ஒரே நேரத்தில் அஜித் - சிம்பு என இருவரின் ரசிகையாகவும் இருக்கிறார் நிவேதா ஜெசிகா.

‘`சிம்புவே அஜித் ரசிகர்தானே... அப்புறமென்ன?’’ என அவர் சிரித்தாலும் அதன் பின்னணியில் ஒரு காரணமிருக்கிறது. சென்னைப் பெண் நிவேதாவுக்கு ரேஸர், ரைடர் என இருமுகங்கள். வார இறுதிநாள்களில் ரேஸ் டிராக்கில் சீறிப் பறக்கிறவர், ஆரவாரமில்லாத நாள்களில் அழகுச் சாலைகளில் ‘விண்ட் ஆன் மை ஃபேஸ்’ அனுபவத்துடன் சிலிர்த்துச் செல்கிறார்.

செயின்ட் பீட்டர்ஸ் இன்ஜினீயரிங் காலேஜில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்துக்கொண்டிருக்கிற நிவேதாவின் பேச்சிலும் அவரின் இரு துருவ ஆர்வங்களைப்போலவே, பரபரப்பும் பாசமும் பாதிப் பாதி.

‘`சைக்கிள் ஓட்டிப் பழகுற வயசுலேயே எனக்கு பைக் ஓட்டிப் பார்க்கிற ஆசை வந்திருச்சி. பத்தாவது படிக்கும்போது பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன். என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பசங்க பைக் வெச்சிருக்காங்க. அவங்க ஓட்டுறதைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம் அதிகமானது. முதல்ல கொஞ்ச நாளைக்கு வீட்டுக்குத் தெரியாம மெயின்டெயின் பண்ணிட்டிருந்தேன். ஒருநாள் நான் அப்பாச்சி ஓட்டுறதைப் பார்த்துட்டு அம்மா ஷாக் ஆகிட்டாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு அவங்களைச் சமாதானப்படுத்தினேன். சரி ரோட்டுலதான் ஓட்டுறானு அவங்க சமாதானமான டைம்ல, ரேஸிங் பண்ண ஆரம்பிச்சேன். அதை அவ்வளவு ஈஸியா சமாளிக்க முடியலை. இப்பவும் தினமும் திட்டு வாங்கிட்டுத்தான் ரேஸுக்கு பிராக்டிஸ் பண்றேன். ஒருநாள் என் சாதனைகளைப் பார்த்துட்டு சமாதானமாகிடுவாங்க!’’ - நிவேதாவிடம் நிஜமான நம்பிக்கை.

‘‘சும்மா ஜாலிக்காக பைக் ஓட்டிக்கிட்டிருந்த எனக்கு, சோஷியல் மீடியா மூலமா பைக் ரேஸ் பண்றவங்களைப் பற்றித் தெரியவந்தது. அப்படியே எனக்கும் ரேஸ்ல ஓட்டுற ஆர்வம் பத்திக்கிச்சு. டிவிஎஸ்ல ட்ரெயினிங் எடுத்துட்டு, இப்போ ஹோண்டாவுல ஓட்டிக்கிட்டிருக்கேன்.

2017 ஜூன்ல கோயம்புத்தூர் டிராக்ல ஓட்டினதுதான் என்னுடைய முதல் ரேஸ். ஹோண்டா ரேஸிங் இந்தியா சார்பா நடந்த அதுல நான் ஜெயிக்கலை, ஆனாலும், அந்த அனுபவம் எனக்கு நிறைய கத்துக்கொடுத்தது.ரேஸ் டிராக்ல இறங்கினதும் படபடப்பா இருக்கும். கை காலெல்லாம் உதறும். ஆனா, அதையெல்லாம் தாண்டி அது வேற லெவல் ஃபீலிங். வார்த்தைகள்ல விவரிக்க முடியாது. அதை ஃபீல் பண்ணணும்னா ஒருமுறையாவது நீங்க ரேஸ் பைக்ல ஏறி சீறிப் பறக்கணும்...’’ எனஅழைக்கிறவர், இப்போது ஹோண்டா சிபிஆர் 150 பைக் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

நிவேதாவுக்கு ரேஸின்மீது வெறி என்றால், ரைடிங் செய்வதில் காதல்.

‘‘ராயல் என்ஃபீல்டுல நான்தான் லீடு ரைடர். ராயல் என்ஃபீல்டு பைக்கை புரமோட் பண்றதுக்காக இந்தியாவுல உள்ள பல மாநிலங்களுக்கும் பைக் ரைடு நடத்துவாங்க. அதுல பத்து பதினஞ்சு ரைடர்ஸை நான்தான் லீடு பண்ணிக் கூட்டிட்டுப் போவேன். முதல் முதல்ல சென்னை டு ஏலகிரி ட்ரிப் போனபோதே ரைடிங் ரசிகையாயிட்டேன். ரேஸிங் பண்ணும்போது ஹார்ட் பீட் எக்குத்தப்பா எகிறும்னா, ரைடிங் பண்ணும்போது மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். ரைடிங்குக்கு வர்றவங்கள்ல பெரும்பாலும் பசங்கதான் அதிகமா இருப்பாங்க. ஒரு பெண்ணா அவங்க அத்தனை பேரையும் லீடு பண்ணிக் கூட்டிட்டுப் போற ஃபீல் செம கெத்தா இருக்கும். நிறைய ட்ரிப்புல பசங்களை மட்டும் நான் தனி ஒருத்தியா லீடு பண்ணிக் கூட்டிட்டுப் போயிருக்கேன். ஒருத்தர்கூட எனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வைத் தந்ததில்லை. அவ்வளவு அன்பா, அக்கறையா பார்த்துப்பாங்க.

ஊர் சுத்தறதுலேயும் பைக்ல பறக்கறதுலேயும் எனக்கு நிறைய ஆர்வமும் அனுபவமும் உண்டு. அந்த அடிப்படையிலதான் ராயல் என்ஃபீல்டுல வேலை கேட்டேன். கிடைச்சது. லீடு ரைடரா இருக்கிறது எவ்வளவு ஜாலியான விஷயமோ, அதே அளவு சவாலானதும்கூட. மாசத்துக்கு மூணு ரைடு போவோம். என்கூட பதினைந்திலிருந்து இருபது பேர் வரைக்கும் வருவாங்க. எந்த இடத்துக்குப் போறோம்கிறதைப் பொறுத்து ஒரு நாளா, ஒரு வாரமான்னு முடிவாகும்.

போகப்போற இடத்தோட ரூட்டை சரியா தெரிஞ்சு வெச்சிருக்கணும். இந்தியாவுல கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களைச் சேர்ந்த ரைடர்ஸும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ். அதனால, எங்கே போறதா இருந்தாலும் அவங்ககிட்ட உதவி கேட்பேன். எந்த ரூட் நல்லாருக்கும், எது பாதுகாப்பானதுன்னு எல்லாத் தகவல்களையும் சொல்லிடுவாங்க.

ரைடு போகும்போது பைக்குக்கும் பிரச்னை வரலாம்; ஓட்டுற நமக்கும் வரலாம். பைக்குக்குப் பிரச்னை வந்தா, பார்க்கிறதுக்காக எங்க கூடவே மெக்கானிக்கும் வருவாங்க. அதனால சமாளிச்சிடலாம். ஆனா, நமக்கு முடியாத டைம்ல அதை வெளியில காட்டிக்க முடியாது. அதுலேயும் குறிப்பா பீரியட்ஸ் டைம்ல ரைடு போறதுதான் பெரிய அவஸ்தை. வலியைச் சகிச்சுக்கிட்டு லாங் ரைடு போகணும். blessing in disguiseனு சொல்வாங்கல்ல. அந்த மாதிரி அந்த ரைடே எனக்கு வலிகளை மறக்கச் செய்கிற மருந்தாகவும் மாறிடும். பைக்ல ஏறிட்டா என் உலகமே வேற’’ - பெண் மனம் பகிர்பவரின் விருப்பமான பொழுதுபோக்கு சோலோ ரைடு.

‘‘எப்பல்லாம் தோணுதோ, யார்கிட்டயாவது பைக் வாங்கிட்டு சோலோ ரைடு கிளம்பிடுவேன். இயற்கையை ரசிச்சுக்கிட்டு ‘பறக்கும் ராசாளியே....’ பாடிக்கிட்டு பைக் ஓட்டுற சுகமே தனி’’ சிலாகிக்கிறார்.

அப்புறம்?

‘‘இந்தியாவின் முதல் மோட்டோ ஜிபி ரைடர் சரத்குமார்தான் என் ரோல் மாடல். அவர்கிட்டதான் இப்போ ட்ரெயினிங் எடுத்துக்கிட்டிருக்கேன். என்கிட்ட சொந்த பைக் இல்லை. ரேஸுக்கு முன்னாடி ஒருநாள் மட்டும்தான் எனக்கு பைக் கிடைக்கும். அன்னிக்கு மட்டும்தான் பிராக்டிஸ் பண்ண முடியும். ரேஸிங் பைக் வாங்கணும்னா லட்சக்கணக்குல செலவாகும். மிடில் கிளாஸ் குடும்பம். காலேஜ் படிப்புக்குச் செலவு பண்றதே பெரிய விஷயம். இப்போ காலேஜ் ஃபைனல் இயர். நிறைய படிக்கணும்ங்கிற ஆசை இருக்கு. ரைடிங்ல சம்பாதிக்கிற பணத்தை வெச்சுதான் படிக்கப்போறேன்.

2018-ல் ஆல் விமன் கேர்ள் ரைடர்ஸ் ட்ரிப் போகிற ஐடியா இருக்கு. என்னை நினைச்சுப் பயந்துக்கிட்டும் திட்டிக்கிட்டும் இருக்கிற அம்மா, அப்பாவுக்கு என் சாதனைகள் மூலமா பெருமை தேடித் தரணும்.’’ கனவுகளுடன் காத்திருக்கிறவருக்குக் காலம் கனியட்டும்.