கார்ஸ்
Published:Updated:

இனி மார்க்யூஸ் ராஜ்யம்தான்!

இனி மார்க்யூஸ் ராஜ்யம்தான்!

 ##~##

பைக் ரேஸ் வரலாற்றில், ராஸிக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு விடை சொல்லி இருக்கிறார் மார்க் மார்க்யூஸ். 21 வயதே நிரம்பிய ஹோண்டா அணியின் மார்க் மார்க்யூஸுக்கு, மோட்டோ ஜீபி ரேஸில் இதுதான் முதல் ஆண்டு. 'சின்னப் பையன்’ என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க... ராஸி, லாரன்சோ, பெட்ரோஸா என எல்லோரையும் ஓரங்கட்டி முதல் இடத்தில் பறந்துகொண்டு இருக்கிறார் மார்க் மார்க்யூஸ். 

இதுவரை, அமெரிக்காவில் நடந்து முடிந்த இண்டியானா போலீஸ் ரேஸ் வரை 10 போட்டிகள் நடந்திருக்கின்றன. இதில், ஒரு ரேஸ் போட்டியில் விபத்து காரணமாக வெளியேறினார் மார்க்யூஸ். மற்ற ஒன்பது ரேஸிலும், முதல் மூன்று இடங்களுக்குள் ஒருவராக வந்து சாதனை படைத்திருக்கிறார். கடந்த மாதம் நெதர்லாந்து, அடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டு ரேஸ்களிலும் வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்திருக்கிறார் மார்க்யூஸ்.

இனி மார்க்யூஸ் ராஜ்யம்தான்!
இனி மார்க்யூஸ் ராஜ்யம்தான்!

லகுனா செக்கா

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள லகுனா செக்கா ரேஸ் மைதானத்தில், ஜூலை 21-ம் தேதி மோட்டோ ஜீபியின் ஒன்பதாவது சுற்று நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற ஹோண்டா அணியின் வீரர்களான ஸ்டீஃபன் பிராடில் முதல் இடத்தில் இருந்தும், மார்க் மார்க்யூஸ் இரண்டாம் இடத்தில் இருந்தும், ஆல்வரோ பட்டிஸ்டுடா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். அடுத்த வரிசையாக, யமஹா வீரர்கள் ராஸி நான்காவது இடத்தில் இருந்தும், கால் க்ரட்ச்லோ ஐந்தாவது இடத்தில் இருந்தும், லாரன்சோ ஆறாவது இடத்தில் இருந்தும் துவக்கினார்கள்.

மொத்தம் 32 லேப்புகள்கொண்ட இந்த ரேஸ் போட்டியின் முதல் 18 லேப்புகள் வரை முதல் இடத்தில் இருந்தார் ஸ்டீஃபன் பிராடில். அதற்கு அடுத்த அடுத்த 18 சுற்றுகள் மார்க்யூஸுக்குச் சொந்தமானவை. 19-வது லேப்பின்போது லீட் எடுத்த மார்க்யூஸை யாராலும் முந்த முடியவில்லை. ஆரம்பத்தில் மார்க்யூஸைத் தோற்கடித்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஸியால், அதன்பிறகு ஹோண்டா பைக்குகளுடன் வேகப் போட்டி போட முடியவில்லை. இறுதியில், மார்க்யூஸ் வெற்றி பெற, ஸ்டீஃபன் இரண்டாம் இடமும், ராஸி மூன்றாவது இடமும் பிடித்தனர்.

இனி மார்க்யூஸ் ராஜ்யம்தான்!

இண்டியானா போலீஸ்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியானா போலீஸ் நகரில், மோட்டோ ஜீபியின் 10-வது சுற்று ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த மார்க்யூஸ் முதல் இடத்தில் இருந்தும், யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ இரண்டாம் இடத்தில் இருந்தும், ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். வாலன்டினோ ராஸி ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

இனி மார்க்யூஸ் ராஜ்யம்தான்!

ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே மார்க்யூஸை முந்திவிட்டு முதல் இடம் பிடித்தார் லாரன்சோ. ஆனால், லாரன்சோவின் ஆதிக்கம் முதல் 12 லேப்புகள் வரைதான் நீடித்தது. அதன் பிறகு மார்க்யூஸ் முந்த... அவரிடம் தோற்றுப் போனார் லாரன்சோ. லேப்புகள் குறையக் குறைய... லாரன்சோவின் யமஹா வேகம் இன்னும் குறைய, மற்றொரு பக்கம் ராஸியின் யமஹாவின் வேகம் கூடியது. ரேஸின் இறுதியில் இரண்டாம் இடத்தில் இருந்த லாரன்சோ மூன்றாவது இடத்துக்குப் பின்தங்க, ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ராஸி நான்காவது இடம் பிடித்தார்.

இந்த ரேஸில் மார்க்யூஸ் வெற்றி பெற, ஹோண்டாவின் மற்றொரு வீரர் டேனி பெட்ரோஸோ இரண்டாம் இடம் பிடித்தார். 10 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், மார்க்யூஸ் 188 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். டேனி பெட்ரோஸா 167 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், யமஹா வீரர்கள் லாரன்சோ 153 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், வாலண்டினோ ராஸி 130 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இனி மார்க்யூஸ் ராஜ்யம்தான்!