ஆட்டோ ஃபோகஸ்!

ஆட்டோஃபோகஸ்’ பகுதிக்கு, படங்கள் குவிகின்றன. அட்டகாசமான படங்களை மோட்டார் விகடன் கொண்டாடக் காத்திருக்கிறது. நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களில், சிறந்ததைத் தேர்வுசெய்கிறார் சத்யஜித். பரிசுப் படங்கள் ஒவ்வோர் இதழிலும் வெளியாகும்.
ஹி.ஸி.பிரேம் நிர்மல், கோயம்புத்தூர்.
வெள்ளை வண்ண கார்களைப் படம் பிடிப்பது மிகவும் சவாலான விஷயம். சூரியன் மங்கும் வேளையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சரியான லைட்டிங்கிற்கு உதாரணம்!

ஆர்.விவேகானந்தன், தூத்துக்குடி.

புல்லட்டுக்கு ஆஃப் ரோடு சாகச வாகனம் என்கிற இமேஜ் உண்டு. அந்த இமேஜுக்குச் சரியாகப் பொருந்திப் போகிறது இந்தப் படம். பைக்கின் பிரம்மாண்டமும், இயற்கையின் பிரம்மாண்டமும் சமமான அளவில் கலந்திருக்கும் படம் இது!
