சங்கரசுப்பு மற்றும் சுந்தரியின் தனையனாக செங்கோட்டையில் பிறந்து, திருநெல்வேலி தூய யோவான் பள்ளியில் கல்வி கற்று, திருநெல்வேலி அரசுப்பொறியியல் கல்லூரியில் கட்டுமானத்துறையிலும் மற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கல்லூரியில் முதுகலை அறிவியல் தேர்ச்சி பெற்று தற்போது பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இலக்கியத்தில் பெரும் நாட்டம் உண்டு. தொல்லியல் துறையில் ஆர்வம் கொண்டு சோழ சரித்திரத்தேடலில் களப்பணி, வலைப்பூவில் கதை, கட்டுரை, விமர்சனம் என ஊடாடும் இவரின் முதல் இரண்டு புத்தகங்கள் ‘ஆச்சி’ (சிறுகதை) மற்றும் ‘இத்யாதிகள்’ (கட்டுரை தொகுப்பு) என ஜீவா படைப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. தனது விருப்பத்திற்குறிய அல்புனைவு வகையில் மூன்றாவது புத்தகமாக' ராமும் அம்ஜத்கானும் இன்ன பிறவும்' என கோதை பதிப்பகம் மூலம் தொகுத்திருக்கிறார்.