கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

எலெக்ட்ரிக் ஏத்தர் 450X ... சூப்பர் ரைடிங் பார்ட்னர்!

ஏத்தர் 450X
பிரீமியம் ஸ்டோரி
News
ஏத்தர் 450X

ரீடர்ஸ் ரிவ்யூ: ஏத்தர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சதீஷ் குமார்
சதீஷ் குமார்

பெயர் சதீஷ் குமார்

பைக் ஏத்தர் 450X எலெக்ட்ரிக் Collector’s Edition

ஊர் சென்னை

வாங்கிய தேதி 24 ஜனவரி 2021

ஆன்ரோடு விலை 1.90 லட்சம்

ஓடோமீட்டர் ரீடிங் 500 கிமீ

தொழில் சுயதொழில்

பிடித்தது பெர்ஃபாமன்ஸ் (பிக்-அப்), ரேஞ்ச், LED லைட்ஸ், ஸ்மார்ட் கனெக்டட் வசதிகள்

பிடிக்காதது விலை, பெல்ட் சத்தம், மிரர் ஹவுஸிங்

``பைக்தாங்க எனக்கு எல்லாமே! மாசத்துக்கு ரெண்டு மூணு லாங் ட்ரிப் ஆவது போயிடுவேன்!’’ என்று சொல்லும் சதீஷ்குமார் - தனது கராஜில், ராயல் என்ஃபீல்டு 350, கவாஸாகி நின்ஜா 650, ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் என சூப்பர் பைக்ஸ் மற்றும் மாடர்ன் க்ரூஸர் என கெத்தாக நிறுத்தி வைத்துள்ளார்.

ஹைவேஸில் பறக்க சூப்பர் பைக்ஸ் ஓகே! ஆனாலும், சிட்டி ரைடிங்குக்கு காம்ப்பேக்ட்டாக, செல்லமாக, ஈஸி ரைடிங்குக்கு என்று ஒரு ஸ்கூட்டர் இருந்தால்தானே வசதி! அப்படித்தான் ஏத்தர் 450X பைக்கை புக் செய்து சிட்டிக்குள்… ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ஷோரூம் அனுபவம்

``முதலில் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக்னு ஏகப்பட்ட ஐடியா இருந்துச்சு. ஆனால், ஏத்தர்தான் சட்டுனு மனசுல நின்னுச்சு. மனசுல மட்டுமில்ல; சென்னையில் ஏத்தரை புக் பண்ண ஈஸியாவும் இருந்துச்சு. சென்னை ஏத்தர் ஷோரூம்ல 450X பெர்ஃபாமன்ஸ் அப்கிரேட் மாடலை டெஸ்ட் டிரைவ் பண்ணப் போனேன். ஷோரூம் அனுபவமே அற்புதமாக இருந்தது.

அப்புறமென்ன, ஒரு நல்ல நாளில் ஏத்தர் 450X-யை வீட்டுக்கு ஓட்டிட்டு வந்துட்டேன். என்ன, அந்த நல்ல நாள் வர்றதுக்கு நான் பத்து மாசம் வரை காத்திருந்தேன். அதாங்க, 10 மாசம் வரை வெயிட்டிங் பீரியட் ஏத்தருக்கு. ஆனால், பேண்டமிக் பீரியடும் இந்த நீண்ட வெயிட்டிங் பீரியடுக்கு ஒரு காரணமாக அமைந்து போனது.

ஏத்தர் 450X
ஏத்தர் 450X

ஏத்தர் ஸ்கூட்டரில் ஒரே ஒரு மைனஸ் - அதோட விலைதான். இது எல்லோருக்கும் எப்படி செட் ஆகும்னு தெரியலை. ஆனால், இப்போ எனக்கான ஸ்கூட்டராகிடுச்சு ஏத்தர் 450X’’ என்று தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பாஸிட்டிவ் நெகட்டிவ் பற்றி மேலும் பேச ஆரம்பித்தார் சதீஷ்.

ஓட்டுதல் அனுபவம்

``விலையைக் கேட்டு முதலில் ஷாக் ஆனேன். ஆனால், ஆக்ஸிலரேட்டரை முறுக்கும்போது அந்த விலைப் பிரச்னையெல்லாம் மறந்து போயிடுது. அப்படி ஒரு ரைடிங் அனுபவம். ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இவ்வளவு ஃபன் இருக்குமா என ஆச்சரியப்படுத்தியது ஏத்தர்.

முதலில் ஏத்தர் 450-யும் என் கண்ணில் பட்டது. ஆனால், ஏத்தர் 450X மாடலில் அதைவிட ரேஞ்ச் மற்றும் பவர் கூடுதலாக இருக்கும் என்றார்கள். அது நிஜம்தான். 450-யை விட பவர் பிரமாதமாக இருக்கிறது. காரணம், 450-ல் இருப்பது 2.71kWh லித்தியம் அயன் பேட்டரி. 450X-ல் இருப்பது 2.9kWh. அதேபோல் 450-ல் 5.4kW மோட்டார் சக்தி. இதில் 6kW. ஆக்ஸிலரேஷனில் இதுதான் வேகமாக இருந்தது. டாப் ஸ்பீடு 85 கிமீ வரை விரட்டினாலும் போகிறது.

இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், நான் வாங்கியுள்ளது 450X LIMITED Collector’s Edition Series 1 வேரியன்ட். இதில் கிளாஸி மெட்டாலிக் பிளாக் உடனான சிகப்பு ஆக்சென்ட்ஸ், இந்த ஸ்கூட்டரின் அழகை மேலும் மெருகேற்றுகிறது.

ஏத்தரில் பிடித்தது:

இதோட பெர்ஃபாமன்ஸ் வேற லெவல். லைட்டா த்ராட்டில் குடுத்தாலே போதும். சும்மா சீறிப் பாயுது ஏத்தர். இதில் Eco, Ride, Sports, Warp - இப்படி 4 ரைடிங் மோடுகள் கொடுத்திருக்காங்க! இதில் நமது தேவைக்கேற்ப பவரையும், மைலேஜையும் அதிகப்படுத்த முடியும்.

ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஓகே. மிரர் ஹவுஸிங் மட்டும் வீக்!
ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஓகே. மிரர் ஹவுஸிங் மட்டும் வீக்!

லித்தியம் அயன் பேட்டரி செம Power Packed. பில்லியன் ரைடரை வெச்சிக்க்டே ஏத்தரில் 85 கிமீ ஸ்பீடுல பறந்தேன். அடுத்து இதோட ரேஞ்ச். ஒரு சிங்கிள் ஃபுல் சார்ஜிங்கில் 85 கிமீ வரை ஓட்ட முடியும் என்பது மிகப் பெரிய ப்ளஸ். என்ன, பேட்டரி ஃபுல் சார்ஜ் பண்ண, கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆகும். என் வீட்டிலேயே சார்ஜிங் போர்ட் இன்ஸ்டாலேஷன் பண்ணியாச்சு. அது மட்டுமில்லாமல், போர்ட்டபிள் சார்ஜர் 10,950 ரூபாய்க்கு எக்ஸ்ட்ராவாக வாங்கியுள்ளேன். அடிக்கடி ட்ரிப் போவேன் என்பதால், இது எனக்கு ஒரு ஜாக்பாட்தான்.

சீட்டுக்கு அடியில் 22 லிட்டர் இடவசதி கொடுத்திருக்காங்க. இதில் ஒரு ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டை ஸ்டோர் பண்ண முடியுது. பூட் லைட் இருக்கிறது எக்ஸ்ட்ரா போனஸ்.

ஹைஸ்பீடில் விரட்டும்போது, ஸ்டெபிளிட்டி மற்றும் பில்டு குவாலிட்டி காம்போ நச் ரகம். டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் மற்றும் 12 இன்ச் வீல் தாறுமாறு கூட்டணி. பாடி பேலன்ஸில் மாஸ் காட்டுதுங்க. ஆடாமல் அசையாமல் பறக்க முடியுது ஹைவேஸில்.

ஏத்தரில் டிஸ்க் பிரேக்ஸ் செம ஷார்ப்.
ஏத்தரில் டிஸ்க் பிரேக்ஸ் செம ஷார்ப்.

