Published:Updated:

இதுதான் பெ(ஸ்)ட் போட்டோகிராபி

போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
போட்டோகிராபி ( Petfinder )

- எஷிதா பிரசன்னா

இதுதான் பெ(ஸ்)ட் போட்டோகிராபி

- எஷிதா பிரசன்னா

Published:Updated:
போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
போட்டோகிராபி ( Petfinder )

நடிகை குஷ்பூ வீட்டு நாய்க்குட்டியின் பெயர் லியோ சுந்தர். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. செல்லப்பிராணிகளை வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்காதது மட்டும்தான் மிச்சம். மற்றபடி குஷ்பூ மாதிரி அவற்றுக்கு இனிஷியல் சேர்ப்பது முதல் அவற்றுக்குப் பிறந்தநாள். வளைகாப்பு நடத்துவதுவரை, அந்த ஜீவன்களையும் வீட்டு உறுப்பினர் களாகவே பாவிக்கிற மனநிலை பரவலாகி வருகிறது. அதன் நீட்சிதான் பெட் போட்டோ கிராபி.

புரொஃபஷனலான போட்டோகிராபரை வைத்து, தங்கள் வீட்டுச் செல்லப்பிராணிகளை போட்டோஷூட் செய்கிற டிரெண்ட் அதிகரித்து வருகிறது,

எஷிதா பிரசன்னா... சென்னையின் முக்கியமான பெட் போட்டோகிராபர். வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த பெட் போட்டோகிராபியை முதன்முதலில் சென்னைக்கு அறிமுகப்படுத்தியவர் எஷிதா.

இதுதான்  பெ(ஸ்)ட் போட்டோகிராபி

நாய், பூனைகள் மட்டுமன்றி, பறவைகள், கினி பிக் எனப்படும் பன்றி இனம் என எல்லா வற்றுக்குமான போட்டோகிராபர்.

‘‘சொந்த ஊர் மைசூர். ஆனாலும், பல வருஷங்களா சென்னையிலதான் இருக்கேன். விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சபோது போட்டோகிராபி அதுல ஒரு சப்ஜெக்ட். அப்ப ஏற்பட்ட ஆர்வம் அதிகமாகி, போட்டோகிராபியில போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சேன். ஆர்கிடெக்ச்சுரல் போட்டோகிராபியும் புராடக்ட் போட்டோ கிராபியும் பண்ணிட்டிருந்தேன். பில்டிங், ஹாஸ்பிட்டல்னு கட்டடங்களை போட்டோ எடுத்திட்டிருந்தேன். பெரிய பெரிய கட்டடங்களை மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாதுனு நடு ராத்திரியில போட்டோஷூட் பண்றது, பாதி கன்ஸ்ட்ரக்‌ஷன் முடிஞ்ச நிலையில உயரமான பகுதிகள்ல ஏறி எடுக்கிறதுனு உடலளவிலும் மனசளவிலும் ரொம்பவே சவாலான வேலை இது. தவிர, நேரம் கிடைக்கிறபோது வெடிங் போட்டோகிராபியும் பண்ணிட்டிருந்தேன்...’’ அறிமுகம் சொல்பவர், அநியாயத்துக்கு பெட் லவ்வராம். அந்த லவ்தான் இன்று அவருக்கான அடையாளமாகவும் மாறி யிருக்கிறது.

இதுதான்  பெ(ஸ்)ட் போட்டோகிராபி

‘‘8 வருஷங்களுக்கு முன்னாடி ‘டெயில்ஷாட்ஸ்’ என்ற பெயர்ல வளர்ப்புப் பிராணிகளுக்கான போட்டோகிராபியை ஆரம்பிச்சேன். என்னுடைய முதல் பெட் போட்டோஷூட் 2013-ம் வருஷம் செப்டம்பர் மாசம் நடந்தது. 1990 ரூபாய்க்கு மூணு நாய்க்குட்டிகளை வெச்சுப் பண்ண அந்த ஷூட், முதல்ல கொஞ்சம் பதற்றமாதான் இருந்தது. ஆனா, அடுத்தடுத்த போட்டோஷூட்ல எனக்கும் பெட்ஸுக்கும் ஒருவித கனெக்ட் ஏற்பட ஆரம்பிச்சது. பிடிச்ச வேலைதான். ஆனாலும் பெட் போட்டோகிராபியிலும் சவால்கள் இருக்கும். பெட் போட்டோகிராபினு ஒரு கான்செப்ட் இருக்குனு மக்களுக்குத் தெரிய வந்ததும் ரொம்ப சந்தோஷப்ப ட்டாங்க. நல்ல வரவேற்பு இருந்தது. ஆனா, காலப்போக்குல கேமராவும் காஸ்ட்லியான மொபைலும் இருக்கிற எல்லாரும் போட்டோ எடுக்க ஆரம்பிச்சதால வரவேற்பு குறைய ஆரம்பிச்சது. அதை மாத்த போட்டோகிராபியில புதுசா என்னவெல்லாம் பண்ணலாம்னு நிறைய விஷயங்களை யோசிக்கிறேன், முயற்சி பண்றேன். அப்படிப் பண்ணின ஒரு முயற்சிதான் காலண்டர் புராஜெக்ட்.

