‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது மனிதர்களுக்கு. ‘பைக்கின் திமிரு அதன் எக்ஸாஸ்ட்டில் தெரியும்’ - இது பைக்குகளுக்கு. ஒரு வாகனத்தின் எக்ஸாஸ்ட் சத்தம் - ‘என்னா சவுண்டு’ என்று ஹிப்னாடிஸமும் செய்யும்; ‘என்னடா சவுண்டு இது?’ என்று எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆனால், எக்ஸாஸ்ட் என்பது வாகனத்தின் பர்ஃபாமென்ஸுக்கு ‘Off the Screen’-ல் வேலை செய்யும் ஒரு முக்கியமான பாகம்.

ஓர் உடம்பு இருக்கிறது; அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு டயட், சாப்பாடு இருந்தால் மட்டும் போதாது. ‘வெளியேற்றம்’ சீராக நடக்க வேண்டும். அதேபோல்தான் வாகனங்களுக்கும். ‘எக்ஸாஸ்ட்’ என்பது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. இன்ஜினுக்கு உள்ளே நடக்கும் சண்டையில் உருவாகும் வாயுக்களைச் சரியாகப் பிடித்து, ஃபில்டர் செய்து வெளியே அனுப்பினால்தான், இன்ஜினுக்கும் பைக்குக்கும்... ஏன் நமக்கும்கூட ஆயுள் கெட்டியாக இருக்கும். ‘மஃப்ளர்’, ‘பைப்’ எனப் பெயர்கள்கொண்ட சைலன்ஸர் எனும் எக்ஸாஸ்ட் பற்றிப் பார்க்கலாம்.

எக்ஸாஸ்ட் என்றால் என்ன?

வெளியேற்றுவது என்று அர்த்தம். பைப் மூலமாக இந்த எக்ஸாஸ்ட் நடப்பதால், இதற்கு எக்ஸாஸ்ட் பைப் என்று பெயர். ஒரு பைக்கின் அழகு, இந்த சைலன்ஸரில்தான் தெரியும். அதாவது, எக்ஸாஸ்ட் பைப்பின் டிசைனிலேயே இந்த பைக் ஸ்போர்ட்டியானதா அல்லது கம்யூட்டிங் பைக்கா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். கேடிஎம் பைக்கின் எக்ஸாஸ்ட் பீட்டையும், ஸ்ப்ளெண்டர் பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தையும் கேட்டால், இது புரியும். சூடான காற்று வெளிவரும் ஏரியாவை கவர் செய்வதால், இதை மஃப்ளர் என்றும் சொல்கிறார்கள்.

எப்படி வேலை செய்கிறது?

அதிகமான சிசி, கன்னாபின்னா பவர், எக்கச்சக்க டார்க் என்று உங்கள் பைக்கின் பலம் அதிகமாக இருந்தாலும், எக்ஸாஸ்ட் சரியாக இல்லையென்றால், உங்கள் பைக்கின் பர்ஃபாமென்ஸ் பலவீனமாக மாறிவிடும்.

வெட்டவெளியில் ஒரு பொருள் தீப்பற்றி எரிந்தால் என்ன நடக்கும்? புகை கிளம்பும். வெட்டவெளி என்பதால், இந்தப் புகைக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. இதை நேரடியாகச் சுவாசிக்க முடியாது. இந்த இடத்தில்தான் சைலன்ஸரின் பங்கு மகத்தானது. இன்ஜின் சேம்பருக்குள் காற்று + எரிபொருள் கலவை எரியூட்டப்படும்போது ஏற்படும் புகை மற்றும் வாயுக்கள், உள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தால், இன்ஜின் குழம்பிவிடும். இவை வெளியேற்றப்பட்டால்தான் இன்ஜின் நிம்மதியாகத் தன் பணியைத் தொடர்ந்து செய்ய முடியும். அந்த வேலையைத்தான் எக்ஸாஸ்ட் செய்கிறது.

புகையை அப்படியே வெளியேற்றினால், வெட்டவெளிப்புகைபோல சுவாசச் சிக்கலை உண்டாக்கிவிடும். இது கொஞ்சம் க்ரிட்டிக்கலான விஷயம். எனவே, அதில் இருக்கும் நச்சுப் புகையை வடிகட்டிக்கொண்டு, ஓரளவு சுத்தமான காற்றை வெளியேற்ற வேண்டும். இது எக்ஸாஸ்ட் பைப்பில் உள்ள கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் செய்கிறது. எரியூட்டப்படும்போது வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு என்னும் கொடிய வாயுவை கார்பன் டை ஆக்ஸைடாக, அதாவது நாம் சுவாசித்தால் பிரச்னை ஏற்படாத அளவுக்கு கன்வெர்ட் செய்து வெளியேற்றுவதுதான் இந்த கேட்டலிட்டிக் கன்வெர்ட்டரின் வேலை. ஒரு பைக் - யூஸர் ஃப்ரண்ட்லியாகவும், நேச்சர் எனிமியாகவும் இருப்பது அந்த பைக்கின் சைலன்ஸரைப் பொறுத்தது. எனவே, ஆரோக்கியமான சைலன்ஸரில் இருந்து வரும் புகை, கெட்டது இல்லை!

எரிதல் தன்மை நடக்கும்போது உண்டாகும் வாயுக்கள், சின்ன டியூப்கள் மூலம் எக்ஸாஸ்ட்டை வந்தடையும். அங்கிருந்து இந்த வாயுக்கள் கேட்டலிக் கன்வெர்ட்டரை அடையும். அங்கே ஃபில்டர் செய்யப்பட்ட பிறகுதான் இது மஃப்ளர் வழியாக வெளியேறுகிறது. இங்கே இன்னொரு விஷயமும் நடக்கிறது. இந்த நேரத்தில் இன்ஜினுக்குள் ஏற்படும் அடிதடிச் சத்தத்தை சைலன்ட் ஆக்குவதும் சைலன்ஸர்தான். ‘அப்படி ஒண்ணும் தெரியலையே’ என்று சந்தேகிப்பவர்கள், உங்கள் பைக்கின் மஃப்ளரை எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து அகற்றிவிட்டுச் சோதிக்கலாம்.

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், பர்ஃபாமென்ஸுக்கும் எக்ஸாஸ்ட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்பதுதான். எக்ஸாஸ்ட் என்பது இன்ஜினுடன் சேர்ந்தே வேலை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது. டெக்னிக்கலாகவும் பிராக்டிக்கலாகவும் எக்ஸாஸ்ட் ரொம்ப அவசியம். எக்ஸாஸ்ட் இல்லாத இன்ஜினை நினைத்துப் பாருங்கள். தப்பான வழிகளில் காற்று உட்புகுந்து வெளியேறி... அதிக டெஸிபலில் காதுகள் பஞ்சராகி... இவை எல்லாவற்றையும் சரிசெய்வது எக்ஸாஸ்ட். நீங்கள் ஆக்ஸிலரேட்டரை முறுக்க முறுக்க எவ்வளவு காற்றை வெளிவிட வேண்டும் என்பதை முடிவு செய்வதும் எக்ஸாஸ்ட்தான்.

எக்ஸாஸ்ட் மாடிஃபிகேஷன் பண்ணலாமா?

சிலருக்கு பைக்கின் டிசைன், பர்ஃபாமென்ஸ், மைலேஜ் எல்லாமே பிடிக்கும். ஆனால், எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் மென்மையான சத்தம் பிடிக்காது. ‘சவுண்ட் தெறிக்க விடணும்’ என்று சில ஃப்ரீக்கி பார்ட்டிகள் விரும்புவார்கள். அவர்களை மையம்கொண்டே ஆஃப்டர் மார்க்கெட்டில் எக்ஸாஸ்ட்கள் தனி உதிரிபாகங்களாகக் கிடைக்கின்றன. அதிலும் ‘Slip on’ எனும் இரட்டை ஸ்போர்ட்டி சைலன்ஸர்கள்தான் இளசுகளின் சாய்ஸாக இருக்கிறது. எக்ஸாஸ்ட்டை மாற்றுவதால், ஏர் ஃப்ளோவுக்கான இடம் அதிகமாகிறது; இதனால் வாயு அதிகமாக வெளியேறி உங்கள் பைக்கின் பவர், பர்ஃபாமென்ஸ் கூடுகிறது என்பது உண்மைதான். பைக்கின் ஸ்போர்ட்டினெஸ் கூடி அனைவரும் உங்கள் பைக்கைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்பதும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதேநேரத்தில், உங்கள் பைக்கின் எடை கூடலாம்; BS-4 விதிமுறைகளைத் தாண்டி சத்தம் காதைப் பிளக்கலாம்; பைக்கின் சென்டர் ஆஃப் கிராவிட்டி மாறலாம்; மைலேஜ் நிச்சயம் குறையலாம் என்பதையும் மறக்காதீர்கள்.

இதற்காகவே சவுண்ட் இன்ஸுலேட்டர் கொண்ட எக்ஸாஸ்ட்களும் வந்துவிட்டன. சிலர் பைக் ஓட்டும்போது, கால்களில் இன்ஜின் வெப்பம் பரவுகிறது என்னும் குற்றச்சாட்டை வைப்பார்கள். அவர்கள், அதிகம் சூடு பரவாத மஃப்ளர்கள் மாட்டிக்கொள்வது பெஸ்ட்.எனவே, சைலன்ஸர் மாற்றுவது உங்கள் தேவை மற்றும் வசதியைப் பொறுத்தது.

எப்படிப் பராமரிப்பது?

சில பைக் ரைடர்கள், ‘இன்ஜின் நாய்ஸ் ஓவரா இருக்கு’ என்பார்கள். சோதனை செய்தால், அது எக்ஸாஸ்ட் அடைப்பாகக்கூட இருக்கலாம். எக்ஸாஸ்ட்டையும் அடிக்கடி கவனிப்பது ரொம்ப முக்கியம். இன்ஜினின் கடைசிக்கட்ட வேலை இங்கேதான் நடைபெறுகிறது என்பதால், பைப்புக்குள்ளே கார்பன் படிமங்கள் அதிகம் படிந்திருப்பதால், சத்தம் வரலாம். இதனால், பைக்கின் பவர் குறைய வாய்ப்பு உண்டு.

சில பைக்குகளில் இருந்து கறும்புகை வெளிவந்து, பின்னால் வருபவர்கள் முகத்தில் கரியை அள்ளிப் பூசும். இன்ஜின் சேம்பருக்குள் கம்பஸன் சரியாக நடக்காமல் வாயு சரியாக வெளியேறவில்லை என்று அர்த்தம். இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமில்லை; சைலன்ஸருக்கும் இன்ஜினுக்கும் ஆபத்து. இப்படிப்பட்ட பைக்குகளில் கார்பன் படிமங்கள் அதிகமாகப் படிந்து, பர்ஃபாமென்ஸ், பிக்-அப், மைலேஜ் என்று எல்லாமே காலியாகும் அபாயம் உண்டு.

தண்ணீர் நிறைந்த வெள்ளப் பகுதிகளில், சைலன்ஸருக்குள் தண்ணீர் புகாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காகத்தான் இப்போதுள்ள பைக்குகளில் எக்ஸாஸ்ட்டை உயரமாக வடிவமைத்துள்ளார்கள்.

2 ஸ்ட்ரோக் பைக்குகளில் யமஹா, சுஸூகி போன்ற பைக்குகளில் மட்டும்தான் எக்ஸாஸ்ட்டைக் கழற்றிச் சுத்தம் செய்யும் வசதி உண்டு. லேட்டஸ்ட் 4 ஸ்ட்ரோக் பைக்குகளில் இதற்கு வாய்ப்புக் குறைவு. ஆனால், சுத்தமாக வைத்திருக்கலாம். எனவே, ‘தம்பி, அடிக்கடி சைலன்ஸரையும் கவனி’ என்ற கொள்கையுடன் சர்வீஸின்போது சைலன்ஸரையும் சுத்தமாக வைத்து பைக்கை ஓட்டிப் பாருங்கள். பைக் ஓடாது; பறக்கும்!

சில பைக் ரைடர்கள்,

‘இன்ஜின் நாய்ஸ் ஓவரா இருக்கு’ என்பார்கள். சோதனை செய்தால், அது எக்ஸாஸ்ட் அடைப்பாகக்கூட இருக்கலாம். எக்ஸாஸ்ட்டையும் அடிக்கடி கவனிப்பது ரொம்ப முக்கியம்.