தஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியில் பட்டம் பெற்றவர். ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் உள்ள பீப்பிள்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உழவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு, மைசூர் மத்தியப் பட்டு வாரியத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பாளராகவும், பெங்களூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் திட்ட அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
தற்போது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றுகிறார். விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்துவரும் உதயகுமார், திறன்மிகு நுண்ணுயிரியை தமிழகத்தில் பிரபலமாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்