கார்ஸ்
Published:Updated:

''எனது அடுத்த சூப்பர் கார்!''

ஷெல் எதிர்காலம்?ரா.ராஜா ராம மூர்த்தி படங்கள்: சொ.பால சுப்ரமணியன்

டந்த மாதம் சென்னை ஐஐடியில், ஷெல் நிறுவனம் தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடத்தியது. இதற்கு முன்பு, லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியிலும், பீஜிங்கில் உள்ள சிங்ஹூயா பல்கலைக் கழகத்திலும் மட்டுமே நடைபெற்றுள்ள இந்த தொழில்நுட்பக் கருத்தரங்கம், உலக அளவில் மிகப் பிரபலமானது. உலக ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் கார்டான் முரே...

''எனது அடுத்த சூப்பர் கார்!''

 கார்டான் முரே. உலகின் பிரபலமான சூப்பர் கார்களில் ஒன்றான மெக்லாரன் எஃப்-1 காரை உருவாக்கியவர். மேலும், ப்ரபாம் F1 மற்றும் மெக்லாரன் F1 கார்களும் இவரது கை வண்ணம்தான். இவரது 'மோட்டிவ்-இ’ சிட்டி காரை, யமஹா நிறுவனம் தனது முதல் காராகத் தயாரிக்க இருக்கிறது. கார்டான் முரே மோட்டார் விகடனுக்கு அளித்த பேட்டி...

''எனது அடுத்த சூப்பர் கார்!''

 ''உங்களுடைய மெக்லாரன் எஃப்-1 காரின் வழித்தோன்றலாகத்தான் சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் மெக்லாரன் P1 ஹைபர் காரைப் பார்க்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''எனது அடுத்த சூப்பர் கார்!''

''எனக்கு மெக்லாரன் P1 அவ்வளவு ஸ்பெஷலாகத் தெரியவில்லை. காரணம், பெர்ஃபாமென்ஸ் கார் என்றால், எடை குறைவாக இருக்க வேண்டும். அதுதான் அடிப்படை. ஆனால், இது கிட்டத்தட்ட 1395 கிலோ எடைகொண்டது. மேலும், இரண்டு டர்போ சார்ஜர்கள், எலெக்ட்ரிக் மோட்டார்கள் என ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் இருப்பதால், 'நேச்சுரல் ஆஸ்பிரேஷன்’(டர்போ சார்ஜர், சூப்பர் சார்ஜர் இல்லாதது) கொண்ட கார்கள் தரும் அனுபவத்தை, நிச்சயம் இந்த P1 காரால் தர முடியாது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் கொண்ட கார் தரும் அனுபவத்தில், உயிர் இருக்காது. மெக்லாரன் எஃப்-1 காரில், டர்போ சார்ஜர்களையும் தேவையற்ற எலெக்ட்ரிக்கல் பாகங்களையும் நான் சேர்க்காமல் இருக்க அதுதான் காரணம். ஒரு பெர்ஃபெக்ட் ஸ்போர்ட்ஸ் கார் என்றால், நேச்சுரல் ஆஸ்பிரேஷன் கொண்ட இன்ஜினும், கார் எடை குறைவாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டுமே மெக்லாரன் P1 காரில் இல்லை.''

''எனது அடுத்த சூப்பர் கார்!''

 ''நீங்கள் சில நாட்களுக்கு முன்பு 'என்னிடம் இன்னொரு சூப்பர் காருக்கான திட்டம் இருக்கிறது’ என்று சொல்லியிருந்தீர்கள். அப்படி என்றால், எஃப்-1 போன்ற இன்னொரு மகத்தான காரை உருவாக்கப் போகிறீர்களா?''

''வாவ்! இந்தியாவில் இந்தக் கேள்வியை யாரும் கேட்கமாட்டார்கள் என நினைத்தேன். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். என்னிடம் இன்னொரு ஸ்போர்ட்ஸ் காருக்கான திட்டம் இருப்பது உண்மைதான். அது, ஒரு பெர்ஃபெக்ட் ஸ்போர்ட்ஸ் காரில் இருக்க வேண்டிய அம்சங்களுடன் இருக்கும். இன்னும் மூன்று முதல் நான்கு வருடங்கள் பொறுத்திருங்கள்!''

''எனது அடுத்த சூப்பர் கார்!''

ஷெல் நிறுவனத்தின் செல்டா குன்செல், இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார். எண்ணெய் நிறுவனங்களின் எதிர்காலம் பற்றி, அவர் மோட்டார் விகடனுக்கு அளித்த பேட்டி.

''எனது அடுத்த சூப்பர் கார்!''

 ''ஷெல் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கை, '2035-ம் ஆண்டில்தான் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும். பின்பு படிப்படியாகக் குறைந்து, 2050-ம் ஆண்டுக்குப் பின்பு முழு எலெக்ட்ரிக் கார்கள்தான் சாலையில் இருக்கும்’ என்று சொல்கிறது. அப்படியானால், ஐ.சி இன்ஜின்கள் இல்லாதபட்சத்தில், ஷெல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் எதிர்காலம் என்ன?''

''எலெக்ட்ரிக் கார்கள் மட்டும் சாலையில் இருக்கும்போது, நிச்சயம் எங்களுக்கு வேலை

''எனது அடுத்த சூப்பர் கார்!''

குறைந்துவிடும். ஆனால், எலெக்ட்ரிக் கார்களிலும் சக்கரங்கள், பேரிங்குகள் போன்ற பாகங்கள் இருக்கின்றன. அதனால், குறிப்பிட்ட வகை லூப்ரிகன்ட்ஸின் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஐ.சி இன்ஜின்களின் வாழ்நாளை அதிகரிக்கவும், அவற்றை அதிகம் எரிபொருள் சேமிக்கும்படி செய்யும் ஆராய்ச்சியில் இருக்கிறோம். 'ஷெல் நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்ததில், எங்களுடைய T25 சிட்டி காரில் 6.5 சதவிகிதம் அதிக மைலேஜ் கிடைத்துள்ளது’ என்று கார்டான் முரே இந்த கருத்தரங்கில் சொன்னதை நினைவுப்படுத்திப் பாருங்கள். எல்லா கார்களிலும் அதிக எரிபொருள் சேமிப்பு என்றால், நாங்கள் அறிக்கையில் சொன்ன 2035-ம் ஆண்டு என்ற கணக்கு சற்று தள்ளிப்போகும்.''

''ஆனால், எலெக்ட்ரிக் கார்களின் வருகை உங்கள் தொழில் ஆதாரத்தையே குலைத்துவிடுமே?''

''அதனால்தான் பல புது முயற்சிகளில் ஷெல் இப்போது இறங்கியிருக்கிறது. இயற்கை எரிவாயு மற்றும் பல மாற்று எரிசக்திகளை ஆட்டோமொபைல்களில் 'திறமையாக’ப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கிறோம். எலெக்ட்ரிக் கார்கள் சாலையை ஆக்கிரமிக்கும்போது, எங்களுடைய தொழில்நுட்பங்களை எலெக்ட்ரிக் கார்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு தயாராக இருப்போம்.''

''எனது அடுத்த சூப்பர் கார்!''

 ''கார்டான் முரே பேசும்போது, ஒரு காரின் படத்தை ஷெல் படம் போட்ட கவரில் மூடியவாறு இருப்பதைக் காட்டிவிட்டு, 'இதுதான் என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட். எனக்கும், ஷெல் நிறுவனத்துக்கும் இது ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கப்போகிறது’ என்று சொன்னார். அதைப் பற்றி உங்கள் கருத்து?''

''கார்டான் முரே, எங்களை அவருடைய அடுத்த திட்டத்துக்கு இணைத்துக் கொண்டது பெரிய வரம்தான். அவர் சொன்னது போல, ஷெல் நிறுவனம் முற்றிலும் புதிய துறையில் காலடி எடுத்துவைக்க இருக்கிறது. எண்ணெய், லூப்ரிகன்ட்ஸ் இல்லாமல், புதிய விஷயத்தை ஷெல் நிறுவனம் இந்தத் திட்டத்தின் மூலம் செய்ய இருக்கிறது. விரைவில் முழு தகவல்களை வெளியிடுவோம்.''