Published:Updated:

மூன்றாவது கண்: அடர்ந்த காடு, கும்மிருட்டு, மரத்தைச் சூழ்ந்த மின்மினிப்பூச்சிகள்

பறவைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பறவைகள்

விருது வாங்கித்தந்த ‘வாவ்’ மொமென்ட்!

2020-ம் ஆண்டின் காட்டுயிர் புகைப்படக் கலைஞர் விருதுக்கான போட்டியில் (Wildlife Photographer of the Year) ‘அதிகம் பாராட்டப்பட்ட காட்டுயிர் புகைப்பட'த்துக்கான விருதை வென்றுள்ளார் 23 வயது ஐஸ்வர்யா ஸ்ரீதர். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண்மணி இவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
 ஐஸ்வர்யா ஸ்ரீதர்
ஐஸ்வர்யா ஸ்ரீதர்

ஒவ்வோர் ஆண்டும் காட்டுயிர் புகைப்படக் கலைஞர் விருதுக்கான போட்டி நடைபெறும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த காட்டுயிர் புகைப்படக்கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் புகைப்படங்களை அனுப்பிவைப்பார்கள். அவற்றிலிருந்து சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்படும். போட்டியின் முடிவு லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வெளியிடப்படும். இந்த முறை நடைபெற்ற காட்டுயிர் புகைப்படக் கலைஞர் விருதுக்கான போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஸ்ரீதரின் ‘லைட்ஸ் ஆஃப் பேஷன் (Lights of Passion)’ என்று தலைப்பிடப்பட்ட புகைப்படம் 2020-ம் ஆண்டின் ‘அதிகம் பாராட்டப்பட்ட காட்டுயிர் புகைப்பட'மாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

மூன்றாவது கண்: அடர்ந்த காடு, கும்மிருட்டு, மரத்தைச் சூழ்ந்த மின்மினிப்பூச்சிகள்

காட்டில் ஓர் இரவுப்பொழுதில், நட்சத் திரங்கள் நிறைந்த கருநீல வானத்தைப் பின்புலமாகக் கொண்ட ஒரு மரத்தை லட்சக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் சூழ்ந்திருக்கும்படி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புகைப்படம் காண்போரை வசியம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. விருது வென்ற புகைப்படக் கலைஞர் ஐஸ்வர்யா ஸ்ரீதரை தொடர்புகொண்டோம். மும்பையில் வசிக்கும் இவரின் பூர்வீகம் பாலக்காடு.

மூன்றாவது கண்: அடர்ந்த காடு, கும்மிருட்டு, மரத்தைச் சூழ்ந்த மின்மினிப்பூச்சிகள்

``இந்தப் போட்டி, 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, 18 வயதுக்கும் மேற்பட்டவர் களுக்கென இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் அதிகம் பாராட்டப்பட்ட வைல்டு லைஃப் புகைப்படத்துக்கான விருது எனக்குக் கிடைச்சிருக்கு. இந்தப் போட்டிக்காக, நான் எடுத்த ஐந்து புகைப்படங்களைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருந்தேன். இதில் மூன்று புகைப்படங்கள் டாப்-100 வரைக்கும் வந்தன. அதுல ‘லைட்ஸ் ஆஃப் பேஷன்’ என்ற புகைப்படத்துக்கு விருது கிடைச்சிருக்கு. புகைப் படத்துல உள்ள இடம் மும்பையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில இருக்கு. குறிப்பிட்ட ஒரு காலத்துல மட்டும்தான் அங்கே மின்மினிப் பூச்சிகள் வரும். முழுவதும் இருட்டான அந்த இடம் நட்சத்திரங்கள் மற்றும் மின்மினிப் பூச்சிகளோட வெளிச்சத்தால் ஜொலிக்கும். மின்மினிப் பூச்சிகள் பறக்கும்போது அந்தப் புகைப்படத்தை எடுக்கணும். இதுதான் என் பிளான். அதுக்காகத் தினமும் அந்த இடத்துக்குப் போவேன். சில நேரங்கள்ல ஃபோகஸ் சரியா வராது. கிட்டத்தட்ட ஒரு வருஷம் முயற்சி செய்து எடுத்த புகைப்படம் இது. எனக்கு சின்ன வயசுல இருந்தே காடுகள், வன விலங்குகள் மேல அதீத ஆர்வம். அப்பா வனத்துறையில வேலை பார்த்துட்டு இருந்தார். அவர் காட்டுக்குள்ள போறபோது நானும் வருவேன்னு அவர் வாங்கிக்கொடுத்த கேமராவுடன் போவேன். சோறு, தண்ணி இல்லாம காட்டுக்குள்ள கேமராவோட சுத்தியிருக்கேன். காடுகளோட இயற்கை வனப்பையும் வனவிலங்குகளையும் படம் பிடிக்குறதுக்காக இந்தியா முழுக்க நிறைய வனப்பகுதிகளுக்குப் போயிருக்கேன். வனம் மற்றும் வனவிலங்குகள் சார்ந்த ஆவணப் படங்களும் எடுக்கறேன். அழிஞ்சிட்டுவரும் இனமான ‘சிங்கவால் குரங்கு’ பற்றிய ஓர் ஆவணப் படம் எடுக்கும் முயற்சியில் அடுத்து இறங்கியிருக்கேன்” என்பவர், பெண்கள் அதிக எண்ணிக்கையில் இந்தத் துறைகளுக்குள் அடியெடுத்து வைக்க அழைப்பு விடுக்கிறார்.

மூன்றாவது கண்: அடர்ந்த காடு, கும்மிருட்டு, மரத்தைச் சூழ்ந்த மின்மினிப்பூச்சிகள்

“ஆர்வம் இருந்தாலும் சில பெண்கள் ‘இது நமக்குப் பாதுகாப்பானது இல்ல; இதுல நம்மளால ஜெயிக்க முடியாதுன்னு’ நினைச்சுக்கிட்டு உள்ளே வரத் தயங்குறாங்க. எல்லாத் துறைகளையும்போல வனத் துறையிலும் சவால்களும் போட்டிகளும் இருக்கு. உண்மையான ஆர்வமும், முழுமை யான முயற்சியும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றிபெற முடியும்.

  ‘லைட்ஸ் ஆஃப் பேஷன்’
‘லைட்ஸ் ஆஃப் பேஷன்’

வைல்டுலைஃப் சார்ந்த துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்ணை, பெற்றோர் தடுக்கக் கூடாது. காடு, காட்டுயிர் மற்றும் இயற்கையுடைய பாதுகாப்பில் பெண்களின் பங்கு முக்கியமானது. கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வர்ற வனத்தையும், வன உயிர்களையும் காப்பாற்றிப் பாதுகாப்பதில் பெண்களின் சேவை இன்றியமையாதது” என்கிறார் இந்த வனதேவதை.