கார்ஸ்
Published:Updated:

பெர்ஃபாமென்ஸ் பைக்கா இன்ஸிமா?

தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ந்திய பைக் சந்தையில், சுஸ¨கி இப்போது அதிகக் கவனம் செலுத்துகிறது. 250 சிசி பைக்கான இனஸ¨மா, கேடிஎம் 200 டியூக், பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ், ஹோண்டா சிபிஆர் 250ஆர் போன்ற பைக்குகளுடன் போட்டி போடுகிறது. சுஸ¨கி பைக்குகள் பிரபலமாவதற்குக் காரணமான ஹயபூஸா, கட்டானா ஆகிய பைக்குகளைப் பார்த்தவர்களுக்கு, இனஸ¨மா பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால், தனித்துவமான டிஸைன் கொண்ட பைக்காக இனஸ¨மா திகழ்கிறது. ஏற்கெனவே சந்தையில் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பிடித்துவிட்ட இதன் போட்டியாளர்களை, தோற்கடிக்குமா இனஸ¨மா?

பெர்ஃபாமென்ஸ் பைக்கா இன்ஸிமா?

டிஸைன் - இன்ஜினீயரிங்

சுஸ¨கியின் இன்னொரு பைக்கான ஙிரிவீஸீரீ போல வடிவமைக்கப்பட்டு இருக்கும் இனஸ¨மா, சாலையில் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. பைக்கின் கோடுகள் கரடுமுரடாக இல்லாமல் ஸ்மூத்தாக இருக்கின்றன. 3 ஸ்போக் அலாய் வீல்கள், பார்க்க பழைய டிஸைனாகத் தெரிகின்றன. இரண்டு பைலட் லைட்டுகளுடன் இருக்கும் ஹெட்லைட், இரவில் பளீரென்ற வெளிச்சத்தை அளிக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பார்க்கத் தெளிவாக இருக்கிறது. அனலாக் டேக்கோ மீட்டரும், ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், ட்வின் ட்ரிப் மீட்டர், 'மெயின்டனன்ஸ் டியூ ரிமைண்டர்’ போன்றவை டிஜிட்டலிலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கைப்பிடிகள் பிடிக்க வசதியாக இருக்கின்றன. ஆனால், சுவிட்ச் கியரில் 'இன்ஜின் கில்’ மற்றும் பாஸ் லைட் ஃப்ளாஷர் சுவிட்சுகளின் தரம் சுமார்.

ரீச் அட்ஜஸ்டபிள் ஃப்ரன்ட் பிரேக் லீவர் கொடுக்கப்பட்டிருந்தாலும், கிளட்ச் லீவரை அட்ஜஸ்ட் செய்ய முடியாமல் இருப்பது மைனஸ். 13.3 லிட்டர் ஃப்யூல் டேங்க்கில் சுஸ¨கியின் லோகோ அழகாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. மற்ற பைக்குகளில் ஒரு எக்ஸாஸ்ட் கேனிஸ்டர் இருந்தாலும், சுஸ¨கி இனஸ¨மாவில் இரண்டு க்ரோம் ஃபினிஷ்டு எக்ஸாஸ்ட் கேனிஸ்டர்கள் இருக்கின்றன. மொத்தத்தில் சுஸ¨கி இனஸ¨மா பைக்கின் கட்டுமானத் தரம், பயன்படுத்தப்பட்டுள்ள பாகங்களின் தரம் போன்றவை நன்றாகவே இருக்கின்றன. ஆனால், 250 சிசி பைக்காக இருந்தாலும், பார்ப்பதற்கு இதன் போட்டியாளர்கள் அளவுக்கு ஸ்டைலாக இல்லை.

பெர்ஃபாமென்ஸ் பைக்கா இன்ஸிமா?
பெர்ஃபாமென்ஸ் பைக்கா இன்ஸிமா?

இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பெர்ஃபாமென்ஸ்

சுஸ¨கி இனஸ¨மாவில் இருக்கும் 248 சிசி, 4 ஸ்ட்ரோக், பேரலல் ட்வின், லிக்விக் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்ட் இன்ஜின், 24 தீலீஜீ சக்தியை 8,500 ஆர்பிஎம்-லும், 2.24 ளீரீனீ டார்க்கை 6,500 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. இந்த லாங் ஸ்ட்ரோக் இன்ஜின் குறைந்த ஆர்பிஎம்-ல் மிட் ரேஞ்சிலும் சிறந்த சக்தி வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறது. எந்த அதிர்வுகளும் இல்லாமல் மிகவும் ஸ்மூத்தான இயக்கம் கொண்ட இந்த இன்ஜின், 11,200 ஆர்பிஎம் வரை சீறுகிறது.

இதன் போட்டி பைக்குகளைவிட இனஸ¨மா ஓட்டுவதற்கு ரிலாக்ஸ்ட்டாக இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் 1 டவுன், 5 அப் முறையில் ஸ்மூத்தாக ஷிஃப்ட் ஆகிறது. ஆனால், பைக்கின் பெர்ஃபாமென்ஸ்தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஸ்போர்ட்ஸ் பைக் ஃபீலை எதிர்பார்த்து இனஸ¨மாவை வாங்குபவர்கள் ஏமாந்து போவார்கள். 0 - 100 கி.மீ வேகத்தை 11.50 விநாடிகளில் கடக்கிறது இனஸ¨மா. இது கேடிஎம் 200 டியூக், ஹோண்டா சிபிஆர் 250ஆர் போன்ற பைக்குகளின் வேகத்தை விடக் குறைவு. மணிக்கு 120 கி.மீ வேகங்களில் க்ரூஸ் செய்யலாம், ஆனால், அதற்கு மேல் திணறுகிறது இனஸ¨மா. இதன் டாப் ஸ்பீடான 136 கி.மீ வேகத்தைத் தொடும்போதும், இதன் எக்ஸாஸ்ட் சத்தம் மிக சாஃப்ட்டாகவே இருக்கிறது.

பெர்ஃபாமென்ஸ் பைக்கா இன்ஸிமா?
பெர்ஃபாமென்ஸ் பைக்கா இன்ஸிமா?

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

சுஸ¨கி இனஸ¨மாவில் இருப்பது செமி டபுள் க்ரேடில் டைப் ஸ்டீல் ஃப்ரேம். முன் பக்கம் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பக்கம் ஹைட்ராலிக் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் இருக்கின்றன. 183 கிலோ என்ற அளவில் பைக்கின் எடை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. பைக்கின் ரைடிங் பொசிஷன் சிறப்பாக இருப்பதால், சிட்டி டிராஃபிக்கிலும் நெடுஞ்சாலை வேகங்களில் ஓட்டுவதற்கு வசதியாகவே இருக்கிறது. இருக்கை அகலமாகவும் நீளமாகவும் சாஃப்ட்டாகவும் இருக்கிறது. எந்தவிதமான சாலைகளிலும் இனஸ¨மா நல்ல கையாளுமையை அளிக்கிறது. பைக்கின் ஸ்ட்ரெய்ட் லைன் ஸ்டெபிளிட்டி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஐஆர்சி பிராண்டு டயர்கள் போதுமான அளவு க்ரிப் அளிக்கின்றன. ஆனால், பைக்கின் எடை அதிகம் என்பதால், வளைத்து நெளித்து ஓட்ட ஊக்குவிக்கும் அளவில் இதன் ஓட்டுதல் இல்லை. ஆனால், ஒரு ஸ்டேபிளான கையாளுமை இனஸ¨மாவில் இருக்கிறது.

முன் பக்கம் 290 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இருக்கிறது. இந்த பிரேக்குகளின் பெர்ஃபாமென்ஸில் குறை இல்லை என்றாலும், இவ்வளவு விலை கொண்ட பைக்கில் ஏபிஎஸ் இல்லாதது குறையே!

மைலேஜ்

பெர்ஃபாமென்ஸ் பைக்கா இன்ஸிமா?

ஒரு 250 சிசி ட்வின் இன்ஜினுக்கு எதிர்பார்த்தைவிட அதிகமாகவே நகருக்குள் லிட்டருக்கு 28.9 கி.மீ அளிக்கிறது. நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்யும்போது, லிட்டருக்கு 26.9 கி.மீ மைலேஜை அளிக்கிறது இனஸ¨மா.

சுஸ¨கியின் இனஸ¨மா, டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது. முக்கியக் காரணம், விலை. ஒரு 250 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜினுக்கான பெர்ஃபாமென்ஸ் இனஸ¨மாவில் இல்லை. ஆனால், இனஸ¨மா செம ஸ்மூத்தான இன்ஜினும், கச்சிதமான கியர்பாக்ஸும் கொண்ட பைக். எடை அதிகமாக இருந்தாலும், நியூட்ரலான ஓட்டுதல் மற்றும் கையாளுமையைக் கொண்டிருக்கிறது. இந்த பைக்கின் மிக முக்கிய ப்ளஸ், இதன் ரைடிங் பொசிஷன். 'எனக்குத் தேவை ஒரு நம்பகத்தன்மை கொண்ட, சொகுசான 250 சிசி பைக்’ என்பவர்களுக்கு சுஸ¨கி இனஸ¨மா சரியான சாய்ஸ்!