கார்ஸ்
Published:Updated:

ராஸிக்கு ராசியாகுமா 2014?

சார்லஸ்

மார்ச் மாதம் துவங்கி விட்டாலே ரேஸ் சீஸன் துவங்கிவிடும். 'வாலன்டினோ ராஸியின் கடைசி ஆண்டாக இது இருக்கும்’ என்ற பரபரப்புகளுக்கு இடையே, 2014-ம் ஆண்டுக்கான மோட்டோ ஜீபி சீஸன் கத்தாரில் துவங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே ராசி இல்லாமல் இருக்கும் ராஸிக்கு, இந்த ஆண்டு மீண்டும் வெற்றி வாகை சூடும் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்பதை உறுதி செய்தது, கத்தார் மோட்டோ ஜீபி!

ராஸிக்கு ராசியாகுமா 2014?

கத்தார்

கத்தாரில் இரவு ரேஸாக ராட்சத விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மார்ச் 23-ம் தேதி, முதல் ரேஸ் துவங்கியது. நடப்பு சாம்பியன் மார்க் மார்க்யூஸின் ஹோண்டா, தகுதிச் சுற்றில் சீறிப் பறக்க... ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார். ஹோண்டாவின் மற்றொரு வீரர் அல்வரோ படிஸ்ட்டா இரண்டாம் இடத்தில் இருந்தும், யமஹாவின் பிராட்லி ஸ்மித் மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். முன்னாள் சாம்பியன்கள் ஜார்ஜ் லாரன்சோ ஐந்தாவது இடத்தில் இருந்தும், வாலன்டினோ ராஸி பத்தாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

ராஸிக்கு ராசியாகுமா 2014?

ரேஸ் துவங்கிய சில நிமிடங்களிலேயே முதல் இடத்துக்கு முன்னேறினார், ஐந்தாவது இடத்தில் இருந்த லாரன்சோ. பயங்கர வேகமாக ரேஸ் ஓட்டிய லாரன்சோ, முதல் லேப்பிலேயே மோசமான விபத்தில் சிக்கினார். வளைவில் திரும்பும்போது அவரது பைக் டயர் கிரிப் இழக்க, ரேஸ் டிராக்கைவிட்டு பைக்கோடு பறந்தார் லாரன்சோ. இந்த விபத்தினால், யாரும் எதிர்பாராத வகையில் ஹோண்டாவின் ஸ்டீஃபன் பிராடில் முதல் இடத்தில் பறக்க... மார்க்யூஸ் அவரைத் துரத்திக்கொண்டிருந்தார். இதற்கிடையே பத்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ராஸி, முதல் லேப்பின் முடிவில் ஆறாவது இடத்துக்கு முன்னேறினார். ஏழாவது லேப்பின்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய ராஸி, இரண்டாம் இடத்தில் இருந்த மார்க்யூஸை முந்த தருணம் பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த லேப், அவருக்கு அதிர்ஷ்ட லேப்பாக அமைந்தது. மார்க்யூஸ் கொஞ்சம் தடுமாற, எட்டாவது லேப்பில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் ராஸி.

ராஸிக்கு ராசியாகுமா 2014?

ஏற்கெனவே முதல் இடத்தில் இருந்து விபத்துக்குள்ளாகி வெளியேறிய லாரன்சோவைப் போலவே, ஒன்பதாவது லேப்பில் விபத்தில் சிக்கி, ரேஸைவிட்டு வெளியேறினார் ஸ்டீஃபன் பிராடில். இந்த விபத்தின்போது மார்க்யூஸ் இரண்டாம் இடத்துக்கு முன்னேற, மீண்டும் மார்க்யூஸைப் பின்னுக்கு விரட்டி முதல் இடம் பிடித்தார் வாலன்டினோ ராஸி.

ராஸிக்கு ராசியாகுமா 2014?

மொத்தம் 22 லேப்புகள் கொண்ட கத்தார் ரேஸின் 14-வது சுற்றில், ராஸியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார் மார்க்யூஸ். கடைசி வரை ராஸியின் யமஹாவால், மார்க்யூஸின் ஹோண்டாவை முந்த முடியவில்லை.

118.36 கி.மீ தூரம்கொண்ட இந்த ரேஸ் போட்டியை, மார்க்யூஸ் 42 நிமிடங்கள் 40 விநாடிகளில் கடந்து வெற்றிபெற்றார். அவரைவிட 0.259 மைக்ரோ விநாடிகள் பின்தங்கி, இரண்டாம் இடம் பிடித்தார் ராஸி. ஹோண்டா அணியின் மற்றொரு வீரர் டேனி பெட்ரோஸா, மூன்றாவது இடம் பிடித்தார்.