Published:Updated:

பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் #DAY2 #OnTheTrailsOfVanthiyaDevan

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வழியே, பயணிக்கப்போகிறது இந்த யாத்திரை.

பொன்னியின் செல்வன்

நாள் 2

இரண்டாம் நால் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்வாமி திருக்கோயிலில் ஆரம்பித்தது.

பொன்னியின் செல்வன்
வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் #DAY2 #OnTheTrailsOfVanthiyaDevan

ராஜ ராஜ சோழனின் பெருமை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், ராஜேந்திர சோழனின் பேரனான ராஜ ராஜன் போன்றவர்களின் சிலைகளையும் நமது பயணத்தில் காண முடியும் போன்ற ஆச்சர்யங்கள் பல இருக்கின்றன. பொன்னியின் செல்வனில் வரும் குந்தவைக்கும் இங்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.

நாம் ஏற்பாடு செய்திருந்த வரலாற்று ஆர்வலர் அங்கிருக்கும் ஒவ்வொரு கல்வெட்டுகள் பற்றியும், அதில் இருக்கும் சில சொல் வடிவங்கள் பற்றியும் வாசகர்களுக்கு எடுத்துரைத்தார்.

நாள் 1

இன்று காலை ஆறு மணிக்கு வீராணம் என்னும் வீர நாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தனர் நம் வாசகர்கள். நம்முடன் இங்கிருக்கும் சசிதரண் என்னும் வரலாற்று ஆர்வலர் இந்த இடங்கள் குறித்து ஆர்வமுடன் விளக்கி வருகிறார்.

பொன்னியின் செல்வன்
வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் #DAY2 #OnTheTrailsOfVanthiyaDevan

1100 வருடங்களுக்கு முன்னர் வீராணம் ஏரியின் பெயர் என்ன தெரியுமா ?

பராந்தகப் பேரேரி

அடுத்ததாக காட்டுமன்னார் அனந்தீஸ்வரர் கோயிலுக்கு ஆயுத்தமாகி இருக்கிறார்கள் நமது வாசகர் படை.

வந்தியத்தேவன் பாதையில் விகடன் வாசகர்களுடன் தொடங்கிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம் இப்போது காட்டுமன்னார்கோயில் அனந்திஸ்வர ஆலயம். வீடியோ: எஸ்.தேவராஜன்

Posted by Vikatan EMagazine on Friday, August 2, 2019

இப்போது காட்டுமன்னார்கோயில் அனந்தீஸ்வர ஆலயத்தை அடைந்துள்ளது. இதில் இந்தக் கோயிலின் சிறப்புகள் பற்றியும் வரலாற்றுத் தரவுகள் குறித்தும் விவரிக்கப்பட்டு வருகிறது

முதல் நாள் மாலை, சிதம்பரம் கோயிலுக்கு பயணப்பட்டது விகடன் வாசகர் குழு. சிதம்பரம் கோயிலுக்கும், பொன்னியின் செல்வன் நாவலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

நேற்றைய சர்ப்ரைஸ் நிகழ்வாக இரவு தங்கும் விடுதியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அது வாசகர்களின் ஈடுபாட்டால், இரண்டு மணி நேரம் வரை சென்றது எங்களுக்கே ஆச்சர்யம் அளித்தது.

இதுபோன்ற பயணங்களில் நீங்களும் பயணிக்க வேண்டுமா ?

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்..!

பொன்னியின் செல்வன் - வரலாற்றுப் பயணம். எப்படி அமையும் இந்த யாத்திரை?

பிற்காலச் சோழர்களில் ராஜராஜன் முடிசூட்டிக்கொள்ளுமுன் நடந்த சம்பவங்களைக் கோத்துச் சொல்லப்பட்ட பெருங்கதையே பொன்னியின் செல்வன். இக்கதையில், அதன் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் உலா வந்த - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வழியே, பயணிக்கப்போகிறது இந்த யாத்திரை.

யாத்திரையில் மொத்தம் எத்தனை ஊர்கள்-இடங்கள் இடம்பெறும்?

பொன்னியின் செல்வன் கதையின் தொடக்கக் களமான வீராணம் ஏரிக்கரை முதல் கோடியக்கரை வரையிலுமாக 11 இடங்கள்.

யாத்திரை எப்போது எந்த இடத்திலிருந்து தொடங்கும், எத்தனை நாள்கள் நடைபெறும்?

ஆகஸ்டு 2 வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில், சென்னை அண்ணாசாலை- விகடன் அலுவலகத்திலிருந்து பயணம் தொடங்கும். மொத்தம் 3 நாள்கள் ( 3.8.19, 4.8.19, 5.8.19 - 3 பகல்; 4 இரவுகள்).

