எனது இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர். வயது 47. புதுவை மாநிலத்தின் காரைக்கால் எனது பூர்வீகம். பிரான்சில் வசிக்கும் நான், பாரீஸ் நகரில், மக்டொனால்ட் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிகிறேன். பதினென் பருவத்திலேயே பிரான்ஸ் வந்துவிட்ட போதிலும், இடைவெளி இல்லாமல் தாய் மண்ணின் நிகழ்வுகளை அறிந்துகொண்டு வருபவன் ! ஏறக்குறைய பதினாறு வயதிலிருந்து விகடன் மற்றும் ஜூனியர் விகடன் வாசகன். கால காற்றின் திசைக்கேற்ப தடம் மாறி பயணிக்கும் சருகாய் வாழ்க்கை அமைந்தாலும், ஒரு மழைக்கால இரவில் என் தந்தை என்னிடம் கொடுத்த முன் அட்டை கிழிந்த காமிக்ஸ் புத்தகத்தில் தொடங்கிய என் வாசிப்பு பயணத்தின் திசை மட்டும் இதுநாள் வரையிலும் மாறவில்லை ! தினசரி துண்டு தாளில் கொடுக்கப்படும் சூடான வடையை மறந்துவிட்டு அந்த தாளில் இருக்கும் செய்தி துணுக்குகளில் லயித்துவிடும் அளவுக்கு கண்டது அனைத்தையும் வாசிப்பவன் நான் ! ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் போன்ற எல்லைகளை கடந்த மனிதநேயத்துடன் வாழ தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருப்பவன் !