காம்கேர் கே.புவனேஸ்வரி

Connect

BIOகாம்கேர் கே.புவனேஸ்வரி எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்.பி.ஏ பட்டங்கள் பெற்றவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் ‘காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்’ என்ற ஐடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக (CEO) செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நூல்களை தமிழில் எழுதி உள்ளார். இவர் தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர் என பல்முகம் கொண்டவர். இவரது நிறுவன சாஃப்ட்வேர் தயாரிப்புகளும், அனிமேஷன் படைப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடதிட்டமாக உள்ளன. பல முறை அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்ட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பல பள்ளிகளிலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் கருத்தரங்களில் உரையாடி மாணவர்களுக்கான ஊக்கசக்தியாகவும் இருந்துவருகிறார். கம்ப்யூட்டர் தவிர, குழந்தைகள், பக்தி, இலக்கியம், ஆன்மிகம், மனிதவள மேம்பாடு பற்றிப் பல முன்னணிப் பத்திரிகைகளில் எழுதிவருகிறார். அவை சம்மந்தப்பட்ட சுயமுன்னேற்றப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு வருகிறார். நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகத் தொடங்கிய 1992-களிலேயே தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து, சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றதால், ‘தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்த முதல் தொழில்நுட்ப வல்லுநர்’ என்ற விருதைப் பெற்றுள்ளார். தன் பெற்றோரின் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினருக்கு (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் Etc.,) ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து கெளரவிக்கிறார்.

Social Interaction

0

Articles written

0

Followers

0

Comments

0

Claps