Published:Updated:

ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!

ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200Rராகுல் சிவகுரு

ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200Rராகுல் சிவகுரு

Published:Updated:
ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!

CBZ, கரிஸ்மா, அச்சீவர், ஹங்க், CBZ எக்ஸ்ட்ரீம், கரிஸ்மா ZMR, இம்பல்ஸ் என ஹீரோ மோட்டோகார்ப் எவ்வளவு முயற்சி செய்தாலும், கம்யூட்டர் செக்மென்ட்டில் தான் பெற்ற அசுர வெற்றியை, பர்ஃபாமென்ஸ் செக்மென்ட்டில்  பெற முடியவில்லை. எனவே, தனது CBZ எக்ஸ்ட்ரீம் - எக்ஸ்ட்ரீம் - எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் ஆகியவற்றைத் தொடர்ந்து, இதே சீரிஸில் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை களமிறக்க முடிவெடுத்துள்ளது. இந்த பைக்கை, டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் அமைந்திருக்கும் புத் இன்டர்னேஷனல் சர்க்யூட்டில் நம்மை ஓட்டிப் பார்க்க அழைத்தது ஹீரோ மோட்டோகார்ப். நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான எக்ஸ்ட்ரீம் 200R, ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது?

ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!

டிசைன்

ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் 150சிசி எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட், டிசைனுக்குப் பெயர் பெற்றது அல்ல. அதனை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கும், அதிரடியான டிசைனைக் கொண்டிருக்கவில்லை. 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் ஷார்ப்பான Extension - கறுப்பு நிற இன்ஜின் கவுல் - டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் - 17 இன்ச் அலாய் வீல் - எக்ஸாஸ்ட் ஆகியவை புதிதாக இருந்தாலும், இந்த பைக்கின் ஹாலோஜன் ஹெட்லைட் - LED டெயில் லைட் - ஸ்ப்ளிட் கிராப் ரெயில், அப்படியே 150சிசி எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்டின் ஜெராக்ஸ்தான். அனலாக் - டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் தெளிவாக இருந்தாலும், கியர் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் மிஸ்ஸிங்.

மேலும் 150சிசி எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்டில் ஸ்ப்ளிட் சீட், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் இருக்கும் நிலையில், 200சிசி எக்ஸ்ட்ரீம் பைக்கில் இதை வழங்காதது ஏன் ஹீரோ? பைக்கின் பெயின்ட் தரம் - பாகங்களின் ஃபிட் அண்டு ஃப்னிஷ் - கட்டுமானத் தரம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கில் சுவிட்ச் உடனான சுவிட்ச்கள் புதிது; அதேபோல லோ பீம் - ஹை பீம் சுவிட்ச்சிலேயே பாஸ் லைட் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இடதுபுற சுவிட்ச்களுக்கு அருகில் சோக் லீவர் இருப்பது, பார்க்க நன்றாக இல்லை. சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் இருந்தாலும், அது பகல் நேரத்தில் அவ்வளவு தெளிவாக இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அதிரடியான டிசைனாக இல்லாவிட்டாலும், நீட்டாகக் காட்சியளிக்கிறது எக்ஸ்ட்ரீம் 200R.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள Square பாணியைக் (சரிசமமான Bore & Stroke) கொண்டிருக்கும் 149.2சிசி இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் OverSquare பாணியைக் (பெரிய Bore & சிறிய Stroke) கொண்டிருக்கும் 199.6 சிசி இன்ஜினைத் தயாரித்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். எனவே எதிர்பார்த்தபடியே, எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் பைக்கைவிட அதிகமான 18.4bhp பவர் மற்றும் 1.71kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது எக்ஸ்ட்ரீம் 200R. 2 வால்வ் - ஏர் கூல்டு - கார்புரேட்டர் - கிக் ஸ்டார்ட் செட்-அப்பைக் கொண்டுள்ள இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தவிர அதிர்வுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய கவுன்டர் பேலன்சர் ஷாஃப்ட் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். கரிஸ்மா போல, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை ஆப்ஷனலாக வழங்கியிருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!

150 சிசி எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் உடன் ஒப்பிடும்போது ஓகேதான். ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவுதான். ஐடிலிங் கொஞ்சம் கரகரவென இருந்தாலும், வேகத்தை அதிகரித்த பிறகு இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குகிறது. ஆரம்ப கட்ட மற்றும் மிதவேகப் பயன்பாட்டை மனதில் வைத்து இன்ஜின் டியூன் செய்யப்பட்டிருப்பது, பைக்கை ஓட்டும்போது புரிந்துகொள்ள முடிகிறது. BIC ரேஸ் டிராக்கில் 5 முதல் 15-ஆம் வளைவு வரையிலான பகுதியில்தான், நாங்கள் பைக் ஓட்ட அனுமதிக்கப்பட்டிருந்தோம். அதில் அதிகபட்சமாக 105 கி.மீ வேகம் வரைதான் செல்ல முடிந்தது. 5,000 முதல் 9,000 ஆர்பிஎம் வரையிலான பர்ஃபாமென்ஸ் அதிரடியாக இருப்பதுடன், இந்நேரத்தில் எக்ஸாஸ்ட் சத்தம் ரசிக்கும்படி அமைந்திருப்பது பெரிய ப்ளஸ். மேலும் லைட்டான கிளட்ச்சைப் பிடித்து, கியர்களை மாற்றுவது எளிதாக இருக்கிறது. 

ஓட்டுதல் அனுபவம்

எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இருக்கும் சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார், கச்சிதமான உயரத்தில் இருக்கிறது; ஃபுட் பெக்ஸ் கொஞ்சம் பின்னோக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், இதன் வெளிப்பாடாக சிறப்பான ரைடிங் பொசிஷன் கிடைத்துவிடுவது பெரிய ப்ளஸ். ஸ்டைலாகக் காட்சியளிக்கும் சிங்கிள் பீஸ் சீட்டின் குஷனிங் நன்றாக இருக்கிறது. நாம் பைக்கை ஓட்டியது ரேஸ் டிராக்கில் ஓட்டியதால், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் ஓட்டுதல் திறனை அறிய முடியவில்லை. ஆனால், பைக்கில் இருக்கும் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 7 விதமான அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன், நம் ஊர் சாலைகளைச் சமாளிக்கக் கூடிய திறனைக் கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. ஆக, சொகுசான சீட் - சிறப்பான சீட்டிங் பொசிஷன் - கச்சிதமான சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக, BIC-யில் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை ஓட்டுவது ஜாலியாகவே இருந்தது.

மேலும், பைக்கின் எடை 148 கிலோ என்றாலும், அது ரைடருக்குத் தெரியாதபடி, Diamond Type ஃப்ரேம் பார்த்துக்கொள்கிறது. இதனால் திருப்பங்களில் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை வளைத்து நெளித்து ஓட்ட முடிந்தது. 1338மிமீ வீல்பேஸ் குறைவாக இருந்தாலும், பைக்கின் நிலைத்தன்மை அசத்தலாக இருந்தது. முன்னே சொன்ன இரு அம்சங்களுக்கு, எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் இருக்கும் கிரிப்பான 17 இன்ச் MRF டியூப்லெஸ் டயர்கள் (முன்: 100/80; பின்: 130/70) கைகொடுக்கின்றன. இவை போட்டியாளர்களைவிட அகலமானவை என்பதுடன், பின்பக்க டயர் ரேடியல் கட்டுமானத்தைக் கொண்டிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். முன்பக்க 276மிமீ Nissin டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 220 மிமீ Nissin டிஸ்க் பிரேக் அமைப்பின் ரெஸ்பான்ஸ் மிக நன்றாக இருந்தது. அதுவும் முன்பக்க டிஸ்க் பிரேக்குக்கு, Steel Braided Hose மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டிருப்பது செம!

ஸ்போர்ட்டிங் பாதி... கம்யூட்டிங் மீதி!

சுருங்கச் சொல்வதென்றால், வியப்பில் ஆழ்த்திவிட்டது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R. ஆம், டெக்னிக்கல் விவரங்களைப் பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தாலும், ரேஸ் டிராக்கில் பைக்கை ஓட்டியபோது நல்ல அனுபவத்தையே தந்தது எக்ஸ்ட்ரீம் 200R.  4-வது அல்லது 5-வது கியரிலேயே ரேஸ் டிராக்கில் இந்த பைக்கை ஓட்ட முடிந்தது என்பதுடன், கைவசம் இருக்கும் பவரை வெளிப்படுத்தும் விதமும் மனநிறைவைத் தரும்படி அமைந்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, நகரத்தில் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கை ஓட்டுவது ஃபன்னாக இருக்கும்.

மேலும், அதிர்வுகளற்ற இன்ஜின் என்பதால், இந்த பைக்கில் நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வதும் நன்றாக இருக்கும். ஜூன் மாதத்தின் இறுதியில் விற்பனைக்கு வரப்போகும் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் ஆன்ரோடு விலை 1 லட்சத்திலிருந்து 1,10,000 ரூபாய்க்குள் நிர்ணயித்தால், 160-180சிசி பைக்குகளுக்குக் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் போட்டியாளர்கள், டிசைன் - தொழில்நுட்பம் - சிறப்பம்சங்கள் - இன்ஜின் திறன் ஆகியவற்றில் முற்றிலும் வேறு பரிமாணத்தில் இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism