Published:Updated:

விற்பனைக்கு வந்த `புஷ்பா' சேலை; குஜராத் நபரின் டிரெண்டி ஐடியா!

புஷ்பா சேலை ( Twitter Photo )

`அட, எங்கே விற்கிறது இந்த புஷ்பா சேலை' என மக்கள் தற்போது இதை ஆர்வமாகத் தேடிவருகின்றனர். இந்த சேலையை விற்று வருபவர் குஜராத்தை சேர்ந்த சரண்பால் சிங். `புஷ்பா' திரைப்படத்தில் வரும் காட்சிகளை சேலையில் டிசைன் செய்து `புஷ்பா சேலை' என சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

நீலாம்பரி சேலை, ஓவியா ஹேர்கட் என பிரபலங்களின் உடைகளையும் ஆபரணங்களையும் தேடித் தேடிப் பின்பற்றுவதெற்கென ஒரு தனிக் கூட்டமே உண்டு எனச் சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இடம் பிடித்திருக்கிறது `புஷ்பா சேலை.'

புஷ்பா
புஷ்பா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`புஷ்பா' படத்தில் அதிரடி நாயகனாக அல்லு அர்ஜுன் கலக்கி இருப்பார். வில்லனாக ஃபகத் ஃபாசில், ராஷ்மிகாவின் நடிப்பு, வைரலான சமந்தா நடனமாடிய பாடல் என ஒரு மாஸ் படத்தைக் கொடுத்திருந்தார் இயக்குநர் சுகுமார். ஹிட் அடித்த இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியது. இந்நிலையில் `புஷ்பா சேலை' தற்போது பிரபலமாகி வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`அட, எங்கே விற்கிறது இந்த புஷ்பா சேலை' என மக்கள் தற்போது இதை ஆர்வமாகத் தேடிவருகின்றனர். இந்தச் சேலையை விற்று வருபவர் குஜராத்தைச் சேர்ந்த சரண்பால் சிங். `புஷ்பா' திரைப்படத்தில் வரும் காட்சிகளை சேலையில் டிசைன் செய்து `புஷ்பா சேலை' எனச் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

புஷ்பா சேலை
புஷ்பா சேலை
Twitter Photo

இதைப் பார்த்தவர்கள், `இதோ சேலையை நான் வாங்குகிறேன்' எனச் சேலைக்கான ஆர்டரைக் கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்தச் சேலை தற்போது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதுவரையில் கிட்டத்தட்ட 3,000-க்கும் அதிகமான புஷ்பா சேலைகளைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக சரண்பால் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism