சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“அழகான போட்டோ ஷூட்டுக்கு இளையராஜாவும் ஒரு காரணம்!”

ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷிவானி

ஒருத்தரைப் புகைப்படம் எடுக்கும்போது, இந்த பாவனைகளை அவங்க முகத்துல வர வைக்குறது ஒரு தேர்ந்த போட்டோகிராபர் கையிலதான் இருக்கு.

கவிதைகளே உயிர்பெற்று வந்தது போன்ற அழகு தேவதைகளின் புகைப்படக் கதம்பமாகக் காட்சியளிக்கிறது கேமரா செந்திலின் இன்ஸ்டா பேஜ். வளர்ந்துவரும் செலிபிரிட்டி போட்டோகிராபர் இவர். சோஷியல் மீடியாவில் கொண்டாடப்படும் கதாநாயகிகள், மாடல்களின் ஃபேவரைட் போட்டோகிராபர். செந்திலிடம் பேசினோம்.

கேமரா செந்தில்
கேமரா செந்தில்

``ஒரு பெண் புகைப்படத்துல அழகா தெரியணும்னா அதுக்கு ரெண்டு விஷயங்கள் கவனிக்கப்படணும். முதலாவது, பெண்களோட கண்கள். அடுத்தது அவங்களோட உதடுகள். கண்களும் உதடுகளும் ஒத்திசைவான பாவனைகளை வெளிப்படுத்தினா மட்டும்தான், எடுக்கப்படுற புகைப்படம் உயிரோட்டம் உள்ளதா இருக்கும். உதடுகள் சிரிக்கும்போது கண்களும் சிரிக்கணும். கண்கள் சோகத்தை வெளிப்படுத்தினா உதடுகளும் அதற்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்தணும். அலங்கார உடைகள், நகைகள், ஒப்பனைகள் மூலமா மட்டும் ஒரு பெண்ணை அழகாகக் காட்ட முடியாது. முகத்தில் வெளிப்படற பாவனைகள் ரொம்ப முக்கியம்.

ரம்யா
ரம்யா
லவ்லின், சுரக்‌ஷா
லவ்லின், சுரக்‌ஷா

ஒருத்தரைப் புகைப்படம் எடுக்கும்போது, இந்த பாவனைகளை அவங்க முகத்துல வர வைக்குறது ஒரு தேர்ந்த போட்டோகிராபர் கையிலதான் இருக்கு. ஒரு பெண், கேமராவோட குறிப்பிட்ட ஒரு கோணத்துல ரொம்ப அழகா இருப்பாங்க. அந்தக் கோணத்தைக் கண்டுபிடிக்க அவங்களை எல்லாவித போஸ்லயும் படம் பிடிக்கணும். அடுத்தது போட்டோவோட ஃப்ரேம். அது ரொம்ப அழகான இடமா இருக்கலாம். குப்பையான இடமாக்கூட இருக்கலாம். ஆனா, அதை ஃப்ரேமுக்கு உள்ள எவ்ளோ அழகாகக் கொண்டுவர்றோம்கிறது முக்கியம். அதுக்காகக் கொஞ்சம் மெனக்கெடணும்.

இந்த எல்லாத்தையும்விட முக்கியமானது, ரசனை! ஒரு பாட்டைக் கேட்கும்போது அதுல உள்ள பாடல் வரிகள், இசை அப்டின்னு ஒவ்வொன்றையும் ரசிப்போம். அதுமாதிரிதான், யாரை போட்டோ எடுத்தாலும் அவங்களோட ஒவ்வொரு அசைவையும், முக பாவனையையும் ரசிப்பேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு கலை.

அர்ச்சனா
அர்ச்சனா
பூஜா - ஜான்
பூஜா - ஜான்
திவ்யதர்ஷினி
திவ்யதர்ஷினி

இன்னொரு விஷயத்தைச் சொல்லியே ஆகணும். போட்டோஷூட் எடுக்கும்போதும் சரி, அந்தப் போட்டோக்களை எடிட் பண்ணும்போதும் சரி, இளையராஜா பாடல்களைத்தான் கேட்டுட்டிருப்பேன். நான் எடுக்குற போட்டோக்கள் எல்லாம் நல்லா வர்றதுக்கு இந்தப் பாடல்களும் முக்கிய காரணம்.

என்கிட்டே போட்டோஷூட் பண்றவங்களோட உடைகளையும் ஒப்பனையையும் பெரும்பாலும் நானேதான் தேர்ந்தெடுப்பேன். ஒருத்தரோட உடல்வாகு, முக அமைப்புக்குத் தகுந்த மாதிரி இந்த ரெண்டையும் தேர்வு செய்யணும். இல்லைன்னா போட்டோக்கள் சரியா வராது. ஒரு பெண்ணை போட்டோஷூட் பண்ணும்போது அவங்க உடை, ஒப்பனை, ஃப்ரேம் பேக்ரவுண்ட் எல்லாம் பொருந்தி வந்துட்டுதுன்னா என்னால கேமராவைக் கீழ வைக்கவே முடியாது. மணிக்கணக்கா இருநூறு, முந்நூறுன்னு போட் டோக்கள் எடுத்துட்டே இருப்பேன். போட் டோஷூட் பண்றவங்க, நான் எடுத்துக் கொடுக்குற போட்டோக்களை சோஷியல் மீடியாவுல பதிவிடும்போது, அது மூலமா அவங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கணும். இது மட்டும்தான் என்னோட ஆசை'' என்ற செந்திலிடம், சமீபத்தில் அவர் செய்த வைரல் போட்டோ ஷூட்கள் குறித்துக் கேட்டேன்.

``ஃபரீனாவுக்கு நிறைய போட்டோஷூட் பண்ணிக் கொடுத்தி ருக்கேன். அதுல ரொம்ப ஸ்பெஷல் அவங்க பிரெக்னன்சி போட்டோ ஷூட். ஃபரீனா எனக்கு போன் பண்ணி, தான் கர்ப்பமா இருக்குற செய்தியைச் சொல்லி ஒரு பிரெக்னன்சி போட் டோஷூட் பண்ணணும்னு சொன்னாங்க. பிளாக் கலர் புடவையில் ரொம்ப சிம்பிளான லுக்ல அந்தப் போட்டோஷூட்டை எடுத்துக் கொடுத்தேன்.

நட்சத்ரா
நட்சத்ரா
பிரக்யா
பிரக்யா

சைத்ரா ரெட்டி ரெகுலரா என்கிட்ட போட் டோஷூட் பண்ணுவாங்க. `உங்க கல்யாணத்துக்கு நான்தான் போட்டோ எடுப்பேன்'னு அடிக்கடி அவங்ககிட்ட சொல்லி ட்டே இருப்பேன். அவங்களுக்கு மேரேஜ் முடிவானதும் ஒரு குட்டி டீம் ஹைதராபாத் கிளம்பிப் போனோம். நாலு நாள் அங்கேயே தங்கியிருந்து நலங்கு, மெஹந்தின்னு மேரேஜ் ஃபங்ஷனை முழுக்க கவர் பண்ணினோம்.

நட்சத்ராவுக்கு என்கேஜ்மென்ட் ஆனதும் அவங்க பார்ட்னர் கூட சேர்த்து ஒரு போட்டோஷூட் பண்ணிக் கொடுத்திருந்தேன். அவுட்டோர் போட்டோஷூட். லைட்டிங் நல்லா இருந்ததால போட்டோக்கள் ரொம்பப் பிரமாதமா வந்திருந்தது. ரெண்டு பேரும் செம ஹேப்பி. ஷிவானிக்கு எடுக்குற பெரும்பாலான போட்டோஷூட் அவங்க வீட்டிலேயேதான் நடக்கும். ஆனா போட்டோக்களைப் பார்க்கறதுக்கு, எல்லாமே அவுட் டோர்ல ஷூட் பண்ணுன மாதிரி இருக்கும். அதுக்கு ஏற்ற மாதிரி இடங்களை செட் பண்ணி எடுப்பேன்.

