மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

வித்யாதரன், சென்னை.

மோட்டார் கிளினிக்

நான் மோட்டார் விகடனின் தீவிர வாசகன். கடந்த சில இதழ்களாக ஃபோர்டு எக்கோஸ்போர்ட் பற்றிய உங்களது விமர்சனங்களைப் படித்து வருகிறேன். எக்கோஸ்போர்ட் காரின் டீசல் இன்ஜின் நன்றாக இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், எக்கோஸ்போர்ட் அறிமுகமாவதற்கு முன்பே, இரு இடங்களில் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆன்லைனில் படித்தேன்; படங்களையும் பார்த்தேன். அதில் இருந்து எக்கோஸ்போர்ட்டை வாங்கலாமா, வேண்டாமா என்ற குழப்பம் வந்துவிட்டது. உண்மையிலேயே எக்கோஸ்போர்ட் பாதுகாப்பான காரா?

 ##~##
மோட்டார் கிளினிக்

நீங்கள் குறிப்பிடும் இரண்டு சம்பவங்களும், காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது நிகழ்ந்தவை. டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, அதிக வேகத்தில் சடன் பிரேக் அடித்து டெஸ்ட் செய்வார்கள். அப்போது, சில கார்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், அந்தச் சம்பவங்களுடன் எக்கோஸ்போர்ட்டை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. பொதுவாகவே, செடான் கார்களைவிட எஸ்யூவி கார்களில் பாடி ரோல் அதிகமாக இருக்கும். காரணம், இவற்றின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம். எக்கோஸ்போர்ட்டிலும் பாடி ரோல் இருக்கிறது. ஆனால், அது அபாயகரமானதாக இல்லை. கார் கவிழ்ந்துவிடும் என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பஷீர், சேலம்.

மோட்டார் கிளினிக்

நான் தற்போது மாருதி ஜென் வைத்திருக்கிறேன். இதை விற்று விட்டு புதிதாக கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறேன். ஹோண்டா பிரியோ வாங்குவதா அல்லது டொயோட்டா எட்டியோஸ் லிவா வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது. இரண்டில் எந்த காரை வாங்கலாம்?

இரண்டில் சிறந்த கார், ஹோண்டா பிரியோதான். நகருக்குள் பயணிக்க வசதியானது. பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜில் சிறந்த கார். நகர டிராஃபிக்கில் ஈஸியாக ஓட்டக்கூடிய கார் பிரியோ. நகருக்குள் 12 கி.மீ வரையிலும், நெடுஞ்சாலையில் 17 கி.மீ வரையிலும் மைலேஜ் தருகிறது. எட்டியோஸ் லிவா பயன்படுத்துவதற்குச் சிறந்த காராக இருந்தாலும், பிரியோ போன்று முழுமையான சிட்டி காராக இல்லை.

வீரக்குமார், வத்தலக்குண்டு.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் புதிதாக பைக் வாங்கலாம் என இருக்கிறேன். பவர்ஃபுல் பைக் வேண்டாம். 100 அல்லது 125 சிசி பைக் போதும். நீண்ட தூரம் உட்கார்ந்து பயணிக்க வசதியான, மைலேஜ் அதிகம் தரக்கூடிய பைக்தான் என்னுடைய சாய்ஸ். எந்த பைக் வாங்கலாம்?

ஹோண்டா ஷைன் உங்களுக்குச் சரியாக இருக்கும். ஹோண்டாவின் இன்ஜின் என்பதால், நம்பகத்தன்மை குறித்த கவலை இல்லை. நீண்ட தூரம் உட்கார்ந்து பயணிக்க சிறந்த பைக். மைலேஜும் அதிகம்தான்.

ஆனால், சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் விஷயத்தில் ஹோண்டா சிறந்த நிறுவனமாக இல்லை என்பதுதான் வாடிக்கையாளர்களின் ஃபீட்பேக்.

அருள்ராஜ், நாகர்கோயில்.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் 2007-ம் ஆண்டு முதல் டொயோட்டா இனோவா காரைப் பயன்படுத்துகிறேன். மிகவும் சௌகரியமான, வசதியான காராக இருக்கிறது. இதுவரை 70 ஆயிரம் கி.மீ ஓட்டிஇருக்கிறேன். கார் வாங்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டதால், வேறு ஒரு புதிய கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறேன். மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா ஆரியா, நிஸான் எவாலியா, மாருதி எர்டிகா என இந்த செக்மென்ட்டில் உள்ள எல்லா கார்களையும் ஓட்டிப் பார்த்துவிட்டேன். ஆனால், இனோவா அளவுக்கு எனக்கு எந்த காரும் பிடிக்கவில்லை. மீண்டும் புதிதாக இனோவா காரையே வாங்கலாமா அல்லது வேறு ஏதும் புது கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றனவா?

மோட்டார் கிளினிக்

நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை. டொயோட்டா இனோவா வாடிக்கையாளர்களுக்கு, வேறு எந்த காரும் மாற்றுக் காராக இருக்க முடியாது. இன்று வரை டொயோட்டா இனோவாவுக்குச் சரியான போட்டியாளரே இந்திய மார்க்கெட்டில் இல்லை. நீங்கள் மீண்டும் டொயோட்டா இனோவா காரையே வாங்கலாம். அல்லது அடுத்த ஆண்டு இறுதியில் ஹோண்டா விற்பனைக்குக் கொண்டுவர இருக்கும் எம்யூவி கார் வரும் வரை காத்திருக்கலாம். டொயோட்டாவின் தரத்துக்குச் சரியான போட்டியாக ஹோண்டா கார்கள் இருக்கும். இன்னும் ஒரு வருடம் உங்களின் திட்டத்தைத் தள்ளிப்போட முடிந்தால், காத்திருக்கலாம்.

