Published:Updated:

போட்டோ தாக்கு

ரஜினி - கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி - கருணாநிதி

``ஏன்... உனக்கு சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் ஞாபகமெல்லாம் வரலையா?’’

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

ரஜினி - கருணாநிதி
ரஜினி - கருணாநிதி

Twitter

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

@parveenyunus

``ரஜினி... ஒண்ணு சொல்றேன். எனக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி, அப்புறம் இன்பநிதி...’’

@Vkarthik_puthur

``மொதல்ல சிஸ்டம் சரி இல்லைன்னே, அப்புறம் போர் வரட்டும்னே, அப்புறம் மீன் சட்டி சர்க்கரைப் பொங்கல்னே, எழுச்சி வரட்டும்னே, அப்புறம் உடம்பு சரியில்லைன்னே, இப்ப திருப்தி இல்லைங்கிறே... ஏதாச்சும் ஒண்ணைக் காரணமா சொல்லுப்பா..!”

@KLAKSHM14184257

``அரசியலுக்கு வர்றது பத்தி அடுத்து எப்போ பேசுவீங்க ரஜினி..?!’’

`` ‘அண்ணாத்த’ முடிஞ்சு அடுத்த படத்துக்குப் பூஜை போட்ட பிறகு ஐயா..!’’

@KLAKSHM14184257

`` ‘நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி’னு சொல்லிட்டு, ஒரு தடவை சொன்னதையே நூறாவது தடவையா சொல்லிட்டு இருக்கீங்களே தம்பி ரஜினி..?!’’

@San8416

``என்னப்பா, ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா உன் பேச்சை நீயே கேட்க மாட்டியாமே?’’

``ஐயோ அது நான் இல்லைங்கய்யா... முப்பது வருஷமா நானே முடிவெடுக்க முடியாம திணறிக்கிட்டிருக்கேன்!’’

Facebook

Suyambulingam Olaganathan

``உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் என்ன ஐயா?’’

`` ‘எம் மகன்’, ‘அடுத்த வாரிசு’, ‘எங்க பாட்டன் சொத்து.’ ”

Ram Aathi Narayenan

கலைஞர்: ``எங்கே விஜயகாந்த் மாதிரி நீங்களும் அரசியலுக்கு வந்துடுவீங்களோன்னு பயந்துதான், உங்க கல்யாண மண்டபத்தை இடிக்காம விட்டோம் ரஜினி!’’

பெ.பச்சையப்பன், கம்பம்

கலைஞர்: ``என் வசனத்தை உன் வாயால பேசிக் கேட்கணும்னு ஆசைப்பட்டேன். அதுவும் உன்னோட அரசியல் வருகை மாதிரியே ஆகிடுச்சு!’’

Thillai Raja

ரஜினி: ``அரசியல்னாலே எனக்கு உங்க ஞாபகம்தான் வருது!’’

கலைஞர்: ``ஏன்... உனக்கு சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் ஞாபகமெல்லாம் வரலையா?’’

Vaira Bala

``நான் ஒண்ணு சொல்றேன் ரஜினி, உங்களுக்கு அரசியல் ஒத்து வராது!’’

``அது எனக்கும் உங்களுக்கும் தெரிஞ்சு என்ன பயன்... குருமூர்த்திக்குத் தெரியலையே!”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan