என் பெயர் நரேந்திரன் பாலகிருஷ்ணன். என் சொந்த ஊர் கோவை.
நான் ஒரு IT நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
என் எழுத்துப்பயணம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. சிறு கவிதைகள், வாசகங்கள் என எனது எண்ணங்களை எழுத்துக்கள் மூலமாக எனது படவரி [Instagram] பக்கத்தில் பகிர்ந்து வருகிறேன்.
என் தந்தை எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்தது வாசித்தல். புத்தகங்கள் வாசிப்பதை நான் பெரிதும் நேசிக்கிறேன். அவை எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது இன்றும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதை நான் மற்றவரிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
என் எழுத்துக்களை வாசிக்கும் நண்பர்களின் வாழ்வில் ஓர் சிறிய [நல்ல] மாற்றம் ஏற்பட்டாலும் முதலில் மகிழ்வது நானே!
நன்றி,