Published:Updated:

செக்கா தி சாம்பியன்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

>>சார்லஸ்

 ##~##
செக்கா தி சாம்பியன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

றுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயம். இன்னும் மூன்று ரேஸ் போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில், சாம்பியன் பட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறார் அல்தியா டுகாட்டி அணியின் கார்லோஸ் செக்கா! 

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்- ஜெர்மனி

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் பத்தாவது சுற்று ஜெர்மனியின் நர்பர்கிரிங் ரேஸ் மைதானத்தில் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்து, ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார் கார்லோஸ் செக்கா. யமஹா அணியின் யூஜின் லாவெர்ட்டி இரண்டாவது இடத்தில் இருந்தும், ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

ரேஸ்-1

மிகவும் அபாயகரமான ரேஸ் டிராக்கான நர்பர்கிரிங் மைதானத்தில் விபத்துகளின் அறிகுறிகளோடு ரேஸ் துவங்கியது. இதற்கிடையே தகுதிச் சுற்றில் மூன்றாவது இடம் பிடித்திருந்தாலும், பயிற்சியின்போது இடது காலில் காயம் ஏற்பட்டதில் மேக்ஸ் பியாஜி ரேஸில் கலந்து கொள்ளவில்லை. முதல் சுற்றில் வேகமாக இருந்த ஹாகாவைத் தோற்கடித்து முதலிடத்துக்கு முன்னேறினார் கார்லோஸ் செக்கா. அதன் பிறகு செக்காவை யாராலும் பிடிக்க முடியவில்லை. 20 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில், வெற்றிக் கோட்டை தனது டுகாட்டியால் முதலில் தொட்டு வெற்றி பெற்றார் செக்கா. யமஹா அணியின் மார்க்கோ மெலாண்ட்ரி இரண்டாவது இடமும், நோரியூக்கி ஹாகா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

செக்கா தி சாம்பியன்!

ரேஸ்-2

ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ரேஸாக முடிந்தது ரேஸ்-2. மழையின் குறுக்கீட்டால் ஏழு லேப்புகள் குறைக்கப்பட்டு 13 லேப்புகள் வரையே பந்தயம் நடைபெற்றது. இதில், விபத்து மற்றும் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நோரியூக்கி ஹாகா, டமடா, ஃபெப்ரிஸியோ, ஜேம்ஸ் டோஸ்லேண்ட், அட்சின்சன், கேமியர் என ஆறு ரேஸ் வீரர்கள் போட்டியில் இருந்து விலகினர். இதற்கிடையே செக்காவை முந்திச் சென்று கொண்டிருந்தார் கத்துக்குட்டி அணியான கவாஸாகியின் டாம் சைக்ஸ். செக்கா எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். ரேஸ் முடிவுற்ற 13-வது லேப்பின்போது, முதல் இடத்தில் இருந்த டாம் சைக்ஸ் முதலிடம் பிடித்து வெற்றி பெற, லிபர்ட்டி ரேஸிங் அணியின் குண்டோலி இரண்டாவது இடமும், லிபர்ட்டி அணியின் மற்றொரு வீரர் ஸ்மிர்ஸ் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், சாம்பியன்ஷிப் பட்டியலில் டுகாட்டியின் கார்லோஸ் செக்கா 376 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். யமஹா அணியின் மார்கோ மெலாண்ட்ரி 302 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி 281 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

செக்கா தி சாம்பியன்!

இன்னும் மூன்று சுற்றுகளே மீதம் இருப்பதால், கார்லோஸ் செக்கா சாம்பியன் பட்டம் வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் பதினோறாவது சுற்று, செப்டம்பர் 25-ம் தேதி இத்தாலியில் நடந்து முடிந்திருக்கும்!