தர்ஷா குப்தாவுக்கும் அவங்க வீட்டிலேயே ஒரு போட்டோஷூட் பண்ணியிருந்தேன். பிளாக் கலர் புடவையில் கொஞ்சம் வித்தியாசமான லுக்ல இருந்தாங்க. ரம்யாவை எனக்கு ரொம்ப நாளாவே தெரியும். அவங்க வீட்டுல நடக்குற எல்லா விசேஷங்களுக்கும் நான்தான் போட்டோ எடுப்பேன். அவங்களுக்கும் நிறைய போட்டோஷூட் பண்ணிக் கொடுத்திருக்கேன்.

பூஜா-ஜான் கப்புள் போட்டோஷூட் சோசியல் மீடியாவுல நல்ல ஹிட். `சார்பட்டா பரம்பரை'யில் `வேம்புலி' கேரக்டர்ல நடிச்சிருந்தார் ஜான். இந்த ஓணத்துக்கு ஒரு தம்பதி போட்டோஷூட் எடுக்கச் சொல்லியிருந்தாங்க. எடுத்துக்கொடுத்தேன். `உங்க கேமராவுல ஏதோ மேஜிக் இருக்கு'ன்னு ரெண்டு பேரும் பாராட்டினாங்க.

ஷிவானி
ஷிவானி
கேப்ரில்லா
கேப்ரில்லா
சைத்ரா ரெட்டி
சைத்ரா ரெட்டி

அர்ச்சனாவுக்கு வெளிர் மஞ்சள்-பச்சை கலர் பாவாடை தாவணியில எடுத்த போட்டோஷூட்தான் நல்ல ரீச் கொடுத்தது. சோஷியல் மீடியாவுல அவங்க ரசிகர்கள் இந்த ஸ்டில்லைக் கொண்டாடினாங்க.

`லாக்டௌன் காதல்'ங்குற வெப் சீரிஸ் மூலமா பிரபலமானவங்க பிரக்யா. அவங்களை நீலநிறத் தாவணியில் ஒரு போட்டோஷூட் பண்ணினோம். அந்தப் போட்டோஷூட்டுக்குப் பிறகு சில முன்னணி நடிகர்களோட படங்கள்ல நடிக்க வாய்ப்புகள் வர்றதா எனக்கு போன் பண்ணிச் சொன்னாங்க.

டிடி மேமுக்குப் பெரும்பாலான போட்டோஷூட் நான்தான் பண்ணுவேன். அவங்களுக்கு நான் எடுக்குற போட்டோக்கள் மேல எப்போவுமே தனிப் பிரியம் உண்டு. சமீபத்துல ஓணம் புடவையில் ஒரு போட்டோஷூட் பண்ணியிருந்தோம். ஐஸ்வர்யாவுக்கு சமீபத்துல எடுத்த போட்டோஷூட் செம வைரல். `நீங்களும் நானும் சேர்ந்தா எப்போதும் டிரெண்டிங்தான் செந்தில்'னு விளையாட்டா சொல்வாங்க.

ஐஸ்வர்யா மேனன்
ஐஸ்வர்யா மேனன்
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா

விஜி சந்திரசேகர் மேடத்தின் பெண்கள் லவ்லின், சுரக்‌ஷா ரெண்டு பேரையும் பாவாடை தாவணியில் டிரெடிஷனல் லுக்ல போட்டோ எடுத்துதரச் சொல்லிக் கேட்டிருந்தாங்க. அவங்க கேட்ட மாதிரி ஒரு ஷூட் பண்ணினோம்'' என்று சொல்லிக்கொண்டே போகும் செந்தில், பலரின் மோஸ்ட் வாண்டட் போடோகிராபர்.

நீங்க தொட்டதெல்லாம் ஹிட்டு!