பி.காம், சமூகவியல் மற்றும் இதழியலில் முதுகலை படிப்பு. முழுநேர பத்திரிகையாளராக 27 ஆண்டுகளைக் கடந்த இனிய பயணம்...
டி.வி உலகம், தினகரன், வாசுகி, குங்குமம், குங்குமம் தோழி, குங்குமம் டாக்டர் இதழ்களில் 22 வருட பணி அனுபவத்தோடு, இப்போது அவள் விகடனில் Chief Magazine Editor.
15-க்கும் மேலான புத்தகங்களின் ஆசிரியர்.
பெண்ணுலக வலிகளையும் வரங்களையும் எழுதுவதில் லயிப்பு. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஈர்ப்பு.
ஏற்கெனவே அறியப்பட்ட நட்சத்திர முகங்களை மேலும் பிரபலமாக்குவதைவிடவும் அரிதாரமற்ற, அடையாளமற்ற மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதில் அலாதி ஆர்வம்....
சிறந்த பெண் பத்திரிகையாளர்களுக்கான லாட்லி மீடியா விருதை, பிராந்திய அளவில் 3 முறையும் தேசிய அளவில் ஒரு முறையும் பெற்ற பெருமைமிகு அங்கீகாரம்.