இதழியலில் முதுகலைப் பட்டயம் முடித்து சென்னை அகில இந்திய வானொலி யில் பகுதி நேர நிருபராகத் தொடங்கிய ஊடகப் பணி. குங்குமம், குமுதம் எனப் பயணித்து, தற்போது விகடனில் தொடர்கிறது.
எழுத்தென்பது எளியவருக்கும் புரியும் விதத்தில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்..
கூடவே இன்ஃபர்மேஷன், இன்ட்ரஸ்ட்.. இந்த இரண்டும் அந்த எழுத்தில் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அரசியல் கட்டுரைகள் தொடங்கி, பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, சின்னத்திரைக் கதைகள் வரை எழுத்தின் எல்லை விரிந்திருந்தாலும், நாளும் எனக்கொரு சேதி தந்து கொண்டே இருக்கிறது இதழியல்