ஆகஸ்டு 5 அன்று இரவில் கோடியக்கரையில் நிகழ்வுகள் நிறைவடைந்து சென்னைக்கு புறப்படுகிறோம்.

எந்தெந்த நாள்களில் எந்தெந்த இடங்களைப் பார்வையிடுகிறோம்?

ஆகஸ்டு-3 (சனி): வீராணம், காட்டுமன்னார்கோவில், கடம்பூர்க் கோயில்கள், சிதம்பரம்.
ஆகஸ்டு-4 (ஞாயிறு): பழையாறை, உடையாளூர், திருப்புறம்பியம், தஞ்சை.
ஆகஸ்டு-5: பழுவூர், நாகை, கோடியக்கரை.

முதல் நாள் காணப்போகும் இடங்களின் சரித்திரச் சிறப்பென்ன?

வீராணம் ஏரி:

கதையின் தொடக்கக்களம். சோழ இளவரசன் ராசாதித்தனால் அமைக்கப்பட்ட பெரும் ஏரி. சோழர்களின் நீர் மேலாண்மைக்கான சாட்சி

காட்டுமன்னார்கோவில்:

கதைச் சம்பவத்தில் இடம்பெறும் வீரநாராயண விண்ணகரம் அமைந்திருப்பது இங்குதான். இவ்வூரிலுள்ள அனந்தேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கடம்பூர்:

சம்புவரையர்களின் மாளிகை அமைந்திருந்த இடம். கதையின் முக்கிய சம்பவங்கள் இடம்பெற்ற களம். சிற்பங்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் பெயர்போனது.

சிதம்பரம்:

சோழர்கள் முடிசூட்டிக்கொள்ளும் ஆதிஅம்பலம் இங்குள்ளது.

2-ம் நாள் காணப்போகும் இடங்களின் சிறப்பென்ன?

பழையாறை:

சோழர்களின் தலைநகரம்.

உடையாளூர்:

ராஜராஜச் சோழன் தங்கியிருந்த இடம். இங்குள்ள கயிலாசநாதர் ஆலயம் கல்வெட்டுச் சிறப்பு உடையது.

திருப்புறம்பியம்:

சரித்திரத்தை மாற்றிய பெரும்போர் நிகழ்ந்த இடம்.

தஞ்சை:

காலத்தால் அழியாத இவ்வூரின் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமா!

3-ம் நாள் காணப்போகும் இடங்களின் சிறப்பென்ன?

பழுவூர்:

சோழ சாம்ராஜ்ஜியத்தின் மாதண்டநாயகர்களாகத் திகழ்ந்த பழுவேட்டரையர்களின் தலைநகரம்.

நாகை:

கதைப்படி அருண்மொழி (ராஜராஜ சோழன்) உலாவந்த கடற்கரை நகரம்.

கோடியக்கரை:

கதையின் முக்கியப் பாத்திரமான பூங்குழலியை நினைவுகூரும் ஊர்; இங்குள்ள குழகர்கோயிலிலும் கதைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இரவு எங்கெங்கு தங்கப் போகிறோம்?

ஆகஸ்டு-2 (வெள்ளி) - பேருந்துப் பயணம்
ஆகஸ்டு-3 (சனி) - லக்ஷ்மி விலாஸ் காட்டேஜ் (காட்டுமன்னார்கோவில் அருகே)
ஆகஸ்டு-4 (ஞாயிறு) : இண்டிகோ (சுவாமி மலை அருகில்)
ஆகஸ்டு-5 (திங்கள்) : பேருந்துப் பயணம் (சென்னை நோக்கி)

பயணத்தின் ஊடேயும் தங்கும் இடங்களிலும் சிறப்பு நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?

உண்டு! வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் வழிகாட்டலுடன் அமையும் இந்தப் பயணம். மேலும், சரித்திரம் பேசுவோம், சோழர் அலங்காரம் - கலைகள் சொல்லும் கதைகள், களறியாட்டம் முதலான நிகழ்வுகளுடன் சுவாரஸ்யத்தை அள்ளித் தரப்போகிறது இந்த யாத்திரை.

எவ்வளவு கட்டணம்?

நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 13,000 (ஜி.எஸ்.டி. உள்பட).

இந்த யாத்திரைக்கு எப்படி பதிவு செய்வது?

வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம்

இந்த இணைப்பில் உங்கள் பெயர் மற்றும் தகவல் விவரங்களைக் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால், விகடன் அலுவலகத்திலிருந்து உங்களைத் தொடர்பு கொள்வார்கள்..!