Published:Updated:

15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!

15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!
News
15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!

கேபினில் இருக்கும் 10.4 இன்ச் iSmart டச் ஸ்க்ரீன் சிஸ்டம்தான் ஹைலைட். அதில் ஆப்பிள்/ ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி, AI உடனான வாய்ஸ் அசிஸ்ட், பலவிதமான ஆப்ஸ், இன்டர்நெட் தேவைகளுக்காக சிம் கார்டு என அதிக வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த எம்ஜி இந்தியா நிறுவனம், தனது இந்திய இன்னிங்ஸை அதிரடியாகத் தொடங்கியிருக்கிறது. இந்த வருடத்தில் கார் ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஹெக்டரை, 12.18 - 16.88 லட்சம் ரூபாய் (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள்) அசத்தலான அறிமுக விலையில் இந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், மூன்றுவிதமான இன்ஜின்கள், ஐந்து கலர்கள், 11 வேரியன்ட்கள் என அறிமுகமாகியிருக்கும் இந்த மிட்சைஸ் எஸ்யூவி, `The Internet Car' என்ற அடைமொழியைக்கொண்டுள்ளது. காரின் விலையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே, 10,000-க்கும் அதிகமான புக்கிங் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. ஹெக்டர் -  வசதிகள், இன்ஜின், போட்டியாளர்கள் என்னென்ன?

இன்ஜின் - கியர்பாக்ஸ்

15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!

ஹெக்டரில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின்கள் இரண்டிலுமே, நான்கு சிலிண்டர் அமைப்பு - டர்போ சார்ஜர்,  ஆறு ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் என பொதுவான விஷயங்கள் இருக்கின்றன. இந்த எஸ்யூவியில் உள்ள 1.5 லிட்டர் (1,451சிசி) டர்போ பெட்ரோல் இன்ஜின், 143bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது ஆறு ஸ்பீடு மேனுவல் (14.16கிமீ அராய் மைலேஜ்), ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் (13.96கிமீ அராய் மைலேஜ்) என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதே இன்ஜின் 48V Mild-Hybrid அமைப்புடன் வரும்போது, ஆறு ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே உண்டு. இந்தக் கூட்டணி, வழக்கமான மாடலைவிட 12% அதிக அராய் மைலேஜைத் தருகிறது (15.81கிமீ). ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் ஆகிய மிட்சைஸ் எஸ்யூவிகளில் இருக்கும் அதே 2 லிட்டர் Multijet II டர்போ டீசல் இன்ஜின் (1,956சிசி) - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணிதான், ஹெக்டரின் டீசல் மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. இது காம்பஸைப்போலவே 170bhp பவர் - 35kgm டார்க் - 17.41கிமீ அராய் மைலேஜை வெளிப்படுத்துகிறது. 

சிறப்பம்சங்கள் & சீட்டிங் ஆப்ஷன்

15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!

கேபினில் இருக்கும் 10.4 இன்ச் iSmart டச் ஸ்கிரீன் சிஸ்டம்தான் ஹைலைட். அதில் ஆப்பிள்/ ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி, AI உடனான வாய்ஸ் அசிஸ்ட், பலவிதமான ஆப்ஸ், இன்டர்நெட் தேவைகளுக்காக சிம் கார்டு என அதிக வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதனுடன் 360 டிகிரி கேமரா, பவர் அட்ஜஸ்ட் கொண்ட முன்பக்க இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப், Heated ORVM, தானாக இயங்கும் ஹெட்லைட்ஸ் மற்றும் வைப்பர்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு கலர்களைக்கொண்ட Mood Lighting, LED லைட்டிங், க்ரூஸ் கன்ட்ரோல் எனச் சிறப்பம்சங்களில் பட்டியல் நீள்கிறது. இரண்டு காற்றுப்பைகள், ABS, EBD, ESP, BA, டிராக்‌ஷன் கன்ட்ரோல், பின்பக்க பார்க்கிங் சென்ஸார்கள், நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ், ISOFIX, முன்பக்க சீட்டுக்கான சீட் பெல்ட் Pretensioner/Reminder, ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டு. ஸ்மார்ட் வேரியன்ட்டில் நான்கு காற்றுப்பைகளும், ஷார்ப் வேரியன்ட்டில் ஆறு காற்றுப்பைகளும் உள்ளன. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட மாடல்களில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஸ்பெஷல் அம்சம் ஆகும். இந்தியாவில் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வரும் 2020, ஏப்ரல் மாதத்தில், 7 சீட்டர் ஹெக்டரை வெளியிடும் முடிவில் இருக்கிறது எம்ஜி இந்தியா நிறுவனம். எனவே, தற்போது BS-4 விதிகளின்படி கார் இருந்தாலும், அந்த நேரத்தில் 5/7 சீட்டர் என இரண்டு வெர்ஷன்களும் BS-6 அவதாரத்தில் இருக்கும்.

போட்டியாளர்கள்

15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!

தற்போதைக்கு நாடெங்கும் 50 டீலர்களை (120 Touch Points) எம்ஜி இந்தியா நிர்ணயித்திருக்கிறது. இந்த எண்ணிக்கையை 250 Touch Point-களாக செப்டம்பர் 2019-வாக்கில் அதிகரிக்க இந்த நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. ஐந்து வருடம்/ Unlimited கிமீ வாரன்ட்டி - Labour Charge நீக்கப்பட்ட ஐந்து இலவச சர்வீஸ், ஐந்து ஆண்டுகளுக்கான RSA ஆகியவை ஹெக்டருடன் வழங்கப்பட்டிருக்கிறது. 8,000 ரூபாயில் தொடங்கும் Prepaid Maintanence திட்டம் (Classic, Classic 360, Premium and Premium 360), ஐந்து ஆண்டுகளுக்கு உண்டு. இப்படி அற்புதமான விலையில் வந்திருப்பதால், டாடா ஹேரியர் - ஜீப் காம்பஸ் - மஹிந்திரா XUV5OO ஆகியவற்றைத் தவிர, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்ட்டோஸ் ஆகிய எஸ்யூவிகளுடனும் போட்டிபோடுகிறது எம்ஜி ஹெக்டர். இந்த மிட்சைஸ் எஸ்யூவியின் அறிமுக சென்னை ஆன்ரோடு விலைகள் பின்வருமாறு;

15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!

1.5 பெட்ரோல் Style MT -  15.14 லட்சம் ரூபாய்
1.5 பெட்ரோல் Super MT - 16.10 லட்சம் ரூபாய்
1.5 பெட்ரோல் - ஹைபிரிட் Super MT - 16.83 லட்சம் ரூபாய்
1.5 பெட்ரோல் - ஹைபிரிட் Smart MT - 18.15 லட்சம் ரூபாய்
1.5 பெட்ரோல் Smart AT - 18.87 லட்சம் ரூபாய்

15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!

1.5 பெட்ரோல் - ஹைபிரிட் Sharp MT - 19.20 லட்சம் ரூபாய்
1.5 பெட்ரோல் Sharp AT - 20.68 லட்சம் ரூபாய்
2.0 டீசல் Style MT - 16.35 லட்சம் ரூபாய்
2.0 டீசல் Super MT - 17.55 லட்சம் ரூபாய்
2.0 டீசல் Smart MT - 19.11 லட்சம் ரூபாய்
2.0 டீசல் Sharp MT - 20.80 லட்சம் ரூபாய்

15.14 லட்சத்துக்கு எம்ஜி ஹெக்டர்... க்ரெட்டா, ஹேரியருக்கு ரெட் அலர்ட்!