இதுதான்  பெ(ஸ்)ட் போட்டோகிராபி

ஒவ்வொரு வருஷக் கடைசியிலும் அடுத்த வருஷத்துக்கான காலண்டர் பண்ணுவேன். ஆறு மாசத்துக்கு முன்னாடியே அதை அறிவிச்சிடுவேன். பெட்ஸை வெச்சு காலண்டர் பண்ண ஆசைப்படுறவங்க என்னை அணுகுவாங்க. அந்த பெட்ஸை போட்டோஸ் எடுத்து எக்ஸ்க்ளூசிவ் காலண்டர் ரெடி பண்ணித் தந்திட்டிருக்கேன். வளர்ப்புப் பிராணிகள் எல்லாமே அழகுதான்.குறிப்பா, நாய்க்குட்டிகள். நாய்களின் அதிகபட்ச ஆயுள்காலம் 12 வருஷங்கள். அந்த நாயுடனான அனுபவங்களை நினைவுகளா பத்திரப்படுத்தி வைக்க நினைக்கிற வங்க போட்டோஷூட் பண்ணித்தரச் சொல்லிக் கேட்பாங்க. இது அவங்களுடைய ஆசைக்காகப் பண்றது. மத்தபடி என் பார்வைக்கு தெரு நாய்கூட பேரழகுதான். டிராவல் பண்றபோது என் கண்கள்ல படற தெருநாய்களையும் போட்டோஸ் எடுக்கிறதுல கிடைக்கிற ஆத்ம திருப்தி வேற லெவல்’’ - ஆத்மார்த்த மாகச் சொல்பவர், பெட் போட்டோ ஷூட்களின் அனுபவங்கள் பகிர்கிறார்.

இதுதான்  பெ(ஸ்)ட் போட்டோகிராபி

‘‘ஒவ்வொரு பெட்டும் ஒவ்வொரு மாதிரி. சிலது சொன்ன பேச்சை அப்படியே கேட்கும். சிலது சுத்தமா அடங்காது. சிலது ஓரிடத்துல உட்காராம ஓடிட்டே இருக்கும். மனுஷங்களுக்குச் சொல்ற மாதிரி அதுங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. இதையெல்லாம் மீறி, சில நேரம் நாம எதிர்பார்க்காத போது பிரமாதமான ஷாட்ஸ் கிடைக்கும். நாம சொல்லாமலேயே அது தானா ஏதாவது பண்ணிட்டிருக் கும். அது ரொம்ப அழகா இருக்கும். பெட் லவ்வரா எனக்கு அதுங்களோட உணர்வுகள் ஓரளவுக்குப் புரியும். அதுங்களுக்கும் ஸ்ட்ரெஸ், பயம், கோபம்னு எல்லா உணர்வுகளும் உண்டு. அந்த உணர்வு மேலோங்கும் போது வேற மாதிரி நடந்துக்கும். அந்த உளவியலையும் பாடி லேங்வேஜையும் புரிஞ்சுகிட்டுதான் போட்டோஷூட் பண்ணணும்.எக்காரணம் கொண்டும் அதுங்களை வற்புறுத்தவோ, எல்லையை மீறவோ கூடாது. பேச முடியாதுங்கிறதால என்னை இப்படி போட்டோ எடு, அப்படி எடுன்னு சொல்லாது. ஆனா அதுங்களை எப்போ, எந்த ஆங்கிள்ல எடுத்தாலும் அழகா இருக்கும்.’’

பெட் போட்டோகிராபியே பெஸ்ட் போட்டோகிராபி என்கிறது எஷிதாவின் மெசேஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism