“கரடுமுரடுப் பாதையிலே, செம்ம பைக்கு... செம்ம பைக்கு” எனும் விளம்பரப் பாடலைக் கேட்டவர்களுக்கு, பஜாஜ் M80 ஸ்கூட்டரை மறக்க முடியாது. ஒரு காலத்தில் ‘லோடு வண்டி’ என அழைக்கப்பட்ட இது, இப்போது ‘ஓல்டு வண்டி’யாக மாறிவிட்டது. ஆனாலும் M80 உரிமையாளர்கள், அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் அக்கறையும் குறையவே இல்லை.

1981-ம் ஆண்டு பஜாஜ் முதலில் அறிமுகம் செய்த ஸ்கூட்டர் M50. இது 50 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜினைக்கொண்டது.அப்போது பரபரப்பாக விற்பனையான டிவிஎஸ்50 மொபெட்டுக்குப் போட்டியாகக் கருதப்பட்ட பஜாஜ் M50, அதுவரை பார்த்திராத புதுவகை டிஸைனுடன் இருந்தது. ஏனென்றால் இது மொபெட், ஸ்கூட்டர், ஸ்கூட்டரெட், பைக் என எந்த வகைக்குள்ளும் வராத ஸ்டெப்த்ரூ வாகனமாக இருந்தது. ஆனால், ‘இதன் சக்தி போதவில்லை’ என்ற வாடிக்கையாளர்களின் குறையைப் போக்க, 1986-ம் ஆண்டுவாக்கில் M80 எனும் 75 சிசி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. அதாவது, M80 வாகனத்தின் டிஸைன் ஹோண்டாவின் பிரபல மாடலான ‘கப்’ எனும் வாகனத்தின் டிஸைனை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் சக்தியுடன் வந்த M80, டூவீலர் மார்க்கெட்டில் பட்டையைக் கிளப்பியது. பட்டிதொட்டி எங்கும் பறக்கும் வாகனமாக றெக்கை கட்டியது.

மாசுக் கட்டுப்பாடு அளவுகள் நம்நாட்டில் அமல்படுத்தப்பட்டபோது, 2 ஸ்ட்ரோக் வாகனங்களின் தயாரிப்பைக் கைவிட வேண்டி வந்தது. அதேசமயம், M80 மாடலைக் கைவிடாமல் 4 ஸ்ட்ரோக் இன்ஜின்கொண்ட M80 வாகனத்தை பஜாஜ் அறிமுகம் செய்தது. ஆனால், 2 ஸ்ட்ரோக் வாகனத்துக்கு இருந்த பல சாதகமான அம்சங்கள் இதில் இல்லை என்பதால், மார்க்கெட்டில் நிலைக்க முடியவில்லை. இன்றைக்கும் லோடு வண்டியாக சாலையில் காணும் M80 ஸ்கூட்டருக்கு, சந்தையில் மதிப்பு உண்டு.

பஜாஜ் M80 ஸ்கூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த சரவணனிடம் பேசினேன்.

வாங்கிய நினைவு

“1999-ம் ஆண்டு 22,000 ரூபாய்க்கு இதை வாங்கினேன். அந்தக் காலத்தில் இதுதான் எங்களுக்கு பல்ஸர். ஏறக்குறைய எல்லா வியாபாரிகளும் இதைத்தான் வாங்கினார்கள். பொருட்களை ஏற்றிச் செல்லும்போது நின்றுவிடுமோ, பழுதாகிவிடுமோ என எந்த பயமும் இல்லாமல் செல்லலாம். என் வியாபாரத் தேவைகளுக்காக வாங்கிய இதில் கணக்கில் அடங்காத அளவுக்கு லோடு ஏற்றிவிட்டேன்; ஊர் ஊராகச் சுற்றியிருக்கிறேன். வழியில் பிரச்னை என நின்றது இல்லை.

மைலேஜ் கிங்

M80 வாங்கி சுமார் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வேறு பைக்காக இருந்திருந்தால், முதலில் கொடுத்த மைலேஜில் பாதிதான் கொடுக்கும் ஆனால், இது வாங்கிய புதிதில் லிட்டருக்கு 55-60 கி.மீ வரை தந்தது. இப்போது சுமார் 50 கி.மீ தருகிறது. மற்ற பைக்குகளில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றினால் நகராமல் திணரும். ஆனால், M80 அப்படி இல்லை. எவ்வளவு லோடு ஏற்றினாலும், எப்படி ஓட்டினாலும் திணறாமல் செல்வதுடன் சராசரி மைலேஜை அளிக்கும்.

பராமரிப்பு

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் சர்வீஸ் செய்ய வேண்டும். M80 ஸ்கூட்டரைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்தவர்கள்தான் இதை சர்வீஸ் செய்ய வேண்டும். அவர்களால்தான் ஸ்கூட்டரின் பிரச்னையை உடனே கண்டுபிடிக்க முடியும். இதற்காகவே M80 சர்வீஸ் செய்யும் சில மெக்கானிக்குகளைத் தெரிந்து வைத்திருக்கிறேன். உதிரி பாகங்கள் கிடைப்பதில்தான் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. அதையும் இப்போதெல்லாம் தேடிப் பிடித்து வாங்கிவிட முடிகிறது. விலைதான் கொஞ்சம் அதிகம். ஆனால், ஒரே ஒரு பிரச்னைதான். பஞ்சரானால் உடனே பார்க்க மாட்டார்கள். மற்ற பைக்குக்கு 50 ரூபாய் என்றால், இதற்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டும்.

இதை 22,000 ரூபாய்க்கு வாங்கினேன், அதைவிட அதிகமான விலை கொடுத்து வாங்க நெறைய பேர் வந்தார்கள். எனக்குத்தான் விற்க மனம் வரவில்லை. என் குடும்பத்தில் ஒன்றாக M80 மாறிவிட்டது.”