Published:Updated:

சுற்றுச்சூழலுக்கு சோலார் பைக்கை ஓட்டவும்!

தமிழ், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

சந்த்தைப் பழிவாங்க நினைக்கும் ஹரிணி, அவனது பைக்கின் பெட்ரோல் டேங்க்கைத் திறந்து, ‘‘30 ரூபா செலவழிஞ்சாலும் பரவால்ல... இன்னிக்கு நீ செத்தடா!’’ என்று ஒரு கிலோ சர்க்கரையைக் கொட்டிவிட்டுச் செல்கிறாள். மறுநாள் எந்தப் பிரச்னையும் இன்றி ஹாயாக பைக்கில் வந்து இறங்கிய வசந்த், பெட்ரோல் டேங்க்கைத் திறந்து பிஸ்கட், தண்ணீர் பாட்டிலை எடுத்துச் சாப்பிட்டபடி, ‘‘என்னன்னே தெரியலைங்க... உள்ள ஒரே எறும்பா இருக்கு; சர்க்கரை எதுவும் சிந்திடுச்சானு தெரியலை!’’ என்று அப்பாவியாகச் சொல்ல, நெளிகிறாள் ஹரிணி. அப்போதுதான் தெரிகிறது, அது பெட்ரோலில் ஓடும் பைக் இல்லை; சூரிய ஒளியில் ஓடும் சோலார் பைக்!


- இப்படி ஒரு காட்சி, ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் செம அப்ளாஸ் அள்ளுகிறது. எல்இடி திரையில் நகரும் நம்பர் பிளேட், சோலார் பவரில் ஓடும் இன்ஜின், டேங்குக்குப் பதிலாக லாக்கர் என ரொம்பவே வித்தியாசமான பைக். ‘‘சோலார் பைக், செம ஐடியாவா இருக்கே..?” என்று அதன் டைரக்டர் ராம்பிரகாஷுக்குக் கைகொடுத்தோம்.

சுற்றுச்சூழலுக்கு  சோலார் பைக்கை ஓட்டவும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘மழை நீர் சேமிப்புத் திட்டம் மாதிரி, சூரிய ஒளியைச் சேமிக்கும் திட்டம் கொண்டுவரணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. தண்ணீரைப் போலவே சூரிய ஒளியையும் தினமும் நாம் வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கோம். இதைச் செயல்படுத்துறக்கு நாம என்ன அதிகாரத்துலயா இருக்கோம்? சரி; அட்லீஸ்ட் நம்ம படத்துலேயாவது காட்டுவோம்னு காட்டிட்டேன். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துல தனுஷ் வெச்சிருப்பாரே ஒரு பைக், அந்த மாதிரி காமெடியான பைக்குன்னுதான் கால்வாசி படம் வரைக்கும் இதை எல்லோரும் நினைச்சுட்டிருப்பாங்க. ஹீரோயின் பழிவாங்குற சீன்லதான் அது ஒரு சோலார் பைக்னு எல்லோருக்கும் தெரியும். கிளைமாக்ஸ்ல செல்போன் சிக்னல் வரவைக்கும்போது, மொத்தமா பவர் கட் ஆகுறப்போ, ஹீரோ இந்த பைக்கிலிருந்து கரன்ட் எடுக்கிற சீனுக்கும் நல்ல வரவேற்பு. ரொம்ப ஹேப்பியா இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம், வனராஜ்தான்!’’ என்று இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர் வனராஜைக் கைகாட்டினார்.

‘‘‘காமெடியாவும் இருக்கணும்; கதையோட ஹீரோவாகவும் இருக்கணும்; அப்படி ஒரு பைக் ரெடி பண்ணிக் கொடுங்க’னு டைரக்டர் என்கிட்ட சொன்னபோது, சட்டுனு எனக்கு ஞாபகம் வந்தது பஜாஜ் எம்80 பைக்தான். ஏன்னா, ஸ்கூட்டர் தவிர்த்து மத்த எல்லா பைக்லேயும் பெட்ரோல் டேங்க் முன்னாடி இருக்கும்; ஆனா, எம்80-ன் டிஸைன் இரண்டும் கலந்துகட்டி வித்தியாசமா இருக்கும். அதாவது, முன்னால இருக்கிற இன்ஜினுக்கு மேலே ஒரு காலி இடம் இருக்கும். இந்த இடத்துல பெட்ரோல் டேங்க் ஃபிக்ஸ் பண்ணி, லாக்கரா மாத்திட்டேன். இன்ஜின் தவிர்த்து ஃபேரிங், ஹெட்லைட், அலாய் வீல்னு சின்னச் சின்ன மாற்றங்கள் பண்ணினேன். பஸ்ஸில் இருக்கிறது மாதிரி பேட்டரி மூலமா இயங்கக்கூடிய ‘ரன்னிங் எல்இடி’ நம்பர் ப்ளேட் வெச்சேன். அடிப்படையில் நான் ஒரு இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட்ங்கிறதால, இது எல்லாமே எனக்குச் சுலபமா இருந்துச்சு. டைரக்டர் கேட்டபடி தவளை மாதிரி பைக்கை காமெடியா ரெடி பண்ணினேன்.

சுற்றுச்சூழலுக்கு  சோலார் பைக்கை ஓட்டவும்!

ஹீரோயிசம் பண்ணணும்னா, ஒரு டச் வேணுமே! அதுக்குத்தான் இந்த சோலார் ஐடியா. பின் சீட்டைக் கழட்டிவிட்டுட்டு, முதல்ல அந்த இடத்தில் பேட்டரி வைக்கலாம்னு முடிவு பண்ணேன். ‘பேட்டரி பைக்தான் இப்போ மார்க்கெட்ல இருக்கே. சோலார் பேனல் வைக்கலாம்’னு டைரக்டர் ஐடியா கொடுத்தார். சோலார் பைக்ல ஒரு முக்கியமான விஷயம் - இது புகை கக்காது. வெளிநாடுகளில் சோலார் காரே ஓடிக்கிட்டிருக்கும்போது, ஏன் சோலார் பைக் கொண்டுவர முடியாது?’’ என்று சவால்விடுகிறார் வனராஜ்.