தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி சொந்த ஊர். 2002-ம் ஆண்டில் பத்திரிகை துறையில் நுழைந்தேன். தீம்தரிகிட, கணையாழி ஆகிய இதழ்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் 2005-ல் இணைந்து, தற்போது தலைமைப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறேன். தமிழகத்தில் இருந்து ஜம்மு- காஷ்மீர் ஶ்ரீநகர் வரை, இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் லாரிகளில் பயணம் செய்து, அந்த அனுபவங்களை மோட்டார் விகடனில் 'நெடுஞ்சாலை வாழ்க்கை' என்ற பெயரில் தொடர் எழுதி இருக்கிறேன். அது விகடன் பிரசுர புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறேன்.