திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.