Published:Updated:

சோலார் பைக்கில் சூப்பர் ரேஸ்!

ஞா.சுதாகர், படங்கள்: மு.குகன்

பிரீமியம் ஸ்டோரி

ல்லூரிகளில் ஆர்.சி கார் ரேஸ்கள் பிரபலமானதுபோல, தற்போது மினி பைக் ரேஸ்கள் நடத்தப்படுவது பரவலாகி வருகிறது. கோவை, கற்பகம் பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறையினர், இந்த ஆண்டுக்கான மினி பைக் போட்டியான RIDE 2015 என்ற நிகழ்ச்சியை நடத்தினர்.

‘மினி பைக் ரேஸ் என்பது அபூர்வமான ரேஸ். இந்தப் போட்டிக்கான பிரத்யேக பைக்குகளை மாணவர்களே உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த ரேஸின் முதல் விதி. 80cc, 60cc, எலெக்ட்ரிக் பைக்குகள், சோலார் பைக்குகள் என மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகளை நடத்தினோம்.

சோலார் பைக்கில் சூப்பர் ரேஸ்!

‘‘பஞ்சாப், கேரளா உட்பட இந்தியா முழுவதும் இருந்து 106 பொறியியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் தயாரித்த பைக்குகளோடு அணிகளாக போட்டியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிற்கும் எப்படிப்பட்ட பைக்குகள் தயாரிக்கப்பட வேண்டும் என விதிமுறையும் கொடுத்து இருந்தோம். அதன்படி 80 மற்றும் 60cc பைக்குகளின் அதிகபட்ச வேகம் 60 கி.மீ வரை மட்டுமே இருக்க வேண்டும். சோலார் பைக்குகள் 20 கி.மீ வரை மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகள் 25 கி.மீ வரை அதிகபட்ச வேகம் இருக்கலாம். இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் வெற்றிப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, பெனால்ட்டி வழங்கப்படும்!” என உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே போனார், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான வேலரசன்.

80cc பிரிவில் கற்பகம் கல்லூரி மாணவர்களும், 60cc பிரிவில் பாவை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும், எலெக்ட்ரிக் பைக் பிரிவில் வேல்டெக் பல்கலைக்கழக மாணவர்களும், சோலார் பைக் பிரிவில் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம் கல்லூரி மாணவர்களும் முதல் இடம் பிடித்தனர்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு