Published:Updated:

“சமூகத்தைப் புரிந்துகொள்ள புகைப்படங்கள் எடுக்கிறேன்!”

புகைப்படம்
பிரீமியம் ஸ்டோரி
புகைப்படம்

10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றத் தொடங்கினேன். அதில்தான் பெரிய அனுபவம் கிடைத்தது. நான் எடுக்கும் புகைப்படங்களைப் போட்டிக்கு அனுப்பினேன்.

“சமூகத்தைப் புரிந்துகொள்ள புகைப்படங்கள் எடுக்கிறேன்!”

10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றத் தொடங்கினேன். அதில்தான் பெரிய அனுபவம் கிடைத்தது. நான் எடுக்கும் புகைப்படங்களைப் போட்டிக்கு அனுப்பினேன்.

Published:Updated:
புகைப்படம்
பிரீமியம் ஸ்டோரி
புகைப்படம்

இயற்கையை, சமூகத்தை, உயிரினங்களை ஆவணப்படுத்தும் புகைப்படக் கலையில், உலகின் புகழ்பெற்ற ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ விருதைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார், மதுரையைச் சேர்ந்த செந்தில்குமரன்.

“மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முடித்தேன். இந்துஸ்தான் ஏரோனாட்டிகலில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை கிடைத்தும், போட்டோகிராபி மீது இருந்த ஈடுபாடு காரணமாக வேலைக்குச் செல்லவில்லை. நான் போட்டோகிராபிக்கு என்று தனியாகப் படிக்கவில்லை. கல்லூரி படிக்கும்போது ஓவியப் போட்டியில் கிடைத்த ஆயிரம் ரூபாயை வைத்து எலெக்டோ 35 கேமரா வாங்கி, படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

செந்தில்குமரன்
செந்தில்குமரன்

வளர வளர இதுதான் நம் வாழ்க்கை என்று புகைப்படத்துறைக்குள் முழுமையாக வந்தேன். தொழில்ரீதியிலான போட்டோகிராபியில் இருந்து டாக்குமென்ட் போட்டோகிராபி மீது ஆர்வம் வந்தது. 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றத் தொடங்கினேன். அதில்தான் பெரிய அனுபவம் கிடைத்தது. நான் எடுக்கும் புகைப்படங்களைப் போட்டிக்கு அனுப்பினேன். லண்டனில் உள்ள ஜியாகரபிகல் சொசைட்டியின் விருது கிடைத்தது. அதன் பின்பு குலசேகரபட்டினம் தசரா விழாவை எடுத்ததற்காக 2006-ல் யுனெஸ்கோ விருது கிடைத்தது. புகைப்படம் மூலம் கதை சொல்வது என்ற முடிவுக்கு வந்து, திருநங்கைகள், ஜல்லிக்கட்டு, மலக்குழி இறங்குவோர் பிரச்னைகள் என்று எடுக்க ஆரம்பித்தேன். இப்படி 23 புகைப்படக் கதைகளைப் பதிவுசெய்துள்ளேன். அதன் பின்புதான் வைல்டு லைஃப் போட்டோகிராபியில் ஆர்வம் ஏற்பட்டு அதன் மூலம் பழங்குடி மக்களின் பிரச்னைகள், விலங்குகளின் பிரச்னைகளை ஸ்டோரி செய்ய ஆரம்பித்தேன்.

“சமூகத்தைப் புரிந்துகொள்ள புகைப்படங்கள் எடுக்கிறேன்!”

போட்டோ எடுப்பது அழகியல், மகிழ்ச்சி, விருதுக்காக என்பது மாறி, சமூகத்தைப் புரிந்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பாக அமைந்துவிட்டது’’ என்கிறார் செந்தில்குமரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism