Published:Updated:

எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?
எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?

ரீடர்ஸ் ரிப்போர்ட்: டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 தமிழ் படங்கள்: ஆ.முத்துக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?

‘‘டிஸைன் செமையா இருக்குல்ல? அப்பாச்சியில 200 சிசி வந்துடுச்சா? Fi, ஆயில் கூல்டு இன்ஜின்னு சொன்னாங்களே? மைலேஜ் எவ்வளவு?’’ - டெஸ்ட் டிரைவுக்காக வந்திருந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கை சாலையில் ஓட்டியபோது, இப்படிப்பட்ட விசாரிப்புகளைத் தவிர்க்க முடியவில்லை.

புதிய அப்பாச்சிக்கான ஃபர்ஸ்ட் டிரைவ், டெஸ்ட் ரிப்போர்ட் என்று எல்லாமே முடித்துவிட்ட நிலையில், ‘உங்களுக்கு அப்பாச்சி 200 பிடிச்சுருக்கானு பாருங்க’ என்று, ஒரு ஞாயிறு காலையில் யூத்துகளும் பெருசுகளுமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சென்னை மைதானத்தில் வெள்ளை நிற அப்பாச்சியை நிறுத்தினோம்.

எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?

‘‘அப்பாச்சிக்காக ஒருநாள் கிரிக்கெட்டைத் தியாகம் பண்ணலாம். தப்பே இல்லை!’’ என்று தாங்களாகவே முன்வந்து டெஸ்ட் செய்துவிட்டு, கிரிக்கெட் பேட்டும் கையுமாக உடனடி ரிப்போர்ட் கொடுத்தார்கள் வாசகர்கள்.

எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?

ட்டுமொத்த டிஸைன் அட்டகாசம். பல்ஸர் RS200 பைக்கைப்போல் ஃபுல் ஃபேரிங்கைக் கொண்டுவந்திருந்தால், என் சாய்ஸ் அப்பாச்சியாகத்தான் இருந்திருக்கும். DRL ஹெட்லைட் தெறி காட்டுகிறது. அப்பாச்சியில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் - கியர் இண்டிகேட்டர். பல்ஸர் RS200, CBR போன்ற பைக்குகளில் இது இல்லை. ஜிக்ஸர் போலவே, ஆன் செய்ததும் ‘கோ’ என்று டிஜிட்டல் டயல் காட்டுவது யூத்ஃபுல்! டேங்க் டிஸைன், ஓட்டும்போது வசதியாக இருக்கிறது. ஆனால், பைக்கின் ஃபைபர் குவாலிட்டி சுமார்தான். இது ரொம்ப நாள் உழைக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. இன்ஜின் பிக்-அப் அருமை. ஓட்டும்போது சுஸூகி இன்ஜின்போல் ஸ்மூத்தாக இருக்கிறது. ஸ்ப்ளிட் சீட்டுகள் டிஸைன் ஓகே. ஆனால், பின்னால் உட்கார்பவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், முன் பக்க சீட்டில் உட்கார்ந்த உடனே ஸ்டைலாக இருக்கிறது. அதாவது, ரைடிங் பொஸிஷன் சூப்பர். நான் 60 கி.மீ வேகம் வரைதான் சென்று வந்தேன். அதிர்வுகள் அவ்வளவாக இல்லை. அப்பாச்சி ஓகே!

எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?

நான் யூனிகார்ன் 150 வைத்திருக்கிறேன். அடுத்து 200 சிசி பைக்தான் வாங்கலாம் என்று இருக்கிறேன். சரியான நேரத்தில் எனக்கு டெஸ்ட் டிரைவுக்கு வந்திருக்கிறது அப்பாச்சி. பழைய அப்பாச்சி உயரம் குறைவானவர்கள் ஓட்டும் வகையில் ஈஸியாக இருந்தது. இதில், உயரம் அதிகமானவர்கள் மட்டும்தான் எளிதாகக் கையாள முடியும்போலத் தெரிகிறது. லேப் டைமர், டிஜிட்டல் வாட்ச், இரண்டு ட்ரிப் மீட்டர் என்று இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் எனக்குப் பிடித்திருக்கிறது. பைரலி டயர்கள் செம க்ரிப் தருகின்றன. இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்ஸ் இருப்பது நல்ல விஷயம். 100-க்கு மேல் போனாலும் நம்பிக்கையாகப் பயணிக்க முடிகிறது. ABS இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். Fi இன்ஜினில்தான் ABS வருகிறதாமே? கார்புரேட்டர் இன்ஜின் என்பதால், மெயின்டனென்ஸ் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் பைக் 45 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன் மைலேஜைப் பொறுத்து எனது தேர்வு இருக்கும்.

எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?

னக்கு நேக்கட் பைக்தான் பிடிக்கும். அந்த வகையில் ஸ்டைலான நேக்கட் அப்பாச்சிக்கு எனது லைக். ஸ்ப்ளிட் ஹேண்டில் பார்கள், எப்போதுமே ஸ்டைலான டிரைவிங் பொசிஷனைக் கொண்டுவந்துவிடும். இதிலும் அப்படித்தான்; உட்கார்ந்து ஓட்டும்போதே ஸ்டைலாக இருக்கிறது. ஆனால், என்னால் டிராஃபிக்கில் பைக்கை எளிதாகக் கையாள முடியவில்லை. எடை 148 கிலோ என்பது எனக்குப் பிரச்னை இல்லை. டர்னிங் ரேடியஸ் அதிகமாக இருக்கிறது. அதாவது, ஹேண்டில் பாரை குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் வளைக்க முடியவில்லை. இதனால் சட்டென யு-டர்ன் அடிப்பது, வளைவில் கட் அடிப்பது ரொம்ப சிரமமாக இருக்கிறது. எனக்கு இரண்டு தடவை ஜெர்க் ஆகிவிட்டது. நான் பழைய அப்பாச்சி ஓட்டியிருக்கிறேன். அதிலிருந்த அதிர்வுகள் இதில் அவ்வளவாக இல்லை. சூப்பர்! பஜாஜ், டிஸ்கவரில் எப்போதோ 4 வால்வ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால், இப்போதாவது அப்பாச்சியில் 4 வால்வ் டெக்னாலஜி வந்திருப்பது சந்தோஷமான விஷயம்.

எப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி?

டிஸைனில் கலக்குகிறது அப்பாச்சி. LED லைட்டுகள், சாவியை ஆன் செய்தாலே ஒளிர்வது... சாலையில் செல்லும்போது செம கெத்து. அதிர்வுகள் இல்லாத அப்பாச்சியை ஓட்டுவது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே 6 கியர் இருப்பதுதானே ஸ்பெஷல். அப்பாச்சியில் சாதாரண பைக்குகளில் இருப்பதுபோல் 5 கியர்கள்தான் இருக்கிறது. இன்ஜின் ஸ்மூத்னெஸ் அருமை. இதை எடுத்துக்கொண்டு மகாபலிபுரம் வரை ஆக்ஸிலரேட்டரை முறுக்க வேண்டும்போல் இருக்கிறது. ஆனால், சிட்டி டிராஃபிக்கில் கிளட்ச் ஹெவியாக இருப்பதுபோல் எனக்குத் தெரிகிறது. கியர் இண்டிகேட்டர், டிஜிட்டல் வாட்ச், இரண்டு பக்கமும் டிஸ்க், ஸ்ப்ளிட் ஹேண்டில் பார் என்று எல்லாமே எனக்குப் பிடித்திருக்கின்றன. பின் பக்க சீட்டுக்கு அடியில் டூல்கிட் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஜூபிட்டர் மாதிரி செல்போன் சார்ஜிங் பாயின்ட் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். 1.15 லட்சத்துக்கு அப்பாச்சி ஓகே! பல்ஸர்போல பிளாக் அண்டு ரெட் காம்பினேஷன் இருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு