மேஸ்ட்ரோவைத் தொடர்ந்து ஹீரோவின் டூயட் ஸ்கூட்டரையும் முறுக்கினார்கள் வாசகர்கள். டூயட்டுக்கு டெஸ்ட் ரிப்போர்ட் அளித்தவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி., எலெக்ட்ரானிக் மீடியா மூன்றாம் ஆண்டு படிக்கும் கில்லிகள்!

கே.கபிலா

பயன்படுத்தும் வாகனம்:

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

டூயட்டின் தோற்றம், எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைக்கும் அளவுக்கு இல்லை. ஆனால், இந்த விலையில் கிடைக்கும் ஸ்கூட்டர்கள் அனைத்துமே இப்படித்தான் இருப்பதால், ஓகே. டூயட் பார்ப்பதற்கு ஹெவியான ஸ்கூட்டர் போலத் தெரிந்தாலும், ஓட்டுவதற்கு ஈஸியாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனது உயரம் மற்றும் உடலமைப்புக்குப் பொருத்தமாக இருக்கும் ஸ்கூட்டி பெப்புடன் ஒப்பிடும்போது, இதன் சீட் உயரம் அதிகமாக இருப்பது நெருடல். ஆக்டிவாவைப் பார்த்துச் சலித்தவர் களுக்கு, டூயட் ஒரு மாற்றாக இருக்கும்.

ஆர்.வர்ஷா

பயன்படுத்தும் வாகனம்:

சுஸூகி ஆக்ஸஸ்

ஆக்ஸஸ் ஸ்கூட்டர் பார்ப்பதற்குக் கொஞ்சம்தான் ஆக்டிவாபோல இருக்கும். டூயட்டைப் பார்ப்பவர்கள், இதனை மற்றோரு ஆக்டிவா வேரியன்ட்டாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ய்புகள் அதிகம். மேலும், உயரமானவர்கள் மற்றும் உடல் பருமனானவர்களுக்கு, இந்த ஸ்கூட்டர் சிறிதாகவும், வசதி குறைவாகவும் இருக்கும். பிக்-அப்புக்குப் பெயர் பெற்ற ஆக்ஸஸுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், டூயட்டின் செயல்பாடு பரவாயில்லை ரகம்தான். ஆனால், ஆக்ஸஸைவிட இதில் கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ளன. தற்போது இருக்கும் ஸ்கூட்டர் மாடல்களைவிட, டூயட் தனித்துத் தெரியும் வகையில் இல்லை என்பது என் கருத்து.

ஜி.ரேஷ்மா

பயன்படுத்தும் வாகனம்:

ஹோண்டா ஆக்டிவா

ஆக்டிவாவைப்போல டல்லாக இல்லாமல், நல்ல டிஸைனுடன் ஈர்க்கிறது டூயட். டிஜிட்டல் ஸ்பீடோ, USB சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்கள் அளிக்கப்பட்டிருப்பது உபயோகமாக இருக்கிறது. நல்ல சஸ்பென்ஷன் மற்றும் சொகுசான இருக்கையால், ஓட்டுதல் அனுபவம் நன்றாக இருந்தாலும், ஆக்டிவாவைப்போலவே எடை அதிகமாக இருப்பதால், டூயட்டைக் கையாள்வது சுலபமாக இல்லை. ஹோண்டாவின் இன்ஜின் போலவே இதிலுள்ள இன்ஜினும் ஸ்மூத்தாக இயங்குகிறது. வீட்டில் எனது அப்பாவும் ஸ்கூட்டர் பயன்படுத்துவார் என்பதால், டூயட்டை வீட்டில் பரிசீலிக்கலாம்.

சி.விக்னேஷ் குமார்

பயன்படுத்தும் வாகனம்:

ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர்

டூயட்டின் டிஸைன் ஆக்டிவாவைப் போலவே இருந்தாலும், கலர் ஆப்ஷன்கள் சிறப்பாக இருப்பதால், இது ஒரு குறையாகத் தெரியவில்லை. விலை அதிகமான எனது பைக்கில் இல்லாத டிஜிட்டல் ஸ்பீடோ, விலை குறைவான டூயட்டில் இருக்கிறது. இன்ஜின் நல்ல ஸ்மூத். பைக் போலவே டூயட்டின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் இருப்பதால், ஸ்கூட்டரின் கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரம் நன்றாக இருக்கிறது. நான் மற்றொரு ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பை வாங்க வேண்டிய தேவை இருந்தால், அது டூயட் ஸ்கூட்டராகத்தான் இருக்கும்.