இயக்குநர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன், 'உலக சினிமா பாஸ்கரன்’ என்ற பெயரில் முகநூல், பதிவுலகம் போன்ற சமூக ஊடகங்களில் தான் பார்த்து மகிழ்ந்த உலக சினிமாக்களை அறிமுகம் செய்து வருகிறார். ‘நாணுடைமை’, ‘திறவுகோல்’ என இரு குறும்படங்களைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ‘இன்ஷா அல்லாஹ்’ எனும் திரைப்படத்தைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தான் உருவாக்கிய மூன்று படங்களின் மூலம் 12 சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 48 சர்வதேச திரைப்பட விழா அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.