Published:Updated:

தப்பியோடிய திருடன்... டூ வீலரில் லிஃப்ட் கேட்டு சேஸ் செய்து பிடித்த பெண் காவலர்! | Viral Video

டெல்லி பெண் காவலர்

சினிமா பாணியில் திருடனை விரட்டிப் பிடித்த பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

`சிங்கத்தைக் கூண்டுல பார்த்திருப்ப... காட்டுல பார்த்திருப்ப...’ என்ற சிங்கம் சூர்யாவின் வசனத்தை நினைவுபடுத்தும் காட்சி டெல்லியில் நடைபெற்றிருக்கிறது. டெல்லியில் ஒரு திருடன் திருடிவிட்டுத் தப்பி ஓடுகிறார். அவரைப் பிடிக்க அப்போது எந்த உதவியும் இல்லாததால், அந்த வழியே வந்த ஸ்கூட்டி ஒன்றை நிறுத்தி அவசரமாக உதவி கேட்கிறார் அந்தப் பெண் காவலர்.

அந்த நபரும் பெண் காவலரை ஏற்றிக்கொண்டு வேகமாகச் செல்கிறார். குப்பையும், பள்ளம் மேடான பரபரப்பான சாலையில், விடாமல் துரத்தும் காவலர் இறுதியில் அவனைப் பிடித்து இழுத்துச் செல்லும் இந்தக் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது. தற்போது இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டுவருகிறது.