Published:Updated:

சாலை இறங்கியது ராயல் என்ஃபீல்டு 650 சிசி ட்வின் பைக்... என்ன ஸ்பெஷல்?!

சாலை இறங்கியது ராயல் என்ஃபீல்டு 650 சிசி ட்வின் பைக்... என்ன ஸ்பெஷல்?!

மொத்தம் 6 வேரியன்ட்களில், இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் 650 பைக்குகளை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்த பைக்குகள், இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் டயர் பதிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

சாலை இறங்கியது ராயல் என்ஃபீல்டு 650 சிசி ட்வின் பைக்... என்ன ஸ்பெஷல்?!

மொத்தம் 6 வேரியன்ட்களில், இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் 650 பைக்குகளை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்த பைக்குகள், இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் டயர் பதிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

Published:Updated:
சாலை இறங்கியது ராயல் என்ஃபீல்டு 650 சிசி ட்வின் பைக்... என்ன ஸ்பெஷல்?!

இந்திய பைக் ஆர்வலர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்தத் தருணம் வந்துவிட்டது. ஆம், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள், அமெரிக்கச் சந்தையில் அறிமுகமாகிவிட்டன.  இந்த இரண்டு பைக்குகளைப் பற்றி ஏற்கெனவே பார்த்துவிட்டோம். என்றாலும், இன்னும் பலர் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாகவே இருக்கிறார்கள். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

டிசைன் மற்றும் எர்கனாமிக்ஸ்

இன்டர்செப்டர் 650, சிம்பிளான ரெட்ரோ டிசைனைக் கொண்டிருக்கிறது. தட்டையான சிங்கிள் பீஸ் Quilted சீட்டில், 2 பேர் வசதியாக உட்காரலாம். வழக்கமான சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் மற்றும் கொஞ்சம் பின்தள்ளி வைக்கப்பட்டிருக்கும் பெரிய Heel Plate உடனான ஃபுட் பெக்ஸ் ஆகியவை சேர்ந்து, சொகுசான ரைடிங் பொசிஷனை வழங்கலாம். 13.7 லிட்டர் பெட்ரோல் டேங்க், இந்த வகை பைக்குகளுக்குக் குறைவுதான்; மெக்கானிக்கலாக கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக்கும் இன்டர்செப்டர் 650 பைக்கும் ஒன்றுதான் என்றாலும், பெட்ரோல் டேங்க் (12.5 லிட்டர்) - ஹேண்டில்பார் (2 பீஸ்) - சீட் (கவுல் உடனான சீட்) - ஃபுட் பெக்ஸ் ஆகியவற்றில் மாற்றம் இருக்கிறது. முன்னே சொன்ன விஷயங்களால், இரண்டு பைக்கின் அகலம் - உயரம் - எடையில் சின்ன வித்தியாசம் உண்டு. (GT 650 - 198 கிலோ/Interceptor - 202 கிலோ). கறுப்பு மற்றும் க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய விண்ட் ஸ்க்ரீன், Bar End மிரர்கள், க்ராஷ் கார்டு, SaddleBag, S&S எக்ஸாஸ்ட் பைப், இன்ஜின் கார்டு என மொத்தம் 40 ஆக்ஸசரிஸ் இந்த பைக்குகளுக்குக் கிடைக்கின்றன. மற்றபடி இரண்டு பைக்குக்கும் 1,400மிமீ வீல்பேஸ், 174மிமீ கி.கிளியரன்ஸ், 804மிமீ சீட் உயரம் ஆகியவை ஒன்றுதான். ஃபிட் அண்டு ஃப்னிஷ் மற்றும் கட்டுமானத் தரம் விஷயத்தில், ராயல் என்ஃபீல்டின் வளர்ச்சியை இவை பிரதிபலிக்கின்றன.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

இந்த இரண்டு பைக்கிலும் இருப்பது, 47bhp மற்றும் 5.2kgm டார்க்கை வெளிப்படுத்தும் 648சிசி, பேரலல் ட்வின் இன்ஜின்; 8 வால்வ் - ஆயில் கூலர் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இது, ஸ்லிப்-அசிஸ்ட் க்ளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மொத்த டார்க்கில் ஏறக்குறைய 80% (அதாவது 4.16kgm) 2,500 ஆர்பிஎம்மிலேயே கிடைத்துவிடுவதால், இழுவைத் திறன் அசத்தலாக இருக்கலாம். 120-140 கிமீ வேகத்தில் க்ரூஸ் செய்வதும் சுலபம். மேலும் 7,250 ஆர்பிஎம்மில் மொத்த பவரும் வெளிப்படுவதால், RE வரலாற்றில் விரட்டி ஓட்டக்கூடிய இன்ஜினாகவும் (7,500 ஆர்பிஎம் ரெட்லைன்) இது இருக்கும். 160 கிமீ-க்கும் அதிகமான டாப் ஸ்பீடு மற்றும் 25.5 கிமீ மைலேஜ் (WMTC: World Motorcycle Test Cycle-படி) ஆகியவற்றை இந்த 650 சிசி பைக்குகள் தரும் எனத் தகவல்கள் வந்துள்ளன. V-ட்வின் இன்ஜினைப் போன்ற 270 டிகிரி Firing Order கொண்ட க்ராங்க்‌ஷாஃப்ட் இங்கே இருப்பதால், இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜினின் (பெரிய Bore மற்றும் சிறிய Stroke) எக்ஸாஸ்ட் சத்தம், தற்போதைய ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் போல இருக்காது. கூடவே அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் Counter Balancer ஷாஃப்ட் உள்ளது ப்ளஸ்.

ஓட்டுதல் அனுபவம்

Gabriel நிறுவனத்தின் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் செட்-அப் என்றால், Bosch டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான 320 மிமீ - 240மிமீ Bybre டிஸ்க்ஸ் பிரேக் அமைப்பு ஆகும்; இரண்டு பைக்கிலும் Pirelli நிறுவனத்தின் 100/90-18' மற்றும் 130/70-18' Phantom Sportscomp டயர்கள்தான் உள்ளன. அலுமினிய ஸ்போக் வீல்கள் என்பதால், இவை டியூப்லெஸ் மற்றும் ரேடியல் கட்டுமானத்தைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க Bonneville Salt Flats-ல் மாடிஃபை செய்யப்பட்ட கான்டினென்ட்டல் ஜிடி 650 பைக் 241 கிமீ வேகம் வரை சென்றது என்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த பைக்கின் ஓட்டுதல் அனுபவம் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 

இந்தியாவில் இதன் விலை என்ன?

மொத்தம் 6 வேரியன்ட்களில், இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்ட்டல் 650 பைக்குகளை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. $5,799 - $6,799 வெளிவந்திருக்கும் இந்த பைக்குகள், இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் டயர் பதிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதன் விலை கொஞ்சம் அதிகமாகத் தோன்றினாலும், அமெரிக்காவில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான க்ளாஸிக் 500 $5,500-க்கு விற்பனை செய்யப்படும்போது, இது கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக மாறிவிடுகிறது. சிம்பிளான டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தாலும், ஓட்டும் அனுபவத்தில் இந்த பைக் மாடர்ன் பைக்குகளுக்கு இணையாகவே இருக்கும். க்ளாசிக் மற்றும் தண்டர்பேர்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, 200-300 சிசி பைக்கிலிருந்து அப்கிரேட் ஆவதற்கு ஏற்ற சாய்ஸாக இவை மாறலாம். கடந்த ஆண்டில் மட்டும் 8.2 லட்சம் பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்த பைக்குகளுக்கான வரவேற்பு அதிரடியாகவே இருக்கலாம். 

Royal Enfield Interceptor 650 - USA/India Prices (1 USA Dollar= 72.68 Indian Rupee)

Standard - Rs 4.21 Lakhs ($5799)
Custom - Rs 4.36 Lakhs ($5999)
Chrome - Rs 4.72 Lakhs ($6499)

Royal Enfield Continental GT650 - USA/India Prices  (1 USA Dollar= 72.68 Indian Rupee)

Standard - Rs 4.36 Lakhs ($5999)
Custom - Rs 4.54 Lakhs ($6249)
Chrome - Rs 4.90 Lakhs ($6749)