
எல்லா சிசிக்களிலும் பல்ஸர் உண்டு. 160சிசியில் N சீரிஸில் போன ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமானது ஒரு பல்ஸர். என்னதான் பல்ஸரை லயித்துப் பேசினாலும், வாடிக்கையாளர்களிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன.
எல்லா சிசிக்களிலும் பல்ஸர் உண்டு. 160சிசியில் N சீரிஸில் போன ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமானது ஒரு பல்ஸர். என்னதான் பல்ஸரை லயித்துப் பேசினாலும், வாடிக்கையாளர்களிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன. அவற்றை இப்போது பல்ஸர் N160–ல் அதைப் பூர்த்தி செய்து விட்டது பஜாஜ். அவற்றில் முக்கியமானது, டூயல் சேனல் ஏபிஎஸ்.
இதன் மூலம் செக்மென்ட் ஃபர்ஸ்ட் எனும் அந்தஸ்தைப் பெறுகிறது N160. கூடவே, 300மிமீ மற்றும் 230 மிமீ டிஸ்க் பிரேக்ஸையும் கொண்டு பிரேக்கிங்கில் பக்கா மார்க் வாங்குகிறது பல்ஸர் N160. பல்ஸர் பாரம்பரியப்படி இல்லாமல், இது புது ப்ளாட்ஃபார்மில் தயாராகிறது.
பை ஃபங்ஷனல் ப்ரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ், மோனோ ஷாக் சஸ்பென்ஷன், இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கன்சோல், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எப்படிப்பட்ட சாலையிலும் கிரிப் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அகலமான செக்ஷன் கொண்ட 17 இன்ச் வீல்கள் என்று இந்த என்ட்ரி லெவலில் எக்ஸ்ட்ரீம் வசதிகள் அனைத்தையும் கொடுத்திருக்கிறது பஜாஜ். இந்த ஸ்ப்ளிட் சீட்கள், 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், அலாய் வீல்கள், டெயில் லைட்ஸ் என எல்லாமே பெரிய பல்ஸர் 250–யைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. N250–ல் இருப்பது மாதிரியே அண்டர் பெல்லியில் எக்ஸாஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். இதன் டிஜி–அனலாக் மீட்டரில் கடிகாரம், மைலேஜ் மீட்டர், டிஸ்ட்டன்ஸ் டு எம்ப்ட்டி மீட்டர், ரேஞ்ச், கியர் இண்டிகேட்டர் என எல்லாமே பார்த்துக் கொள்ளலாம்.

நான் இதை புனே சாலைகளில் ஓட்டியபோது, இதன் டைனமிக்ஸ் லெவலைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால், நான் அப்போது டூயல் சேனல் ஏபிஎஸ் அம்சத்தை அனுபவிக்க முடியவில்லை. இதையும் ஓட்ட ஆவலாக இருக்கிறது. ஏபிஎஸ் வசதியால் இது பழசைவிட 2 கிலோ எடை கூடியிருக்கிறது. புது எடை 154 கிலோ.
இந்த பல்ஸாில் 164.82 சிசி, 2 வால்வ், ஆயில்கூல்டு இன்ஜினும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் இருக்கிறது. இதன் பவர் 16bhp@8,750rpm. 14.65Nm@6,750rpm. இந்த செக்மென்ட்டுக்கு இது நல்ல பவர்தான். இது பல்ஸர் NS160–ன் பவரை விட 1.2bhp குறைவு. யமஹா FZ, டிவிஎஸ் அப்பாச்சி RTR, சுஸூகி ஜிக்ஸர் போன்றவற்றுக்குப் போட்டியாக வருகிறது N160.
ஆன்ரோடு விலை சுமார் 1.5 லட்சத்துக்கு 250 சைஸில் ஒரு 160 சிசி பைக் கிடைத்தால்… பசங்களுக்கு வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும்!