ஆர்.பாலகிருஷ்ணன்

ஆர்.பாலகிருஷ்ணன்

‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்' என்கிற ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் பிறந்தவர். இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முறையாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற ஒரே தமிழ் இலக்கிய மாணவர். இந்தியவியல், திராவிடவியல் ஆய்வாளரான இவர், ‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அண்மையில் வெளியான இவரது 'Journey of a Civilization: Indus to Vaigai' என்ற ஆங்கில ஆய்வு நூல், 30 ஆண்டுக்கால ஆய்வுகளின் பயன். ஒடிசா மாநில அரசில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராக இரண்டு முறை பணியாற்றி 30 சட்டமன்றத் தேர்தல்களையும், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களையும் நடத்தியவர். ‘அன்புள்ள அம்மா’, ‘சிறகுக்குள் வானம்’, ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’, ‘நாட்டுக்குறள்’, ‘பன்மாயக் கள்வன்’, ‘இரண்டாம் சுற்று’, ‘குன்றென நிமிர்ந்து நில்’, ‘கடவுள் ஆயினும் ஆக’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-ல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன், தற்போது ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார்.

My Best Picks
நியாய விலைக்கலை
ச.அழகுசுப்பையா

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!

சிறுகதை
விகடன் டீம்

ஓவியன் - சிறுகதை

தமிழ் நெடுஞ்சாலை
ஆர்.பாலகிருஷ்ணன்

தமிழ் நெடுஞ்சாலை - 40 - யாதும் ஊரே...

பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் எழுப்பிய மணற்சிற்பம்
ஆர்.பாலகிருஷ்ணன்

தமிழ் நெடுஞ்சாலை - 39 - எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ...