குழந்தை நல மருத்துவர் ஜெயராஜ், புதுச்சேரியிலுள்ள கூடப்பாக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர். ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் PGIMER-இன் மருத்துவ மாணவர் சங்க கௌரவ செயலாளராக, நோயாளிகள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு உரிமைகளை போராடி பெற்று தந்தார்.2020-இல் தனது MD இறுதித்தேர்வில் முதலிடம் பெற்று தமிழக மாணவர்களுக்கு பெருமை தேடிதந்தார்.
MD பயின்ற பிறகு, தான் விரும்பியபடியே தனது கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் தற்போது துணை பேராசிரியராக பணியாற்றிவருகிறார். இங்கு குழந்தை நல தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவம், பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தை நல உள்நோயாளிகள் பிரிவு, தடுப்பூசி என அனைத்து சேவைகளும் இலவசமாக கொடுக்கப்படுவதால், தனது கிராமம் உட்பட சுற்றுவட்டார கிராமத்திலுள்ள ஏழை குழந்தைகளுக்கு PGIMER-இல் தான் பயின்ற உலகத்தர குழந்தை நல மருத்துவ கல்வி வாயிலாக, சிறந்த சிகிச்சை அளிக்கும்போது, சிறுவயதில் தான் கண்ட கனவான குறைந்தபட்ச தரமான மருத்துவம் கிடைக்கப்பெறாத தனது கிராம மக்களுக்கு மிகச்சிறந்த இலவச சிகிச்சையளிக்கவேண்டுமென்ற தனது கனவு நிறைவேறியதாய் கூறுகிறார்.