Published:Updated:

கேமராவை விட முக்கியம், பார்வை! - ‘Flash’back கண்மணி

போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
போட்டோகிராபி

மூன்றாவது கண்

கேமராவை விட முக்கியம், பார்வை! - ‘Flash’back கண்மணி

மூன்றாவது கண்

Published:Updated:
போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
போட்டோகிராபி

தாநாயகிகள் மற்றும் மாடல்களின் ஃபேவரைட் போட்டோகிராபராக கவனம் ஈர்க்கிறார் கண்மணி சீதா பழனியப்பன். இன்ஜினீயரிங் என்பது இவர் படித்து வாங்கிய பட்டம். போட்டோகிராபர் என்பது விரும்பி ஏற்றுக்கொண்ட அடையாளம். இனி கண்மணி அன்போடு...

கண்மணி
கண்மணி

``எனக்கு சொந்த ஊரு காரைக்குடி. வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையிலதான். பத்தாவது படிச்சுக்கிட்டு இருந்தப்போ சிம்லா, மணாலிக்கு டூர் போனோம். அப்போ குட்டி கேமரா வாங்கி என்னோட ஃபேமிலில உள்ளவங்களையும் டூர் போன இடத்தின் அழகான காட்சிகளையும் போட்டோ எடுத்தேன். டூர் போறப்போ போட்டோ எடுக்கணுமேன்னு வாங்குனதுதான் அந்த கேமரா. டூர் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகு என்னைச் சுத்தி இருந்த, எனக்குப் பிடிச்ச எல்லா விஷயங்களையும் அந்த கேமரா மூலமா பார்க்க ஆரம்பிச்சேன். அப்போதான் போட்டோகிராபி மேல ஆர்வம் வர ஆரம்பிச்சது. ப்ளஸ் டூ முடிச்சதும் பெற்றோர் விருப்பப்படி இன்ஜினீயரிங்ல சேர்ந்தேன்.

 அஞ்சனா
அஞ்சனா

என்கிட்டே இருந்த கேமராவுல நல்ல குவாலிட்டியான போட்டோஸ் எடுக்க முடியல. அதனால புதுசா ஒரு கேமரா வாங்கித் தரச் சொல்லி பெற்றோர்கிட்ட கேட்டேன். ஆனா, அவங்க ‘உன் கையில என்ன இருக்கோ அதை வச்சே உன் திறமையை வளர்த்துக்கோ’ன்னு சொல்லிட்டாங்க. திடீர்னு ஒருநாள் என்னோட பிறந்த நாளைக்கு 45,000 ரூபாய் விலையுள்ள கேனான் கேமராவைப் பரிசா கொடுத்தாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினமும் காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து இன்டர்நெட் மூலமா போட்டோகிராபி யோட நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். நான் இரண்டாம் ஆண்டு படிச்சுக்கிட்டு இருந்தப்போ போட்டோகிராபி தொடர்பான ஒரு போட்டியில கலந்து கிட்டேன். விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் உட்பட நிறைய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதுல கலந்துகிட்டாங்க. இதுல ஒரு லெவல்கூட என்னால தாண்ட முடியாதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, ஃபைனல் லிஸ்ட்ல என் பெயர் இருந்ததை நம்பவே முடியல. அதுவும் ஃபைனலுக்கு செலக்ட் ஆன மாணவர்களில் நான் மட்டும்தான் பெண். எல்லாரும் விலையுயர்ந்த விதவிதமான கேமராவோட ஃபைனலுக்கு ரெடியாகிட்டு இருந்தாங்க. என்கிட்ட இருந்ததோ பேஸிக் லெவல் கேமராதான். ஆனா, போட்டோகிராபிக்கு, ‘கேமராவைவிடவும் கேமராவுக்குப் பின்னாடி இருக்குற பார்வை ரொம்ப முக்கியம். அந்தப் போட்டியில எனக்கு இரண்டாவது பரிசு கிடைச்சுது. அப்போதான் போட்டோகிராபியில என்னாலேயும் சாதிக்க முடியும்னு நம்பிக்கை வந்தது.

 காயத்ரி சங்கர்
காயத்ரி சங்கர்

இன்ஸ்டாவுல `கண்மணி போட்டோ கிராபி’னு ஒரு பக்கத்தைத் தொடங்கி நான் எடுக்கிற படங்கள் எல்லாத்தையும் பதிவிட்டு வந்தேன். இன்ஜினீயரிங் முடிச்சதும் ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். ஒரு வருஷத்துல அது எனக்கான பாதை இல்லைன்னு புரிய ஆரம்பிச்சதும் வேலையை விட்டுட்டு முழுநேரமும் போட்டோகிராபியில் ஈடுபட ஆரம்பிச்சிட்டேன்.

 '96' கெளரி...
'96' கெளரி...

ஆரம்பத்துல என்னைச் சுற்றி இருக்குற பிரபலமாகாத மனிதர்களைத்தான் போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தேன். என் இன்ஸ்டா போட்டோஸ் எல்லாத்தையும் பார்த்த சென்னையைச் சேர்ந்த மாடல் சுவேதா காய், அவங்களை போட்டோஷூட் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. ஒரு மாடலே என் போட்டோஸ் பிடிச்சுப்போய் போட்டோஷூட் எடுக்க வந்துருக்காங்கன்னு தெரிஞ்ச பிறகு, என் தன்னம்பிக்கை அளவு இன்னும் கொஞ்சம் அதிகரிச்சது.

  கயல் ஆனந்தி
கயல் ஆனந்தி

இதன் பிறகு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மூவி ஹீரோயின் காயத்ரி சங்கரை போட்டோஷூட் எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவங்களை நான் எடுத்த ஒரு போட்டோ சோஷியல் மீடியாவுல செம வைரல். அந்த போட்டோ ட்விட்டர் டிரெண்டிங்ல நாலாவது இடத்துல இருந்தது. காயத்ரி அக்காவும் நானும் செம ஹேப்பி. கவிஞர் கண்ணதாசனோட பேரன் ஆதவ் கண்ணதாசன் அண்ணா என் போட்டோஷூட் பத்தி சொன்னதால கயல் ஆனந்தியும் என்கிட்டே போட்டோஷூட் எடுத்துக்கிட்டாங்க.

வாணிபோஜன்
வாணிபோஜன்
 பவானிஸ்ரீ
பவானிஸ்ரீ

இவர்களுக்குப் பிறகு, `96' பட கௌரி, வீஜே அஞ்சனா, வாணிபோஜன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ, மாடல் சஞ்சனா நட்ராஜன் எல்லோரையும் போட்டோ ஷூட் பண்ணியிருக்கேன். பிரபலங்கள் மட்டும் இல்லாம, போட்டோவுக்கு உயிர் கொடுக்கக்கூடிய முகங்களைத் தேடித்தேடி போட்டோஷூட் பண்ணிட்டு இருக்கேன். நான் எடுக்குற போட்டோ எல்லாத்தையும், என் மனசுல தோணும் ஏதாவது கவிதை வரிகளோடு அல்லது ஏதாவது தமிழ்ப் பாடல் வரிகளோடு சேர்த்துதான் போஸ்ட் பண்ணுவேன். போட்டோகிராபியில அடுத்து உங்க பிளான் என்னன்னு கேட்டீங்கன்னா கடைசி வரைக்கும் போட்டோஸ் எடுத்துக்கிட்டே இருக்கணும். அவ்வளவுதான்!” என்று முடிக்கும் கண்மணியின் கண்களில் கேமரா ஃப்ளாஷை விஞ்சும் அளவுக்குப் பிரகாசம்!