Election bannerElection banner
Published:Updated:

மேஸ்ட்ரோவில் ஒரு ரவுண்டு!

மேஸ்ட்ரோவில் ஒரு ரவுண்டு!
மேஸ்ட்ரோவில் ஒரு ரவுண்டு!

ரீடர்ஸ் ரிப்போர்ட்: ஹீரோ மேஸ்ட்ரோ தமிழ் , படங்கள்: ஆ.முத்துக்குமார்

பீஸ் டியூட்டிக்கு ஸ்கூட்டியில் பறக்கும் பியூட்டி பொண்ணுங்க, அப்பாச்சி ஓட்டும் அண்ணாச்சிங்க, கலகல கல்லூரிப் பசங்க என்று எல்லோரையும் டார்கெட் வைத்துக் களமிறங்கியுள்ளது ஹீரோவின் மேஸ்ட்ரோ எட்ஜ். பழைய மேஸ்ட்ரோதான் இப்போது புது ‘மேஸ்ட்ரோ எட்ஜ்’ ஆக மாற்றம் கண்டு, களமாடத் தயாராகி இருக்கிறது. பழசுக்கும் புதுசுக்கும் என்ன வித்தியாசம்?

‘‘இந்தமுறை மேஸ்ட்ரோவுக்கு நாங்கதான் மார்க் போடுவோம்!’’ என்று சத்தமின்றி மலர்ந்த ஒரு சனிக்கிழமை காலையில், மேஸ்ட்ரோ முன் மலர்ந்தனர் இந்திரா ரகுநாதனும் மீனாட்சியும். வியர்க்க விறுவிறுக்க பாதி சென்னை முழுக்க ஒரு மினி ரவுண்ட் அடித்துவிட்டு, மேஸ்ட்ரோவுக்கு சரமாரியாக டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்தனர் இருவரும்.

மேஸ்ட்ரோவில் ஒரு ரவுண்டு!
மேஸ்ட்ரோவில் ஒரு ரவுண்டு!

ஸ்டைல், டிஸைன்

மீனாட்சி: நான் அந்தமான். இப்போ சென்னை போரூர்ல வேலை செய்றேன். என்னோட அண்ணா, ஹீரோ ஹங்க் வெச்சுக்கிட்டு ஓவரா சீன் போடுவான். அதுக்காகவே ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்கிட்டேன். இதுவரைக்கும் ஸ்கூட்டி பெப், ஆக்டிவா ஓட்டியிருக்கேன். மேஸ்ட்ரோ டிஸைன், பார்த்தவுடனே ஆண்களுக்குனு அப்பட்டமா தெரியுது. அதிலும் டெயில் லைட் டிஸைன், ஆண்களுக்கான அக்மார்க் டிஸைன். அந்தளவு ஸ்போர்ட்டி. மேட் ஃபினிஷிங் செம ஸ்டைலிஷ். ஆனா, இது எல்லோருக்கும் பிடிக்குமானு தெரியலை. இதுல அழுக்கு அவ்வளவா தெரியாதுனு சொல்றாங்க!

இந்திரா: அதேதான்... மேட் ஃபினிஷிங் எனக்கு செட் ஆகாது. பளபளன்னு கிளாஸி டிஸைன்தான் என்னோட சாய்ஸ். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸைன் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஸ்கூட்டியிலேயே சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டரோட பீப் சவுண்டும் இருக்கு. ஆனால், இதில் வெறும் இண்டிகேஷன் மட்டும்தான் இருக்கு. சவுண்ட் கேட்டாதானே அலெர்ட்டா இருக்க முடியும். லெஃப்ட்/ரைட் இண்டிகேட்டருக்கு, அந்தந்தப் பக்கத்திலேயே டிஸ்ப்ளேவில் இண்டிகேட்டர் இருப்பது, ஓட்டும்போது கன்ஃப்யூஸன் வராது. சீட் நல்லா அகலமா இருக்கு. இரண்டு பேர் ஈஸியா பயணிக்கலாம். பின் பக்கம் LED டெயில் லைட் சூப்பர்.

இன்ஜின்

மீனாட்சி: ஹோண்டா உதவி இல்லாமல், ஹீரோவே தயாரிச்ச 4 ஸ்ட்ரோக், 110 சிசி இன்ஜின்னு மோ.வி.யில் படிச்சேன். 8.31bhp பவர் ஓகே. ஹோண்டாவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்ததே அதோட பட்டர் ஸ்மூத் இன்ஜின்தான். மேஸ்ட்ரோவிலும் பட்டர் ஸ்மூத்னெஸ் தெரியுது. 65 கி.மீ ஸ்பீடில்கூட வைப்ரேஷன் இல்லை. சென்னை சிட்டியில் என்னால டாப் ஸ்பீடு செக் பண்ண முடியலை. கிட்டத்தட்ட 85 கி.மீயாவது போகும்னு நினைக்கிறேன். மைலேஜ் 45 வந்தால், என்னோட சாய்ஸ் மேஸ்ட்ரோதான்.

இந்திரா: எனக்கு இன்னும் கொஞ்சம் பிக்-அப் வேணுமோன்னு தோணுது. பசங்களிடம் இது எந்தளவு பிக்-அப் ஆகும்னு தெரியலை. CVT கியர்பாக்ஸ் நல்லா செயல்படுது. லோ, மிட் ரேஞ்சில் சூப்பர். ஹை ஸ்பீடு நானும் போகலை. ஸ்கூட்டரை ஓட்டும்போது, செம சாஃப்ட்! என் காதல் கணவரைப் பின்னால உட்கார வெச்சு, மேஸ்ட்ரோவில் ஹைவேஸ்ல ஒரு ஜாலி ரைடு அடிச்சா நல்லா இருக்கும்னு கை பரபரக்குது.

மேஸ்ட்ரோவில் ஒரு ரவுண்டு!

சிறப்பம்சங்கள்

மீனாட்சி: வசதிகள்னு வரும்போது மஹிந்திரா கஸ்ட்டோவை அடிச்சுக்க முடியாது. ஆனா, எல்லாத்துலேயும் அப்படி எதிர்பார்க்க முடியாது இல்லையா? மேஸ்ட்ரோவைப் பொறுத்தவரை எங்களை ரொம்பக் கவர்ந்த விஷயம் - சீட்டுக்கு அடியில் இருக்கும் மொபைல் சார்ஜிங் பாயின்ட். அப்புறம் கீழே எரியும் சின்ன லைட், இரவு நேரத்துல ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். டிஜிட்டல் ஃப்யூல் மீட்டர், ட்ரிப் மீட்டர் ஓகே. ஆனால், ஸ்பீடோ மீட்டரும் டிஜிட்டலில் கொடுத்திருக்கலாம். பிரேக் லாக் கிளாம்ப் இருக்கிறதால, ேமடு-பள்ளங்கள்ல ஸ்கூட்டரை ஈஸியா பார்க் பண்ணலாம்.

இந்திரா: சீட் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் 22 லிட்டர் என்பது, நல்ல அதிகமான இடவசதி. ஆனால், ஃப்ளாட் ஃப்ளோர் டிஸைன் இல்லை. அதனால, ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் வைக்க முடியலை. மேஸ்ட்ரோவில் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் - பெட்ரோல் டேங்க் பின்பக்கம் இருப்பதுதான். இக்னீஷன்லேயே சாவியை இடதுபுறமா திருப்பினா, டெயில் லைட்டுக்கு மேல இருக்குற டேங்க் ஓப்பன் ஆகிடுது. அதுக்குள்ள ஒரு மூடி இருக்குறது இன்னும் சேஃப்டி. வழக்கம்போல், ஹேண்ட் பேக் மாட்டுறதுக்கு ஹூக் இருப்பது ஓகே. ஆனால், ஆப்ஷனலா வர்ற முன்பக்க பாக்ஸ் நிச்சயம் காலை இடிக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்ல, டிஜிட்டல் சர்வீஸ் இண்டிகேட்டர் கொடுத்திருப்பது அருமை.

ஓட்டுதல் தரம், கையாளுமை

மீனாட்சி: என்னதான் ஸ்டைல், சிறப்பம்சங்கள் இருந்தாலும், ஒரு ஸ்கூட்டருக்கு ரைடிங்கும் ஹேண்ட்லிங்கும்தான் முக்கியம். அந்த வகையில் என் உயரத்துக்கு மேஸ்ட்ரோவை ஹேண்டில் பண்றதுக்கு ஈஸியா இருக்கு. ரைடிங் பொசிஷன் ஓகே! முன் பக்கம் 12 இன்ச்; பின் பக்கம் 10 இன்ச் வீல்களில் கிரிப் ஓகே! நல்லவேளை - ட்யூப்லெஸ் டயர் கொடுத்திருக்காங்க! ஹோண்டா மாதிரியே கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறதால, பிரேக் பிடிக்கும்போது ஸ்கிட் ஆகிடுமோனு கவலைப்பட வேண்டியதில்லை. ஆனா, பொண்ணுங்களுக்கு டிரம் பிரேக்ஸே போதும்னு நினைச்சுட்டாங்களோ என்னவோ! ஆக்டிவா 125, வீகோ, ஏவியேட்டர் மாதிரி முன் பக்கம் டிஸ்க் கொடுத்திருக்கலாம்.

இந்திரா: நான் லவ் மேரேஜ். எனக்கு, என் கணவர் பைக் ஓட்டுற ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். என் கணவருக்கு நான் ஸ்கூட்டர் ஓட்டுறது பிடிக்கும். இப்போ வரைக்கும் லெட்ஸ், ஜெஸ்ட் இதுதான் என்னோட சாய்ஸ். ஏன்னா, நான் ஹைட் /வெயிட் கம்மி. ஆனால், மேஸ்ட்ரோவின் 110 கிலோ எடையை என்னால சமாளிக்க முடியலை. ஹேண்ட்லிங் எனக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. டூயட் இதைவிட 6 கிலோ அதிகம். டூயட்டில் மெட்டல் பாடி; மேஸ்ட்ரோவில் ஃபைபர் பாடி. பில்டு குவாலிட்டி சூப்பர். மஹிந்திரா கஸ்ட்டோ மாதிரி சீட் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுத்தா பொண்ணுங்களுக்கு மேஸ்ட்ரோ நல்ல சாய்ஸா இருக்கும். பிரேக்கிங் ஓகே. பின் பக்கம் டிரம்மை யூஸ் பண்ணும்போது, முன் பக்கமும் பவர் போகுது. மேஸ்ட்ரோவின் அசத்தல் ரைடிங்குக்கு முக்கியக் காரணமே, இதோட முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன்தான். பின்பக்கம் மோனோ ஷாக்கும் அருமை.

தீர்ப்பு

மீனாட்சி: ஃபைபர் பாடி, மேட் ஃபினிஷிங் டிஸைன், சார்ஜிங் பாயின்ட், சீட்டுக்கு அடியில் லைட் போன்ற விஷயங்கள் அருமை. டூயட்டைவிட 6 கிலோ குறைவு என்பது ப்ளஸ். என் போன்றவர்களுக்கு ஹேண்ட்லிங், டிரைவிங் பக்கவாக இருக்கிறது. என் பார்வையில் மேஸ்ட்ரோ ‘Pass’ Boss.

இந்திரா: ஹோண்டாபோல் காம்பி பிரேக்ஸ் இருப்பது ப்ளஸ். இருந்தாலும் டிஸ்க், ஃபுல்லி டிஜிட்டல் டயல்ஸ், சீட் அட்ஜஸ்ட் போன்ற வசதிகளும் கொடுத்திருக்கலாம். விலையும் மைலேஜும் ஓரளவு ரீஸனபிளாக இருந்தால், மேஸ்ட்ரோவுக்கு என் ஓட்டு நிச்சயம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு