Published:Updated:

“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”

“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”

எலெக்ட்ரிக் பைக்தமிழ், படங்கள்: விநாயக்ராம்

“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”

எலெக்ட்ரிக் பைக்தமிழ், படங்கள்: விநாயக்ராம்

Published:Updated:
“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”

சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 4.2 கோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாராகின்றன. நம் நாட்டில் ஆண்டுக்கு வெறும் 22,000 எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் தயாராகின்றன.

‘‘மார்க் மை வேர்ட்ஸ்... 2040-க்குள் பெட்ரோல்/டீசல் வாகனங்களே இல்லாத நிலைமை வரும். அப்போது சத்தமே இல்லாத சுத்தமான நாடாக இந்தியா மாறும்’’ என்கிறார் ஹேமலதா.

ஒவ்வோர் ஆண்டும் மே-11, தேசிய தொழில்நுட்ப தினத்தன்று ஹேமலதாவுக்கு டெல்லியில்தான் அப்பாயின்ட்மென்ட். குடியரசுத் தலைவர் அல்லது தொழில்நுட்ப அமைச்சர் என முக்கியப் புள்ளிகளின் முன்னிலையில் எலெக்ட்ரிக் அல்லது பேட்டரி சம்பந்தமான அறிமுகம் நடைபெறும். சென்ற ஆண்டு பிரணாப் முகர்ஜி தலைமையில் லித்தியம் ஐயன் பேட்டரியை அறிமுகப்படுத்தினார். இந்த ஆண்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், அதற்கான சார்ஜரை அறிமுகப்படுத்தினார்.

‘‘லித்தியம் ஐயன் பேட்டரி என்பது சாதாரண லெட் ஆசிட் பேட்டரியைவிட பல மடங்கு சிறப்பு வாய்ந்தது. எடை குறைவு, சார்ஜிங் நேரம் குறைவு, ரீ-சைக்கிளிங் திறன் என்று பல விஷயங்களில் லித்தியம் ஐயன் பேட்டரிதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குச் சரியான தேர்வு’’ என்கிறார் ஹேமலதா. ‘ஆம்பியர் வெஹிக்கிள்ஸ்’ என்று கூகுளில் சர்ச் செய்தால், ஹேமலதா குறித்த தகவல்கள் கொட்டுகிறது. ரியோ, மேக்னஸ், V60 என்று பேட்டரி ஸ்கூட்டர்களைத் தயார் செய்து, டூ-வீலர் மார்க்கெட்டை எலெக்ட்ரிக் மயமாக்குவதுதான் ஹேமலதாவின் லட்சியம்.

“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவை, சூளூர் கண்ணாம்பாளையத்தில் உள்ள ஆம்பியர் வெஹிக்கிள்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பரபரப்பாக இருந்தனர் R&D குழுவினர். அடுத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெஸ்ட்டிங் படுதீவிரமாக நடந்துகொண்டிருந்தது. நடுவே ஹேமலதாவுடன் உரையாடினேன்.

‘‘2007 நவம்பர் நானும் என் கணவரும் ஜப்பான் சென்றிருந்தோம். ‘பெட்ரோல் வாகனங்களின் காலம் முடியப் போகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் கோலோச்சும்’ என்பதற்கான சமிக்ஞைகளைப் பார்க்க முடிந்தது. அப்போது நாங்கள் செய்தது மென்பொருள் உற்பத்தி. ஏன் வன்பொருள் உற்பத்தியில் நுழையக் கூடாது என்கிற எண்ணம் அப்போதுதான் வந்தது. அதன் பிறகு, 2008-ல் ஆம்பியர் வெஹிக்கிள்ஸ் எனும் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்.’’

தனது ஆரம்ப காலத்தை அசைபோட்ட ஹேமலதாவிடம் இத்துறை சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் பற்றிக் கேட்டோம்.

‘‘இப்போதும் பேட்டரிகளை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான இன்ஃப்ரா ஸ்ட்ரக்ச்சர் இந்தியாவில் இல்லை. இது தவிர,  நம்முடைய சூழலில் வேறு சில சவால்களும் இருக்கின்றன.  10 ஆண்டுகளாகியும் 3 சக்கர வாகனத்துக்கான லைசென்ஸ் பாலிஸியை எங்களால் பெற முடியவில்லை. இதுதான் நம் தொழில் சூழல். இந்நிலை மாற வேண்டும்” என்றார்.

‘‘எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க ஏன் மக்கள் தயங்குகிறார்கள்?’’ என்ற நம்முடைய அடுத்த கேள்விக்கு அவரிடமிருந்து சட்டென்று விடை வந்தது.

“90 லட்சம் லிட்டர் பெட்ரோல் சேமித்திருக்கிறேன்!”

‘‘விழிப்பு உணர்வின்மைதான் காரணம். பெட்ரோல் ஸ்கூட்டர்களைவிட எலெக்ட்ரிக் வாகனங்கள் எல்லாவிதத்திலும் நன்மை என்பதை மக்கள் பொறுமையாகத்தான் புரிந்துகொள்வார்கள். ‘எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வேகம் 30-க்கு மேல் போகாது; எனவே, விபத்துக்கான சாத்தியங்கள் குறைவு. லைசென்ஸ் தேவையில்லை; ரோடு டாக்ஸ் இல்லை; இன்ஷூரன்ஸ் தேவையில்லை; ஆக்சஸரீஸ் அவசியமில்லை. அதனால், வீண் செலவு இல்லை; பராமரிப்புச் செலவு குறைவு. பெட்ரோல்/டீசல் விலைப் பிரச்னை இல்லை.  இந்தப் பத்து ஆண்டுகளில் நாங்கள் 90 லட்சம் லிட்டர் பெட்ரோலைச் சேகரித்திருக்கிறோம். அப்படியென்றால், வாழ்நாள் முழுதும் எவ்வளவு சேமிக்கலாம்?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள்,  சார்ஜிங் மட்டும்தான் செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களும், அதிக தூரம் பயணிப்பவர்களும் எப்படி சார்ஜிங் செய்வது என்பதில் பிரச்னைகள் உண்டுதான்.  மறுக்கவில்லை. ஆனால், நாளடைவில் இதற்கெல்லாம் தீர்வு பிறக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்யக் கற்றுக்கொண்டு விடுவோம். அது மட்டுமல்ல... விரைவில் ஊருக்கு ஊர் ஏராளமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் வரும். காபி ஷாப், ஓட்டல்களில்கூட எலெக்ட்ரிக் சார்ஜர்கள் வந்துவிடும். சாப்பிடும் நேரத்துக்குள் சார்ஜ் ஏற்றிக்கொண்டு கிளம்பும் தொழில்நுட்பமும் அப்போது கைகூடும். அந்தக் காலம் நிச்சயம் மலரும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism