ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

KTM RC 390: பாதி ஸ்ட்ரீட் பைக்; மீதி ரேஸ் பைக்!

KTM RC 390|2022
பிரீமியம் ஸ்டோரி
News
KTM RC 390|2022

இது ஒரு ரேஸ் பைக்காக மட்டுமில்லாமல், கொஞ்சம் சிட்டி ரைடுக்கும் ஏற்றபடி உள்ளது. விலையில் மட்டும் கொஞ்சம் சமரசம் செய்தால், இந்த ரேஸ் பைக்கை ஸ்ட்ரீட் கம்யூட்டர்களும் விரும்புவார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்பு ‘கேடிஎம்’ இந்தியாவுக்கு வந்தது. அப்போது குறைந்த விலையில் அதிக பெர்ஃபாமன்ஸ் கொடுக்கும் ப்ரீமியம் பைக்காக இருந்தது. இதனால் கேடிஎம் பைக்குகள் நல்ல வரவேற்புடன் அதிக விற்பனையும் ஆனது. ஆரம்பத்தில் BS4-ல் வந்த கேடிஎம் பைக்குகள் அதன்பின் BS6 ஆக மாறியது. இப்போது இந்த 2022-ம் ஆண்டுக்கு ஏற்றபடி புதிய அப்கிரேடுடன் அறிமுகமாகியுள்ளது KTM RC 390.

கேடிஎம்-ன் RC மாடல் வெளியானதி லிருந்து ஒரே மாதிரியான டிசைன் பேட்டர்ன்களைத்தான் பயன்படுத்தி வந்தது கேடிஎம். ஆனால் இப்போது வெளியாகியுள்ள இந்த KTM RC 390 மாடல் முற்றிலும் வேறுபட்ட டிசைனில் உள்ளது. இந்த டிசைன் ஏற்கனவே 2022 KTM RC 200-ல் பார்த்திருப்போம். இது சிலருக்குப் பிடித்திருந்தது; சிலருக்குப் பிடிக்கவில்லை. பழைய டிசைன் பேட்டர்ன்தான் நன்றாக இருந்தது என்றும் சிலர் கூறினார்கள். ஆனால் காலம் மாறும்போது நாமும் மாறவேண்டும்; டிசைனும் மாறவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது; எனவே இந்தப் புதிய டிசைனைக் கொண்டு வந்தோம் என்கிறது கேடிஎம்.

KTM RC 390|2022
KTM RC 390|2022

இதன் டிசைன் பற்றி சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘இதைப் பார்த்தவுடன் பிடிக்காது, பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’. உண்மையில், புகைப்படத்திலும் இணையதளத்திலும் பார்த்தபோது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது இதன் டிசைன். ஆனால் நேரில் வந்து பார்த்தபோது மிகவும் பிடித்திருந்தது. பார்ப்பதற்கு ரொம்பவும் பிரீமியமாகத் தெரிந்தது.

பழைய மாடலுக்கும் புதிய மாடலுக்கும் என்ன வித்தியாசம்?

பைக்கில் உட்கார்ந்தவுடன் முதலில் ஃபீலாவது இதன் எடைதான். பழைய மாடலில் இருப்பதைவிட 3.7கிலோ குறைந்து 172 கிலோ எடையில் உள்ளது இந்தப் புதிய KTM RC 390. (பெட்ரோல் இல்லாமல்). பெட்ரோல் நிரப்பினால் ஒரு கிலோ மட்டுமே எடை கூடுதலாக இருக்கும். ஏனென்றால் முன்பிருந்த பெட்ரோல் டேங்க் 11 லிட்டர், இப்போது 13.7 லிட்டர் கொள்ளளவு என அதிகரித்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக பெட்ரோல் இல்லாமல் பைக் டிரையாக இருக்கும்போது 3.7கிலோ வரை இதன் எடை குறைக்கப்பட்டுள்ளது. எந்தப் பாகங்களில் எப்படியெல்லாம் குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

முக்கியமாக பைக்கின் கீழ்ப்பகுதிகளில் அதிகமாக எடை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதன் அலாய் வீலில் 1.1 கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்க் பிரேக்கில் எடை சிறப்பாகப் பரிமாறப்பட்டுள்ளது. பைக்கின் கீழ்ப்பகுதிகளில் எடை குறைவதால் பைக் டிராக்கில் வேகமாகச் செல்லும்போது, பைக்கை இடப்புறம் வலப்புறம் என திருப்பிக் கையாளுவது எளிமையாக இருக்கும்.

KTM RC 390: பாதி ஸ்ட்ரீட் பைக்; மீதி ரேஸ் பைக்!

மேலும் இதில் TFT- மல்ட்டி பங்க்ஷனல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனை கனெக்ட் செய்து கொள்ளலாம். இதன் முந்தைய மாடலில் உள்ள சீட்டைவிட இது ரொம்பவும் மென்மையாக உள்ளது. இதுதான் பழைய மாடலுக்கும் புதிய மாடலுக்கும் வெளித்தோற்றத்தில் உள்ள வித்தியாசம்.

இன்ஜின்:

இதன் 373 சிசி இன்ஜினில் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் சிங்கள் சிலிண்டராக இருந்தாலும், இது 43.5 BHP பவரை வெளிப்படுத்துகிறது. இதன் டார்க் 36NM. மேலும் இதன் ஏர்பாக்ஸ் 40% அதிகரித்துள்ளதால் இதன் பெர்ஃபாமன்ஸ் சற்று அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் இதன் எக்ஸாஸ்ட் டிசைன் வித்தியாமான தோற்றத்துடன் அமைந்துள்ளது.

KTM RC 390: பாதி ஸ்ட்ரீட் பைக்; மீதி ரேஸ் பைக்!

ரைடிங் பொசிஷன்:

ரைடிங் பொசிஷனைப் பொருத்தவரை இதன் சீட்டிங் பொசிஷன் முன்பைவிடச் சற்று உயரமாக உள்ளது. முன்பு பைக்கின் மீது படுத்துக்கொண்டு ஓட்டுவதுபோல் இருக்கும். ஆனால் இது சற்று உயரமாக அமர்ந்து ஓட்டுவதுபோல் அமைந்துள்ளது. இதனால் லாங் ரைடு மட்டுமில்லாமல் கொஞ்சம் சிட்டி டிரைவிங்கிற்கு ஏற்றபடியும் உள்ளது. அது மட்டுமில்லாமல், இதன் ஹேண்டில் பாரை 14mm மேலேயும் கீழேயும் வசதிக்கேற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

KTM RC 390: பாதி ஸ்ட்ரீட் பைக்; மீதி ரேஸ் பைக்!

எலெக்ட்ரானிக்ஸ்:

இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது இதன் எலெக்ட்ரானிக்ஸ் பற்றித்தான். இதில் நிறைய அட்வான்ஸ்டு டெக்னாலாஜிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதலில் பார்க்க வேண்டியது IMU-சென்சார். இது ABS மூலம் பிரேக் அடிக்கும் போது ஏற்படும் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது. இரண்டாவதாக ட்ராக்ஷன் கன்ட்ரோல் டெக்னாலாஜி. இது பைக்கின் த்ராட்டிலை சட்டென்று முறுக்கும்போது ஏற்படும் வீல் ஸ்பின்னிங்கைக் குறைக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இதில் இரண்டு சென்சார்கள் உள்ளன. ஒன்று முன்பக்க வீலில் மற்றொன்று பின்பக்க வீலில் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள சென்சார், பின்பக்க வீல் சுழலும் வேகம் அறிந்து ட்ராக்ஷனைக் கன்ட்ரோல் செய்ய உதவுகிறது. இதனால் பைக்கின் கையாளுமை நன்றாகவே கன்ட்ரோல் செய்யப்படுகிறது.

மூன்றாவதாக உள்ளது - `Quick shifter’. இது கியர் ஸ்மூத்தாக மாறுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் எவ்வளவு வேகமாகச் சென்றாலும் ஈஸியாக கியரை மாற்றலாம். நான்காவதாக உள்ளது ஸ்லிப்பர் கிளட்ச். மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தநேரத்தில் கியரைக் குறைத்து கிளட்ச்சை விட்டால் சட்டென்று வீல் ஸ்கிட் ஆகி விபத்து ஏற்பட்டுவிடும்தானே! இதை எலெக்ட்ரானிக் மூலம் கன்ட்ரோல் செய்கிறது இந்த ஸ்லிப்பர் கிளட்ச். இப்படி ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்தப் புதிய KTM RC 390-ல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் முந்தைய மாடலை விட இதில் இன்ஜின் ரிஃபைன்மென்ட் ரொம்பவும் நன்றாகவே மேம்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் நம் இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டுள்ளது. கேடிஎம்-ன் ஸ்லோகனில் உள்ளதுபோல் ‘ரேஸ் பைக் இன் தி ஸ்ட்ரீட்’ என்பது உண்மைதான். இது ஒரு ரேஸ் பைக்காக மட்டுமில்லாமல், கொஞ்சம் சிட்டி ரைடுக்கும் ஏற்றபடி உள்ளது.

KTM RC 390: பாதி ஸ்ட்ரீட் பைக்; மீதி ரேஸ் பைக்!

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 3.14 லட்சம், சென்னைக்கு வரும்போது இதன் எக்ஸ் ஷோரூம் விலை 3.7 லட்சமாக இருக்கலாம். முந்தைய KTM RC 390-க்கும் இந்தப் புதிய KTM RC 390-க்கும் விலையில் நிறையவே வித்தியாசம் உள்ளது.

விலையில் மட்டும் கொஞ்சம் சமரசம் செய்தால், இந்த ரேஸ் பைக்கை ஸ்ட்ரீட் கம்யூட்டர்களும் விரும்புவார்கள். ஹேண்ட்பாரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.