பொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)

பொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)

பசுமை விகடன் இதழின் இதழாசிரியர் . சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் இயங்கிய லீசா அமைப்பு வழங்கிய 'உயிர்ச்சூழல் விவசாயம்' (Ecological agriculture) என்ற கல்வியை பயின்றவர். வன்முறையற்ற தகவல் தொடர்பு (Orientation Course on Nonviolent Communication @ Gandhi Smriti ,Ministry of Culture, Government of India.) குறித்தும் பயின்றுள்ளார். இந்தியாவில் உள்ள இயற்கை வேளாண் பண்ணைகளுக்கும் சென்று, உழவர்கள் மூலமும், ‘இயற்கை விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் மூலமும் இயற்கை வேளாண்மை குறித்த ஆக்கப்பூர்வத் தகவல்களை நிறைய அறிந்தவர். கிராமங்களில் தான் உண்மையான இந்தியா உள்ளது என்று உணர்ந்து ஊரகப் பத்திரிகையாளராக (Rural Development Journalist ) 21 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆயிரக்கணக்கான உழவர்களின் பண்ணைகளுக்கு நேரில் சென்று நேர்காணல் செய்திருக்கிறார். துணைவேந்தர்கள், வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கிராமத்து விஞ்ஞானிகள் மற்றும் வெளிநாட்டு வேளாண் வல்லுநர்கள் பலரைச்சந்தித்து, அவர்களின் ஆய்வுகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ‘நீங்கள் கேட்டவை-பாகம் 1’, ‘நீங்கள் கேட்டவை - பாகம் 2’, ‘இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை’, ‘மண்புழு மன்னாரு ’ ‘பணம் கொழிக்கும் விவசாயத் தொழில்நுட்பங்கள்’ ‘மானாவாரியிலும் மகத்தான இலாபம்’ ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி’ ‘வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்’... என பத்துக்கும் மேற்பட்ட பயனுள்ளநூல்களை எழுதியுள்ளார். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்(Naan Nammalvar Pesugiraen) என்ற தொடரை எழுதினார். 39 -பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்த அறப்பணியை பொன்.செந்தில்குமார் செய்து முடித்தார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்களில் இயற்கை வழி வேளாண்மை, ஊரக மேம்பாடு... (Sustainable agriculture, Development journalism ,Rural Development) போன்றவை குறித்து உரையாற்றியுள்ளார். தேசிய, சர்வதேச (National and International ) கருத்தரங்களில் பங்கு கொண்டு கருத்துரை வழங்கியுள்ளார். தாய்லாந்து நாட்டில் உள்ள அப்னான்’ (Asia Pacific Natural Agriculture Network- APNAN) அமைப்பு வழங்கிய பன்னாட்டு இயற்கை வேளாண்மை பயிற்சியில் (Residential Training)கலந்து கொண்டுள்ளார். அட்மினிஸ்டிரேடிவ் காலேஜ் ஆப் இந்தியா (Administrative Staff College of India- Hyderabad) வின் பயிற்சி வகுப்பில் பங்கு கொண்டுள்ளார். தாய்லாந்து, மலேசியா... போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இவரது பெற்றோர்: பொன்னம்பலம்-மல்லிகா மனைவி:தேவ.எல்லம்மாள், பள்ளி ஆசிரியர். மகன்:பொன்னகத்தீசன்.

My Best Picks
தலைமைச் செயலகம்
பொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)

`தமிழகத்தை முழு இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்றுவதில் உறுதி!' - சரியான வழியில் தமிழக அரசு

புறா பாண்டி
பொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)

நுண்ணூட்டக் கலவை இயற்கையா, செயற்கையா?

மண்புழு மன்னாரு
பொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)

தென்னைக்கு மரியாதை!மானாவாரி பகுதி பசுமையாக மாறிய கதை!

மண்புழு மன்னாரு
பொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)

விவசாயிகள் சொல்லைத் தட்டாதே!