கார்ஸ்
Published:Updated:

ஸ்டைல் ஓகே... ஆனால் நகருக்குள் சிரமம்!

ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடிர.ராஜா ராமமூர்த்தி, படங்கள்: ப.சரவணக்குமார்

பாரம்பரியமான புல்லட் ரசிகர்களைத் தாண்டி, புதிய வாடிக்கையாளர்களைக் கவர, ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்திய பைக் - கான்டினென்டல் ஜிடி. ராயல் என்ஃபீல்டின் அப்படிப்பட்ட புதிய வாடிக்கையாளர் நவீன் ஆன்டனி.

 ''நான் இதற்கு முன்பு யமஹா ஆர்-15 வைத்திருந்தேன். நான் எப்படி ஒரு ஸ்ட்ரீட் பைக்கில் இருந்து கஃபே ரேஸர் பைக்குக்கு மாறினேன் என்பது எனக்கே தெரியவில்லை. முதலில் கிளாஸிக் 350 பைக்கைத்தான் புக் செய்தேன். ஆனால், கான்டினென்டல் ஜிடி-யைப் பார்த்ததும் டெஸ்ட் டிரைவ் செய்யத் தோன்றியது. டெஸ்ட் டிரைவ் செய்த அடுத்த நிமிடமே கிளாஸிக் புக்கிங்கை கேன்சல் செய்துவிட்டு, ஜிடி-யை புக் செய்துவிட்டேன்.

ஸ்டைல் ஓகே... ஆனால் நகருக்குள் சிரமம்!

சென்னை அண்ணா நகர் சதர்ன் மோட்டார்ஸில்தான் பைக் வாங்கினேன். சென்னையில் நான்தான் இந்த பைக் வாங்கிய நான்காவது நபர். வடசென்னையில் இருக்கும் ஒரே கான்டினென்டல் ஜிடி இதுதான்.

பிடித்தது

டிஸைன். அதுதான் இந்த பைக்கின் அப்பீல். இதன் ஹேண்டில்பார் முனையில் இருக்கும்

ஸ்டைல் ஓகே... ஆனால் நகருக்குள் சிரமம்!

ரியர்வியூ மிரரை ஆப்ஷனலாக 4,000 ரூபாய் கொடுத்து விரும்பி வாங்கினேன். முதலில், இவ்வளவு சின்னக் கண்ணாடியில் எப்படி பைக்கின் பின் பக்கத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், பைக்கை ஓட்டும்போது இது தரும் வியூ, போதுமானதாக இருக்கிறது. இந்தக் கண்ணாடி அதிக வேகத்தில் அதிர்வது இல்லை. டயல்களை இரவில் பார்க்கும்போது, காரில் இருப்பதுபோல செம ஸ்டைலாக இருக்கின்றன. கான்டினென்டல் ஜிடி பைக்குடன் வரும் ஒரிஜினல் எக்ஸாஸ்ட் சத்தத்தில், பீட் சுத்தமாக இல்லை. அதனால், இந்த ஆப்ஷனல் வசதியான ஷார்ட் எக்ஸாஸ்ட் சைலன்ஸரை 4,300 ரூபாய் கொடுத்துப் பொருத்தினேன். இப்போது சத்தமே தனிக் கூட்டத்தைக் கூட்டுகிறது.

இந்த பைக்கில் என்னுடைய டாப் ஸ்பீடு மணிக்கு 145 கி.மீ. 140 கி.மீ வேகம் வரை ஸ்மூத்தாகத்தான் இருக்கிறது இதன் இன்ஜின். ஆனால், அதற்கு மேல் பிக்-அப் சீராக இல்லை. அதிர்வுகளும் ஆரம்பமாகிவிடுகின்றன.

ஆனால், ஆரம்ப வேகத்தில் சீறுகிறது கான்டினென்டல் ஜிடி. ஃபர்ஸ்ட் கியரில் இருந்து கிளட்ச்சைவிட்டு கையை எடுத்தாலே பறக்கிறது. பில்லியன் சீட், நான் தனியாக வாங்கிவைத்திருப்பதால், தேவைப்படும்போது பொருத்திக்கொள்கிறேன்.

பிரெம்போ பிரேக்குகளின் பெர்ஃபாமென்ஸ் சூப்பர். பைரலி ஸ்போர்ட் - டெமான் டயர்கள் நல்ல க்ரிப் தருகின்றன.

ஸ்டைல் ஓகே... ஆனால் நகருக்குள் சிரமம்!
ஸ்டைல் ஓகே... ஆனால் நகருக்குள் சிரமம்!

பிடிக்காதது

''இந்த பைக்கில் ஆர்.சி புக் அல்லது வேறு ஆவணங்களை வைக்க இடம் இல்லை. அது மட்டுமல்ல...'' என்று சொல்லிக்கொண்டே பைக்கின் பேட்டரி இருக்கும் இடத்தைத் திறந்தார் நவீன். ''இதைத் திறந்து எடுத்தால், மற்ற பைக்குகளில் இருப்பதுபோல இல்லாமல், நம் கையோடு வந்து விடும். ஆனால், ஒரு தடவை அகற்றிப் பொருத்திய பிறகு, இதைத் திறக்க முடியவில்லை. சர்வீஸ் சென்டரில் காட்டியபோது, அடுத்த சர்வீஸில் சரி செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், இது பரவாயில்லை. நீங்களே பாருங்கள்... பேட்டரிக்குக் கீழே இருக்கும் இந்த 'டூல் கிட்’-ஐ எடுத்து விட்டுத்தான் பைக்கின் ஆவணங்களை மடித்துச் சுருட்டி வைத்திருக்கிறேன். இப்போது பைக்கில் டூல் கிட் வைக்க இடம் இல்லை. ஏதாவது ஒரு சமயத்தில் பேட்டரி லீக் ஆனால், அது ஆவணங்களில்தான் கொட்டும்!'' என்று தொடர்ந்தார் நவீன்.

'''கஃபே ரேஸர்’ ஸ்டைலிங் நன்றாக இருந்தாலும், சிறிது தூரம் ஓட்டியதுமே முதுகு வலிக்கிறது. வேகமாகப் போனாலும் பைக்கின் வேகத்தை ஃபீல் செய்ய முடியவில்லை. டிராஃபிக்குக்குள் வளைத்துத் திருப்பி ஓட்ட மிகவும் சிரமமாக இருக்கிறது. பைக்கின் எடையும் அதிகம்.

இந்த ஆப்ஷனல் ரியர்வியூ மிரர், சுலபமாக மற்ற வாகனங்களில் உரசும் வாய்ப்பு அதிகம். எனவே, நாம்தான் கவனமாக ஓட்ட வேண்டும். அதேபோல், பின் பக்கம் இருக்கும் பயோலி ஷாக் அப்ஸார்பரை அட்ஜஸ்ட் செய்ய முடியாது. கொஞ்சம் ஸ்டிஃப்பான சஸ்பென்ஷன் செட்-அப் இது.

500 கி.மீ ஓட்டிய பிறகு, முதல் சர்வீஸ் விடும்போது, டீலர்ஷிப் சர்வீஸ் செய்தவிதம் எனக்குத் திருப்தியாக இல்லை. சைடு இண்டிகேட்டர்கள் க்ரோம் கோட்டிங் உடன் இருந்தாலும், வீக்காக இருக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது'' என்றார் நவீன்.