முன்பக்கமும் பின்பக்கமும் டிஸ்க் பிரேக்ஸ்தான் என்பதால் சொல்பேச்சைக் கேட்டு சொன்ன இடத்தில் நிற்கிறது ஏத்தர். அப்டேட்ஸுக்கும் பஞ்சமில்லை. இந்த 7 இன்ச் டச் ஸ்கிரீன்ல இல்லாத இன்ஃபர்மேஷனே கிடையாது. கூகுள் மேப்ஸ், மியூசிக் கன்ட்ரோல் சிஸ்டம், கால் இன்ஃபர்மேஷன் என Feature-Packed ஆக அசத்துகிறது ஏத்தர் டேஷ்போர்டு. மொபைல் ஆப்பும் இருக்கு.

ஹெட்லைட்ஸ், டெய்ல் லைட்ஸ், இண்டிகேட்டர்ஸ் என அனைத்துமே LED மயம். செம பவரா இருக்கு வெளிச்சம். இதில் Follow Me Lights வசதி இருப்பது கூடுதல் சிறப்பு.

அப்புறம் ஏத்தரில் உள்ள subscription Plan எனக்குப் பிடிச்சிருக்கு. இதுல நிறைய நன்மைகள் இருக்கு, 3 E-Sim ஸ்கூட்டர்ல இருக்குறதால, கூகுள் மேப்ஸ் (GPS Tracking), பக்கத்தில் உள்ள Ather Power Grid Location, Ride Statistics, Anti-Theft function என அனைத்து Smart Connected Features-யையும் நம்ம மொபைல் ஏத்தர் ஆப் மூலமாகப் பார்க்கவும், கன்ட்ரோல் செய்யவும் முடியும். நான் 1 Year Subscription Plan போட்டிருக்கேன். இது ஆன்ரோடிலிருந்து எக்ஸ்ட்ராவாக 8,500 ரூபாய் ஆச்சு. ஆனால், இதில் சர்வீஸ் செலவு மிச்சம். எந்த ஏத்தர் சார்ஜிங்கிலும் ஃப்ரீயா சார்ஜ் போட்டுக்கலாம்.

முழுக்க முழுக்க எல்இடி மயம்...
முழுக்க முழுக்க எல்இடி மயம்...
22 லிட்டர் அண்டர்சீட் இடவசதி இருக்கிறது.
22 லிட்டர் அண்டர்சீட் இடவசதி இருக்கிறது.
மொபைல் ஆப் கன்ட்ரோல் உண்டு.
மொபைல் ஆப் கன்ட்ரோல் உண்டு.

பிடிக்காதது:

நெகட்டிவா ஏத்தர்ல சொல்லணும்னா ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு. சின்னச் சின்னக் குறைகள்தான். ஸ்டார்ட் பண்ணும்போது நாய்ஸே இல்லை. ஆனால், ரைடு செய்யும்போது பெல்ட் சவுண்ட் லைட்டா டிஸ்டர்ப் பண்ணுது. ஷோரூமில் ஆலோசனை கேட்கும்போது, ஆரம்பத்தில் லைட்டா சவுண்ட் இருக்கும்; ஆனா ரைடு பண்ணப் பண்ண கொறஞ்சிடும்னு சொன்னாங்க. மிரர் ஹவுஸிங் அந்த அளவுக்கு உறுதியா இல்லையோனு தோணுது. அட்ஜஸ்ட் பண்ணாலே கிராக் ஆகிறது. வாட்டர் வாஷ் செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. Subscription Plan- கொடுத்திருப்பது சிறப்பு அம்சம்தான். ஆனால், இந்த அதிக விலை எல்லோருக்கும் சரிப்பட்டு வருமானு தெரியலை.

என் தீர்ப்பு:

ஏகப்பட்ட வசதிகள் கொண்ட, ஒரு நல்ல பெர்ஃபாமன்ஸ் இ-ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்களுக்கு, நான் ஏத்தரைத் தைரியமாகப் பரிந்துரைப்பேன். விலை அதிகமாக இருந்தாலும், அதற்கு ஏற்றபடி எவ்வளவு வசதிகள். ஏத்தர், கீலெஸ் பட்டன் ஸ்டார்ட் கொண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை. பவர் ஃபுல் மோட்டார், நல்ல ரேஞ்ச், ஃபியூச்சரிஸ்டிக் டிசைன், ஸ்மார்ட் கனெக்ட் என அனைத்திலும் டிஸ்டிங்ஷன் பெறுகிறது ஏத்தர் 450X. இப்பொழுதுள்ள பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏத்தர் 450X செம தோஸ்த்!