீஸின் 
செல்லமான செந்தில்

``மூவி புரொமோஷனுக்காகத் தமன்னா சென்னை வந்திருந்தாங்க. அன்னிக்கு அவங்க புதுசா ஒரு காஸ்டியூம் டிரை பண்ணிருந்ததால சும்மா ரெண்டு போட்டோஸ் மட்டும் எடுத்துத் தரச் சொல்லி அவங்க பி.ஆர்.ஓ என்கிட்ட கேட்டாங்க. தமன்னா அதிகமா போட்டோஸ் எடுக்க மாட்டாங்க. ஆனா, நான் போட்டோ எடுக்குறதைப் பார்த்துட்டு அவங்களே நிறைய போஸ் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

தமன்னா
தமன்னா

சமந்தாவை போட்டோஷூட் பண்ண வாய்ப்பு கிடைச்சுது. 10 நிமிஷத்துல, அந்த இடத்துல கிடைச்ச லைட்டை மட்டும் ஃபோகஸ் பண்ணி எடுத்தேன். அந்த போட்டோஸ் எல்லாம் தனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சமந்தா சொன்னாங்க.

டிடி
டிடி

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, லைட் பிங்க் கலர் புடவையில ஊஞ்சல்ல உட்காந்திருக்கிற மாதிரி நான் எடுத்த போட்டோ செம வைரல். ஆனந்த விகடன் பேட்டிக்குக் கூட அந்தப் படங்களைத்தான் கொடுத்திருந்தாங்க.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

பிக் பாஸுக்குப் போறதுக்கு முன்னாடி, பிளாக் கலர் டிரஸ்ல ரம்யா பாண்டியனுக்கு ஒரு போட்டோஷூட் பண்ணினோம். சமீபத்துல அவங்க பண்ணின போட்டோ ஷூட்லேயே அதிக லைக்ஸ் இந்த போட்டோஸுக்குதான்!’’ அனுபவங்கள் சொல்லி முடித்தவர் அசத்தலான மெசேஜும் வைத்திருக்கிறார்.

‘‘நாம எடுக்குற போட்டோக்களோட தரம் கேமராவைப் பொறுத்தது அல்ல. போட்டோகிராபரோட பார்வையைப் பொறுத்தது. சாதாரண மொபைல்ல கூட சூப்பரா போட்டோ எடுக்கலாம். போட்டோகிராபர் கண்களைவிடவா சிறந்த கேமரா இருந்துட முடியும்?”