கோவையை சேர்ந்த வழக்கறிஞரும், யோகா ஆசிரியருமான விஜி ராம், விகடனின் ‘அறம் செய்ய விரும்பு’ திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர்களில் ஒருவர். இந்தியாவெங்கும் பயணம் செய்து அந்தந்த ஊர்களின் சிறப்பு உணவுகள் பற்றி ‘சீக்ரெட் கிச்சன்’ நூலும், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து ‘மில்லட் மேஜிக்’ நூலும் எழுதியுள்ளார். குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கான ’குட் டச் பேட் டச்’ நூலை ‘க்ருஷ்ணி கோவிந்த்’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.