Published:Updated:

பஜாஜின் முதல் ரேஸ்!

பைக் ரேஸ்: பல்ஸர் சாம்பியன்ஷிப் ராகுல் சிவகுரு, படங்கள்: மீ.நிவேதன்

பிரீமியம் ஸ்டோரி
பஜாஜின் முதல் ரேஸ்!

ல்ஸர் ஸ்போர்ட்ஸ் பைக்கின் தயாரிப்பாளர் என இளைஞர்களால் அடையாளப்படுத்தப்படும் பஜாஜ் நிறுவனம், தனது உச்சபட்ச மாடலான RS200 பைக்கை வாங்கியவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, “Pulsar Festival of Speed” எனும் பெயரில் ரேஸ் போட்டிகளை நடத்தியது. மார்ச் 5 - ஏப்ரல் 3 வரை ஹைதராபாத், டெல்லி, மும்பை, புனே, பெங்களுர், சென்னை ஆகிய 6 நகரங்களில் முதற்கட்ட ரேஸ்களை நடத்திய பஜாஜ், ஒவ்வொரு நகரத்திலும் 42 பேரைத் தேர்வு செய்து, 7 ரேஸ்களை நடத்தி, அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 14 பேரை, 2 ரேஸ்கள் நடத்தி, அதில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களை கொண்டு, ஏப்ரல் 16 அன்று சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில்  இறுதிப் போட்டி நடத்தியது.

பஜாஜின் முதல் ரேஸ்!
பஜாஜின் முதல் ரேஸ்!

ஒரு நகரத்துக்கு 6 பேர் வீதம் மொத்தம் 36 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். அவர்களின் பயணச் செலவுகள், தங்குமிடம், ரேஸ் டிராக்கில் முறையாக பைக்கை ஓட்டுவதற்கான பயிற்சி, ரேஸ் ஓட்டுபவர்களின் பாதுகாப்புக்காக ரைடிங் ஜாக்கெட் ஆகியவற்றை பஜாஜ் நிறுவனம் வழங்கியது. 36 பேரை 3 பாகங்களாகப் பிரித்து, அவர்களிடையே 3 ரேஸ்களை நடத்தி, ஒவ்வொரு ரேஸிலும் முதல் 6 இடங்களைப் பிடித்தவர்கள், சாம்பியன்ஷிப் ரேஸில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஒரு பாகத்திற்கு 6 பேர் வீதம் மொத்தம் 18 பேர் இந்தப் போட்டியில் களம் கண்டனர். ரேஸில் பங்கேற்கும் பைக்குகளின் எடை குறைவாக இருந்தால்தான் அவை வேகமாகச் செல்ல முடியும் என்பதால், 36 RS200 பைக்குகளிலும் சில மாற்றங்கள் (டெயில் லைட், பின்பக்க நம்பர் ப்ளேட், பின்பக்க ஃபுட் ரெஸ்ட், பின்பக்க மட்கார்டு, ரியர்வியூ மிரர்கள், சாரி கார்டு ஆகியவை நீக்கம்) செய்யப்பட்டிருந்தன. பரபரப்பாக 12 சுற்றுகள் நடந்த இந்த ரேஸின் முடிவில், புனேவைச் சேர்ந்த சாத் கைபி முதல் இடத்தையும், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜோனாதன் ஜான்ஸன் இரண்டாவது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த யுவராஜ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பஜாஜின் முதல் ரேஸ்!

மேலும் மோட்டோக்ராஸ், ஸ்கேட் போர்டிங், டர்ட் டிராக் ரேஸிங், DJக்கள் மற்றும் பாடகர் பென்னி தயாலின் இசை நிகழ்ச்சி, பைக் ஸ்டன்ட் செய்வதில் இந்திய அளவில் புகழ்பெற்ற “Ghostryderz” அணியின் பைக் சாகசம் எனப் போட்டியைக் காண வந்தவர்களை உற்சாகப்படுத்த பல அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.

பல்ஸரில் ரேஸில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

 ** இதில் நுழைவுக் கட்டணம் கிடையாது. முன்பதிவு செய்வதில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

 ** நுழைவுச் சுற்றுப் போட்டியில் (Prelims) வெற்றி பெறுபவர்களுக்கு, புரொஃபஷனல் ரேஸ் டிரெய்னிங் கொடுக்கப்படும்.

 ** டிவிஎஸ், சுஸூகி, யமஹா ரேஸ்கள் மாதிரி பஜாஜ் ரேஸுக்குத் தனியாக ரேஸிங் லைசென்ஸ் தேவை இல்லை. எனவே, உங்களுக்கு ரேஸிங் அனுபவம் இல்லாமல் இருந்தாலும் ஓகே!

  ** சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்ச ரூபாய், இரண்டாவது இடத்துக்கு 50 ஆயிரம் ரூபாய், மூன்றாவது இடத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு.

  ** ரொம்ப முக்கியமான விஷயம், உங்களிடம் பல்ஸர் RS200 பைக்கும்  காஸ்ட்லி ஹெல்மெட்டும் இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு