மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் லேட்டஸ்ட் எல்சிவி வாகனங்கள் அறிமுகம்!

மோட்டார் நியூஸ்

சென்னையில் அசோக் லேலாண்ட் நிறுவனம், தன்னுடைய லேட்டஸ்ட் எல்சிவி வாகனங்களான 'பார்ட்னர்’ எனும் டிரக், MiTR எனும் பேருந்து ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. 'பார்ட்னர்’ எல்சிவி டிரக், இந்தியாவின் முதல் ஏ.சி பொருத்தப்பட்ட சரக்கு வாகனமாக விற்பனைக்கு வந்துள்ளது. இது, நான்கு டன் எடையைச் சுமக்கும் திறன் கொண்டது. 2,850 மிமீ மற்றும் 3,350 மிமீ என இரண்டு வீல்பேஸ் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது பார்ட்னர். பவர் ஸ்டீயரிங் வசதியும் உண்டு. MiTR எல்சிவி பேருந்து, 27 பேர் அமரக் கூடிய வசதியைக் கொண்டது. பார்ட்னர் மற்றும் MiTR  இரண்டிலும் 3.0 லிட்டர் ZD30 காமென் ரெயில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 116hp சக்தியை 2,750 ஆர்பிஎம்-லும். 320Nm டார்க்கை 1,600-2,400 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. ''பாரத் ஸ்டேஜ்-3 மாடலில் கிடைக்கும் இந்த இன்ஜினை, பாரத் ஸ்டேஜ்-5 மாசுக் கட்டுப்பாட்டு தரத்துக்கும் முன்னேற்றிக் கொள்ளலாம் என்கிறது'' அசோக் லேலாண்ட்.

அறிமுகமானது 2015 ஹூண்டாய் சொனாட்டா!

மோட்டார் நியூஸ்

2015-ம் ஆண்டுக்கான புதிய சொனாட்டா, கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹூண்டாயின் 'ஜெனிஸிஸ்’ பிரீமியம் செடான் காரின் டிஸைன் அம்சங்களைக்கொண்டிருக்கும் புதிய சொனாட்டா, பழைய மாடலைவிட முற்றிலும் புதிதாகக் காட்சியளிக்கிறது. பழைய சொனாட்டாவைப் போல, ரொம்பவே ஃப்ளூயிடிக் டிஸைனா£க இல்லாமல், ஐரோப்பியன் ஸ்டைலில் இருக்கிறது புதிய சொனாட்டா. காரின் கையாளுமை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஜெர்மனியில் உள்ள நர்பர்க்ரிங் டிராக்கில் டெஸ்ட் செய்யப்பட்டது இந்த கார். 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.

விற்பனைக்கு வந்தது ரெனோ ஃப்ளூயன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்!

மோட்டார் நியூஸ்

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான ரெனோ ஃப்ளூயன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல், இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. புதிய ஃப்ளூயன்ஸில் முன் பக்க டிஸைன் முற்றிலும் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது எல்இடி டே டைம் ரன்னிங் லைட்ஸும் இருக்கின்றன.

'3-டி’ சரவுண்ட் ஆடியோ சிஸ்டமும் உண்டு. ஆனால், காரின் உள்பக்கத்திலும், வசதிகளிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய ஃப்ளூயன்ஸில் பெட்ரோல் இன்ஜின் மாடல் கிடையாது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன், 1.5 லிட்டர் K9K டீசல் இன்ஜின் மாடல் மட்டுமே புதிய ஃப்ளூயன்ஸில் உள்ளது. விலை 14 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது!

விற்பனைக்கு வந்தது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ!

மோட்டார் நியூஸ்

மார்ச் மாதம் முதல் இந்தியாவில் 3 சீரிஸ் ஜிடி காரை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது பிஎம்டபிள்யூ. 320d என்ற வேரியன்ட் மட்டுமே இப்போது விற்பனைக்குவந்துள்ளது. இதில், 184 hp சக்தியை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் இருக்கிறது. 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ள இந்த 3 சீரிஸ் ஜிடி, முதலில் இருந்தே சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. சாதாரணமாக, 520 லிட்டர் டிக்கி கொள்ளளவு கொண்டிருக்கும் இந்த கார், பின்னிருக்கைகளை முழுவதும் மடித்துவிட்டால், இந்த கொள்ளளவு 1,600 லிட்டராக அதிகரித்துவிடும். பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ காரின் சென்னை ஆன் ரோடு விலை 52,49,935 ரூபாய்.

Blaupunkt நிறுவனத்துடன் கைகோர்த்தன என்என்ஜி  மற்றும் ஏஎன்எஸ் நிறுவனங்கள்!

மோட்டார் நியூஸ்

என்என்ஜி (NNG) மற்றும் ஏஎன்எஸ் (ANS) ஆகிய இரண்டும் ஹங்கேரி - இந்தியா  கூட்டணி நிறுவனங்கள். நேவிகேஷன் சார்ந்த தொழிலில் உள்ள இந்த நிறுவனங்கள், சமீபத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த Blaupunkt நிறுவனத்துடன் இந்திய சந்தையில் கைகோர்த்துள்ளன.

Blaupunkt நிறுவனம் அறிமுகப்படுத்திய 'சான்டியாகோ 530’(San Diego 530 ) ஆஃப்டர் மார்க்கெட் மல்ட்டிமீடியா சிஸ்டத்தில் இருக்கும் நேவிகேஷன் மேப்புகள் அனைத்தும் என்என்ஜி மற்றும் ஏஎன்எஸ் நிறுவனங்களால் அளிக்கப்பட்டவைதான். இதில், இந்தியாவின் 18,00,000 கி.மீ தூரத்துக்கு சாலை வழித்தடங்களும், 67,00,000 பாயின்ட் ஆஃப் இன்ட்ரெஸ்ட்டுகளும் (ஏடிஎம், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்றவை) இந்தக் கருவியில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளன. மூன்று ஆண்டுகளாக இந்தியச் சாலைகளை ஆராய்ந்து, இந்தக் கருவியில் வழித்தடங்கள் மற்றும் பிற பயன்பாடுகள் பதிவேற்றம் செய்யபட்டுள்ளதாகவும்,  இந்தியாவைச் சேர்ந்த பெரிய வாகன நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட பேச்சு வார்த்தைகள் நடப்பதாகவும், ஸ்மார்ட் போன்களை இந்தக் கருவியுடன் இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் என்என்ஜி மற்றும் ஏஎன்எஸ் நிறுவனத்தார் தெரிவித்தனர்.

- செய்தி, படம்  க.பாலாஜி

MEQUEST 2014

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு சிம்போஸியம்தான் அறிவுத் திருவிழா. ஏனெனில், இதில்தான் தங்களது அறிவு, திறமை, ஆளுமை ஆகியவற்றை உற்சாகத்துடன் வெளிப்படுத்த முடியும். அப்படி ஓர் உற்சாகத் திருவிழா கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், கடந்த மாதம் 14, 15 தேதிகளில் 'மெக்குவெஸ்ட்-2014’ என்ற பெயரில் சிம்போஸியம் நடைபெற்றது. பேப்பர் பிரசன்டேஷன், கான்செப்ட் மாடல் ஆகியவற்றில் மாணவர்களின் படைப்புத் திறன் வெளிப்பட்டது. ஆர்.சி கார் போட்டியும் விறுவிறுப்பாக நடந்தது.  

மோட்டார் நியூஸ்

இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது, சூப்பர் பைக்குகளின் அணிவகுப்புதான். அபூர்வமாக சாலையின் தென்படும் பல சூப்பர் பைக்குகள், அன்றைக்கு கல்லூரியில் அணிவகுத்து நின்றிருந்தன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம் நம்மிடம் பேசியபோது, ''பொறியியல் மாணவர்களுக்கு ஆட்டோமொபைல் துறையில் புது வகை பைக்குகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் கிடைக்கும் பைக்குகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சூப்பர் பைக்குகள் பற்றியும் பொறியியல் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்ற முறையில், இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் பல்துறை அறிவு கிடைக்கும் என்பதுதான் நோக்கம்!' என்றார்.

-  ஞா.சுதாகர், படம்:  ர.சதானந்த்

வாஹனா-14

மோட்டார் நியூஸ்

கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில், திருவிழாக் கொண்டாட்டமாக இருந்தது. காரணம், ஆட்டோமொபைல் துறையின் வாஹனா’14 டெக்னிக்கல் சிம்போஸியம்தான். முதல் நாளில் தொழில்நுட்பக் கருத்தரங்கும், இரண்டாம் நாளில் ஆட்டோ எக்ஸ்போவும் நடந்தது. அங்கு வந்திருந்தவர்களுக்கு லேட்டஸ்ட் மாடல் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. மோரிஸ், டாட்ஜ் போன்ற கிளாஸிக் கார்களும் இதில் பங்குபெற்றன. CAD மாடலிங், கார் ஸ்கெட்சிங் போன்ற போட்டிகளும் நடத்தப் பட்டன. இறுதி நாளன்று சென்னையில் உள்ள சூப்பர் பைக்குகள் இங்கே ஒன்றுகூடி சூப்பர் பைக் ஷோ ஒன்றையும் நடத்தினர். ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் ஆட்டோமொபைல் துறையின் ட்ராக் காரும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

-  க.சுபராமன்

மோட்டார் நியூஸ்