வினோத், சென்னை.

மோட்டார் கிளினிக்

என்னுடைய சொந்த ஊர் சென்னை.  தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறேன். என் குடும்பத்தினர் சென்னையில் வசிப்பதால், மாதத்துக்கு இரண்டு முறை வார இறுதி நாட்களில் வால்வோ பேருந்தில் சென்னை வந்து செல்கிறேன். பஸ்ஸுக்கு மட்டும் மாதம் 2,800 ரூபாய் வரை செலவாகிறது. சென்னை, பெங்களூர் இரண்டு இடங்களிலுமே பேருந்து நிலையத்துக்குப் பக்கத்திலேயே வீடு இருப்பதால், உள்ளூர் பயணச் செலவு அதிகம் இல்லை. ஆனால், அடிக்கடி பஸ்ஸில் பயணிப்பது அலுப்பாக இருப்பதோடு, புக்கிங்கும் பெரிய எரிச்சலாக இருக்கிறது. அதனால், புதிதாக கார் வாங்கி காரிலேயே சென்று வரலாம் என யோசிக்கிறேன். பெங்களூரு - சென்னை சாலையும் நன்றாக இருப்பதால், காரில் போய் வருவது சுலபம். கார் வாங்க என்னுடைய பட்ஜெட் 10 லட்சம். உங்களுடைய ஆலோசனை தேவை.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

பஸ்ஸில் நீங்கள் வெள்ளிக்கிழமை இரவு ஏறினால், சனிக்கிழமை காலையில் சென்னை வந்துவிடுவீர்கள். ஆனால் கார் என்றால், வெள்ளிக்கிழமை மதியம் மூன்று மணி போல அலுவலகத்தில் இருந்து நீங்கள் கிளம்பினால்தான், இரவு 10 மணிக்குள் சென்னை வந்து சேர முடியும். பெங்களூரு - சென்னை சாலை எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும், இரவில் கார் ஓட்டுவது பாதுகாப்பானது அல்ல. இரவில் கார் ஓட்டுவதையும், காரில் பயணிப்பதையும் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி நெடுஞ்சாலைப் பயணம் என்பதால், பாதுகாப்பு வசதிகள் அதிகம்கொண்ட, பில்டு குவாலிட்டியில் சிறந்த கார்களை வாங்குவதே நல்லது. உங்கள் பட்ஜெட் 10 லட்சம் என்பதால், செகண்ட் ஹேண்டில் ஸ்கோடா லாரா காரை வாங்கலாம். இது பில்டு குவாலிட்டியில் சிறந்த கார் என்பதோடு, நெடுஞ்சாலைப் பயணத்துக்கு ஏற்ற கார். அதிக தூரம் பயணித்தாலும் அலுப்பு  தெரியாது.

ஸ்கோடா லாரா டீசல், லிட்டருக்கு 15 கி.மீ வரை மைலேஜ் தரும். ஒருமுறை நீங்கள் சென்னை வந்துசெல்ல, 1,600 ரூபாய் வரை டீசல் போட வேண்டியிருக்கும். இந்தக் கணக்கில் பார்க்கும் போது  நீங்கள் மாதத்துக்கு 6,500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியது வரும். காரில் தனியாக சென்னை வந்துசெல்வது பணத்தைக் கரைக்கும். பெங்களூருவில் இருந்து நண்பர்கள் இரண்டு, மூன்று பேரை சேர்த்துக் கொண்டு சென்னை வந்து செல்வதுதான் புத்திச்சாலித்தனம்.

நரேந்திரன், சிதம்பரம்.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

பஜாஜ் பல்ஸர் 150, யமஹா FZ-16 - இந்த இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்? இரண்டில் எது கொடுக்கிற காசுக்குச் சரியான பைக்?

மோட்டார் கிளினிக்

தற்போதைய 150 சிசி பைக்குகளில் ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த மெயின்டனன்ஸ் என அனைத்திலுமே சிறந்த பைக்காக இருக்கிறது யமஹா FZ-16. பல்ஸரைவிட மைலேஜில் குறைவுதான் என்றாலும், கொடுக்கிற காசுக்கு ஏற்ற சரியான பைக் யமஹா FZ-16 பைக்தான்.

எழில்வேந்தன், மதுரை.

மோட்டார் கிளினிக்

நான் கல்லூரியில் படித்து வருகிறேன். பார்க்கிங்கில் நிற்கும் போது தனித்துத் தெரியும் ஸ்டைலான பைக் வேண்டும். அதேசமயம், பவர்ஃபுல்லான பைக்காகவும் இருக்க வேண்டும். யமஹா ஃபேஸர், யமஹா ஆர்-15, ஹீரோ கரீஸ்மா மற்றும் பஜாஜ் பல்ஸர் 220 பைக்குகளை என்னுடைய ஃபேவரிட் லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன். இந்த நான்கில் எதை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான்கு பைக்குகளில் ஸ்டைலான, தனித்துவமானது, யமஹா ஆர்-15 பைக்தான். மற்றவை சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கு வடிவமைக்கப் பட்டவை. ஆனால், ஆர்-15 முழுக்க முழுக்க ரேஸ் பைக் போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டது. இதை சற்று குனிந்து உட்கார்ந்துதான் ஓட்ட வேண்டும். தினமும் கல்லூரிக்குக் கொண்டு செல்ல தனித்துவமான, ஸ்டைலான பைக்காக இது இருக்கும். பெர்ஃபாமென்ஸ் மற்றும் கையாளுமையிலும் சிறப்பாக இருக்கும். ஆனால், தினமும் நீண்ட தூரம் ஓட்டும்போது, முதுகு வலிக்கும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.