திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.